சனிப்பெயர்ச்சி 2025: மீன ராசிக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டும்.. புது வீடு, வாகனம்னு ஜம்முனு வாழ்வீங்க
சனிப்பெயர்ச்சி 2025: மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சியானது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மீன ராசியினர் இந்த சனிப்பெயர்ச்சியில் எந்தவிதமான அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். இந்த சனிப்பெயர்ச்சியில் மீன ராசியினர் பெறும் பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு ராசியிலும் சனி பகவான் இரண்டரை வருடம் சஞ்சரிக்கிறார். அனைத்து ராசிகளையும் கடந்து வர கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகும். அந்த வகையில், மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மகர ராசியை விட்டு பெயர்ந்து கும்பத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், தற்போது சனி மீனத்துக்குப் பெயர்ச்சியாகிறார்.

மீன ராசிக்காரர்களுக்கு சனி ஜென்மத்தில் வரப் போகிறார், 12 ஆம் இடத்தில் ராகு வரப்போகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகள் எப்படி இருக்கப் போகிறது என்று மனதில் அச்ச உணர்வும் குழப்பமும் இருக்கும். அச்சப்படத் தேவையில்லை. ஜென்மத்தில் சனி வருவதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கால் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 4 ஆம் இடத்தில் குரு பகவான் போகிறார்.
ஜென்மத்தில் இருக்கும் சனியால் ஆரோக்கியம், சிகிச்சை முறை, அன்றாடம் இருக்கக்கூடிய விஷயங்களில், பல் சார்ந்த பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். 4 ஆம் இடத்தில் இருக்கும் குரு கூட பிறந்தவர்களால், பிள்ளைகளால் கோர்ட், வழக்கு என அலையக்கூடிய சூழ்நிலை உருவாகும். திருமண விஷயங்களில் யோகம் உண்டு. நீண்ட நாட்களாக திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும்.
மீனத்தில் இருக்கும் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் உங்களுடைய உறவினர்கள், நண்பர்களால் வேலை இடத்தில் பிரச்சனை ஏற்படக்கூடிய வாய்ப்புண்டு. பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு கேது பகவானின் சஞ்சாரம் 6 ஆம் இடத்தில் இருப்பதால் தோல் மற்றும் பல் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். அதேபோல, பண விஷயங்களில் ஏமாந்து போவதற்கான வாய்ப்பு உண்டு.
வெளியூர் செல்லும்போது பணம், நகைகள் களவு போவதற்கான வாய்ப்புள்ளது. ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு நிலம், பூமி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். 6 ஆம் இடத்தில் கேது, 12 ஆம் இடத்தில் ராகு இருப்பது தேவையில்லாத பயம், குடும்பம் பிள்ளைகளை நினைத்து தூக்கமின்மை உண்டாகும். அதிகளவிலான மன அழுத்தம் உண்டாகும்.
வெளியூர் பயணம் மேற்கொள்வது, ஆன்மிக விஷயங்களில் ஈடுபடுவது உங்களுக்கு மன அமைதியைத் தரும். மலைப் பிரதேசங்களுக்குச் செல்வது நல்லது. பழனிக்குச் சென்று முருகனை வழிபடுவது, திருப்பதி செல்வது நல்ல பலன்களைத் தரும். மன ஆறுதலைத் தரும். இந்த காலகட்டத்தில் குறிப்பாக செல்ல வேண்டிய கோயில் என்றால் கரூர் அருகில் இருக்கும் ஐயர் மலைக் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது. வருடத்தில் ஒரு முறையாவது இங்கு சென்று சிவனை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.
பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரம் செய்பவர்கள் தெரியாத நபர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. வீடு, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. தொழில் சார்ந்த வெளியூர் பயணம் யோகத்தை தரும். பிள்ளைகளுடன் வாக்குவாதம் இல்லாமல் இருப்பது நல்லது. சொத்துக்காக அவர்கள் உங்களை விட்டு பிரிந்து செல்வதற்கான வாய்ப்புள்ளது. பிள்ளைகளை அரவணைத்துச் செல்வது நல்லது.
திருமணம், வீடு, வாகனம், வண்டி, குழந்தைப் பேறு என அனைத்து விதமான செல்வங்களையும் அள்ளிக் கொடுப்பார். புதன்கிழமை தோறும் பெருமாள், கருட பகவானுக்கு தீபமேற்றுவது படிக்கும் பிள்ளைகளுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். ஹயக்ரீவர் வழிபாடு மறதியைத் தடுக்கும். ஜென்மத்தில் இருக்கும் சனி உங்களுக்கு அதிக அளவிலான நன்மையைக் கொடுப்பார். சனி பகவானுக்கு எள் தீபமேற்றி வழிபடுவது முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் கொடுக்கும்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications