Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சி 2025: கும்பத்தை வச்சு செய்த ஜென்ம சனி..இழந்ததை பெறும் யோகம்.. வாழ்க்கையே மாறப்போகுது

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி 2025: மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சியானது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், கும்ப ராசியினர் இந்த சனிப்பெயர்ச்சியில் எந்தவிதமான அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். இந்த சனிப்பெயர்ச்சியில் கும்ப ராசியினர் பெறும் பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு ராசியிலும் சனி பகவான் இரண்டரை வருடம் சஞ்சரிக்கிறார். அனைத்து ராசிகளையும் கடந்து வர கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகும். அந்த வகையில், மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மகர ராசியை விட்டு பெயர்ந்து கும்பத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், தற்போது சனி மீனத்துக்குப் பெயர்ச்சியாகிறார்.

sani peyarchi 2025 Aquarius

கும்ப ராசிக்காரர்களை ஜென்ம சனி கடந்த இரண்டரை ஆண்டுகளாக படாத பாடு படுத்தியிருக்கும். பல மனக் கஷ்டங்களையும், சங்கடங்களையும் தந்திருக்கும். தற்போது இந்த சனிப்பெயர்ச்சியில் ஜென்ம சனி நீங்குவதால் அனைத்துப் பிரச்சனைகளில் இருந்தும் விலகுவீர்கள். பெரிய மனபாரம் உங்களுக்கு நீங்கும். சதயம், பூராட்டாதி நட்சத்திரக்காரர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் நீதிமன்றம், வழக்கு போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்திருப்பார்கள். சனிப்பெயர்ச்சியில் இந்தப் போராட்டம் உங்களுக்குத் தொடரும். சதயம் நட்சத்திரக்காரர்கள் உறவினர்கள், குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனக்கசப்புகள் வரும். பூராட்டாதி நட்சத்திரக்காரர்கள் அச்ச உணர்வுடனேயே இருப்பார்கள். அலுவலகத்தில் எதிரிகள் தொல்லை, பிரச்சனைகள், பொது வாழ்க்கையில் ஈடுபடுவோருக்கு அவமானங்கள் என பலவிதமான பிரச்சனைகளை அனுபவித்து வந்திருப்பீர்கள். ஜென்ம சனியில் இழந்ததை எல்லாம் இந்த சனிப்பெயரச்சியில் மீண்டும் பெறுவீர்கள்.

கேது சூரியன் வீட்டில் இருப்பதால் கணவன், மனைவிக்கிடையே புரிந்துகொள்ளும் தன்மை குறையும். கும்ப ராசிக்காரர்கள் அடுத்த ஒரு வருட காலத்துக்கு திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது. குரு பகவான் 5 ஆம் இடத்துக்குப் போவதால் அவருடைய பார்வை இருந்தாலும் ஜென்மத்தில் இருக்கும் ராகு, 2 ஆம் இடத்தில் இருக்கக்கூடிய சனி, 7 ஆம் இடத்தில் உள்ள கேது இருப்பதால் பிரச்சனை தான். உங்களுடைய ஜாதகத்தில் தசா புத்திகள் நன்றாக இருந்தால் திருமணம் செய்யலாம். அல்லது ஒரு வருட காலத்துக்கு காத்திருப்பது நல்லது.

கும்ப ராசியில் இருப்பவர்களுக்கு பொருளாதாரம் சூப்பர் என்று சொல்ல முடியாது என்றாலும் பரவாயில்லை என்கிற அளவுக்கு இருக்கும். கடன் பிரச்சனைகள் இருக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்கள் குறைந்த அளவில் கடன் வாங்குவது நல்லது. பிறரை நம்பி கடன் வாங்கி தொழில் செய்வது நல்லது இல்லை. அடுத்தவர்களின் வார்த்தையை நம்ப வேண்டாம். கூட்டுத் தொழில் வேண்டாம். தனியாக கடன் படுவதே நல்லது.

ஜென்மத்தில் இருக்கும் சனி பகவான் 2 ஆம் இடத்துக்குப் போவதால் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புள்ளது. சண்டை போட்டு சென்ற மகன், மகள்கள் திரும்பி வருவதற்கான வாய்ப்புள்ளது. ஈகோ பார்க்காமல் அவர்களை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வது நல்லது. நாள்பட்ட நோய், நீண்ட நாளாக இருந்து வந்த வழக்கு விசாரணைகளில் இருந்து விடுதலை அடைவீர்கள்.

பள்ளி மாணவர்கள் ஜென்ம சனியால் புத்தி மந்தம், சோம்பேறித்தனத்தை கொடுத்திருக்கும். சனிப்பெயர்ச்சி மாணவர்களுக்கு நல்ல மாற்றத்தை தரும். அவிட்ட நட்சத்திர பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத இடத்தில் கையெழுத்திடுவது, ஜாமீன் கையெழுத்து போடாமல் இருப்பது நல்லது.

சதயம் நட்சத்திரக்காரர்கள் பெற்றோருடன் சண்டை போட்டு வீட்டை விட்டு சென்றிருப்பீர்கள். குடும்பத்தில் பொறுமையுடன் இருப்பது நல்லது. பூராட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு எந்தவிதமான அச்சமும் வேண்டாம். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம், பிள்ளைகளால் ஏற்படக்கூடிய பிரச்சனை, அலுவலகத்தில் சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்சனை அனைத்தும் தீரும். ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமைதோறும் வெற்றிலை மாலை சாற்றுவது நல்லது.

மாதத்தில் ஒரு சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றுவது நல்லது. ஆனந்தமங்களத்தில் உள்ள தசபுத ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. அருகில் இருக்கும் ஆஞ்சநேயருக்கும் தீபமேற்றி வழிபட்டு, வெற்றிலை மாலை சாற்றுவது நல்ல பலன்களைத் தரும்.

பொருளாதாரத்தில் ஓரளவுக்கு வருமானம் வந்தாலும் கடன் தொல்லைகளும், பொருளாதார பற்றாக்குறைகளும் இருக்கத்தான் செய்யும். அடுத்த ஓராண்டுக்கு கடன் வாங்காமல் இருப்பது நல்லது. பெண்களுக்கு பிறந்த வீட்டால் லாபம், அதிர்ஷ்டம் வரும். அமாவாசை பெளர்ணமி காலங்களில் குலதெய்வ வழிபாடு சிறப்பான முன்னேற்றத்தை தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+