சனிப்பெயர்ச்சி 2025: கோடீஸ்வர யோகத்தை பெறும் 4 ராசியினர் யார் தெரியுமா?.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா
சனிப்பெயர்ச்சி 2025: 2025 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதியன்று சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் சனி பகவான் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும் அள்ளித் தரப் போகிறார். கோடீஸ்வர யோகத்தை அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசியினர் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சனிப்பெயர்ச்சி 2025: மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சியானது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மீன ராசியினர் இந்த சனிப்பெயர்ச்சியில் எந்தவிதமான அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். இந்த சனிப்பெயர்ச்சியில் ராசியினர் பெறும் பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

நீதிக்காரகன், நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். பொதுவாக சனி பகவான் என்றாலே எல்லோருக்கும் அச்ச உணர்வு இருக்கும். ஆனால், சனி கிரகமானது நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்கைளையும் சமமாக கொடுக்கக் கூடியவராவார். வாழ்க்கையில் நமக்கு தேவையான அனைத்து படிப்பினைகளையும் ஏழரை சனி நடக்கும்போது நமக்கு சனி பகவான் கொடுப்பார்.
ஒன்பது கிரகங்களில் மிக வலிமையன கிரகம் என்றால் சனி பகவான் தான். ஒவ்வொரு ராசியிலும் சனி பகவான் இரண்டரை வருடம் சஞ்சரிக்கிறார். கிரகங்களில் ஒரு ராசியில் நீண்ட நாட்களாக இருக்கும் ஒரே கிரகம் சனி பகவான் மட்டும்தான். அனைத்து ராசிகளையும் கடந்து வர கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகும். அந்த வகையில், மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மகர ராசியை விட்டு பெயர்ந்து கும்பத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், தற்போது சனி மீனத்துக்குப் பெயர்ச்சியாகிறார்.
சனிப்பெயர்ச்சி என்றாலே எல்லோரும் பயப்படுவது வழக்கம். அனைத்து கிரகங்களுமே நன்மையையும் செய்யும், தீமையையும் செய்யும். அதேபோலத்தான் சனி பகவான் தீமையை மட்டுமே செய்பவர் அல்ல. நன்மையையும் அள்ளித் தரக் கூடியவர். நடக்கவுள்ள சனிப்பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகும். மீன ராசியில் அடுத்த இரண்டரை ஆண்டுகள் சனி பகவான் சஞ்சாரம் செய்யவுள்ளார்.
2025 ஆம் ஆண்டில் நடக்கும் சனிப்பெயர்ச்சியில் சனி பகவான் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும் அள்ளித் தரப் போகிறார். கோடீஸ்வர யோகத்தை அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசியினர் குறித்து பார்க்கலாம்.
ரிஷபம் (Sani peyarchi rishaba rasi palan): சனிப்பெயர்ச்சியில் கோடீஸ்வர யோகம் பெறும் முதல் ராசியாக ரிஷப ராசியினர் மற்றும் ரிஷப லக்னக்காரர்கள் தான். ரிஷப ராசியின் லாப ஸ்தானத்தில் சனி செல்வதால் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். லாப ஸ்தானத்தில் இரண்டரை வருடம் அமருவதால் உங்களுக்கு லாபத்திற்கும், பணத்திற்கும் குறைவிருக்காது. இதுவரை இழுபறியாக இருந்து வந்த கடன் தொகைகள் உங்களிடம் வந்து சேரும்.
தொழில் செய்பவர்களுக்கு லாபம் பத்து மடங்கு உயரும். தொழிலில் நல்ல வளர்ச்சியும், அசுர வளர்ச்சியையும் சனி பகவான் தருவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவி, சம்பள உயர்வு கிடைக்கும். அடுத்த இரண்டரை வருடம் நீங்கள் அனைத்து யோகங்களையும் பெறுவீர்கள். 11 ஆம் இடத்தில் சனி பகவான் வருவதால் ராஜயோக பலன்களை அனுபவிப்பீர்கள். திருமணத் தடைகள் நீங்கும். குடும்பம், தொழில், பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்
மிதுனம் (Sani peyarchi Midhunam rasi palan): மிதுன ராசி, மிதுன லக்னக்காரர்கள் கோடீஸ்வர யோகத்தைப் பெறப் போகிறார்கள். மிதுனத்துக்கு கர்ம ஸ்தானமான தொழில் ஸ்தானத்துக்கு சனி பகவான் வருகிறார். தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் வருவது சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும். தொழில் ஸ்தானத்தில் தீய கிரகம் இருந்தால் வெற்றியைப் பெற்றுத் தரும் என்பது விதி. எனவே, உங்களுக்கு அடுத்த இரண்டரை ஆண்டுகள் தொழில் ரீதியான எந்தவொரு விஷயத்தை கையில் எடுத்தாலும் அதில் வெற்றியைப் பெறுவீர்கள். கடின உழைப்புக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகம், தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வருமானத்துக்கும், பொருளாதார முன்னேற்றத்துக்கும் குறைவு இருக்காது. அனைத்துக் கடன்களையும் அடைத்து நிம்மதி அடைவீர்கள் வளமான காலமாக இருக்கும்.
கடகம் (Sani peyarchi Kadaga rasi palan): கடக ராசிக்காரர்களுக்கு பாக்கிய ஸ்தானத்தில் சனி வரப் போகிறார். அடுத்த இரண்டரை வருடத்துக்கு அனைத்து விதமான பாக்கியத்தையும் பெறுவீர்கள். முன் ஜென்மத்தில் செய்த நற்காரியங்களுக்கான பலனை தற்போது பெறுவீர்கள். கடக ராசிக்காரர்கள், லக்னக்காரர்களுக்கு எதாவது முயற்சி செய்தால் போதும் அதில் வெற்றியையும், லாபத்தையும் காண்பீர்கள். கர்மகாரகன் 30 வருடத்துக்குப் பிறகு சனி பகவான் அமருவதால் அபரிமிதமான பணத்தை அள்ளித் தருவார். 7 இல் சனி எத்தனை கஷ்டத்தை தந்ததோ அதைவிட நல்ல பலன்களை தற்போது தரப்போகிறார். மிகப்பெரிய உச்சத்தை அடைவீர்கள். தடைகளாலும், தாமதங்களாலும் படாத பட்ட நீங்கள் இனி எல்லாவற்றிலும் நல்ல பலனை அனுபவிக்கப் போகிறீர்கள். பொருளாதார தடைகள் நீங்கும்.
விருச்சிகம் (Sani peyarchi Viruchiga rasi palan): விருச்சிக ராசியைப் பொருத்தவரை சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5 ஆம் இடத்துக்குச் செல்கிறார். கடந்த இரண்டரை வருமடமாக அர்த்தாஷ்டம சனியால் அனைத்து விதமான துன்பங்களையும் சந்தித்து வந்திருப்பீர்கள். அர்த்தாஷ்டம சனி முடிவடைவதால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எடுத்த காரியங்களில் முன்னேற்றத்தையும், லாபத்தையும் காண்பீர்கள்.
நீண்ட காலமாக தொழில் தொடங்க நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டு யோகம் கைகூடி வரும். அடுத்த இரண்டரை வருடம் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான முடிவுகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இனி வரும் காலம் சிறப்பாக இருக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications