மீன ராசிக்கு குவியும் சொத்துகள்.. அடுத்தடுத்த கிரக பெயர்ச்சியில் இப்படி ஒரு லாபமா?
2025 பெயர்ச்சி பலன்கள்: 2025 ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடம். இந்த வருடத்தில் சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி அடுத்தடுத்து நிகழ்கின்றன. அடுத்த இரண்டு மாதங்களில் இந்த மூன்று பெயர்ச்சிகளும் நடைபெற உள்ளன. இது மீன ராசிக்கு தரும் பொதுவான பலன்களை இந்த தொகுப்பில் காணலாம்.
குரு பகவான் வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். ராகு - கேது ஒன்றரை வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார்கள். சனி பகவான் சராசரியாக 2.25 வருடத்தில் இருந்து மூன்று வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். இந்த 2025 வருடத்தில் இந்த நான்கு கிரகங்களும் பெயர்ச்சி ஆகவுள்ளன.

மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். வருகிற மே மாதம் 14 ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதைத் தொடர்ந்து மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இது மீன ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை காணலாம்.
மீனம்: ஜென்ம ராசியில் இருந்து ராகு விலகவுள்ளார். மறுபக்கம் ஜென்ம ராசிக்குள் சனி பகவான் பெயர்ச்சி ஆகியுள்ளார். குரு பகவான் நான்காம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். இதேபோல கேது பகவான் ஆறாம் இடத்தில் பெயர்ச்சி ஆகப்போகிறார். இது மீன ராசியில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும். வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
வாய்ப்பு
ஜென்ம சனி என்பதால் பெரிதாக கவலைப்பட வேண்டாம். குரு பகவான் பத்தாம் இடத்தை பார்ப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் சமாளித்து முன்னேறுவீர்கள். கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். தொழிலும் சீராக இருக்கும். தெளிவாக திட்டமிட்டால் இருப்பதை தக்க வைத்துக் கொள்ளலாம்.
பொருளாதாரம்
பொருளாதாரம் நன்றாக இருக்கும். இந்த காலத்தில் உங்களின் சொந்த வீடு கனவு நிறைவேறும். வீடு, நிலம், நகை, வண்டி வாகனம் உள்ளிட்ட சொத்துகளை வாங்கிக் குவிக்கலாம். கல்வியில் கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை ஓரளவுக்கு சரியாகும். வெளியூர், வெளிநாடு வேலை வாய்ப்புகளுக்கு முயற்சி செய்வோருக்கு நல்ல செய்தி கிடைக்கும். அதனால் நல்ல பலன்களும் கிடைக்கும்.
திருமணம்
கேது பகவானால் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கடன்கள் கிடைக்கும். வம்பு, வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். திருமண தடைகள் விலகி திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.
கவனமாக இருக்க வேண்டிய இடங்கள்: பணிச்சுமை அதிகமாக இருக்கும். மனதில் எப்போதும் பதற்றம், படபடப்பு அதிகம் இருக்கும். தெளிவான முடிவு எடுக்க முடியாமல் சிரமப்படுவீர்கள். எதிலும் நிதானம் அவசியம். வீட்டில் உள்ள வயதானவர்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உறவுகளுக்குள் அவ்வப்போது மனஸ்தாபம் ஏற்படும்.
உங்கள் பிடிவாத குணத்தால் தேவையில்லாத பிரச்னைகள் வரலாம். எனவே பிடிவாத குணத்தை தவிர்க்க வேண்டும். குழப்பம் அதிகரிக்கும். மனதை ஒரு நிலையில் வைத்திருப்பது அவசியம். முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. தொழிலில் அகல கால் வைக்க கூடாது. புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு இது சரியான காலம் இல்லை.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications