திருமண தடை நீக்கும் முருகப்பெருமான்...இந்த பரிகாரம் பண்ணுங்க கெட்டி மேளச்சத்தம் கேட்கும்
திருமண தடை நிறைய பேரை கஷ்டப்படுத்தும் நமக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்று பல ஆயிரம் பேர் ஏங்கித்தவிக்கின்றனர். திருமண தடை நீங்க சில பரிகாரங்கள் செய்தால் நிச்சயம் திருமணம் நடைபெறும்.
சென்னை: நல்ல வேலை, கை நிறைய சம்பளம் கிடைத்தாலும் சிலருக்கு திருமணம் எளிதில் நடைபெறாது ஏதாவது ஒரு தோஷம் இருந்து கொண்டுதான் இருக்கும். செவ்வாய் தோஷம், நாக தோஷம், காலசர்ப்ப தோஷம், களத்திர தோஷம் என பல தோஷங்கள் திருமண தடையை ஏற்படுத்தும் இந்த தடை நீங்க சில பரிகாரங்கள் செய்தால் தடை நீங்கி திருமணம் நடைபெறும்.
90 கிட்ஸ் சிங்கிள்ஸ் பலருக்கும் இப்போது வரன் கிடைப்பதில் நிறைய சிரமம் உள்ளது. ஆணோ, பெண்ணே கால காலத்தில் திருமணம் நடந்து வாரிசு வந்தால்தான் நிம்மதி சந்தோஷம் ஏற்படும். பெற்றவர்களுக்கும் ஒருவித மன அமைதி உண்டாகும் இல்லாவிட்டால் கோவில் கோவிலாக போய் பரிகாரம் செய்து கொண்டிருப்பார்கள்.

செவ்வாய் தோஷம் மிக கடுமையாக இருந்தால் பலருக்கும் திருமணம் நடைபெறாது. செவ்வாய்கிழமை முருகப்பெருமானை வணங்கி அகல் விளக்கேற்றி வழிபட்டால் தோஷ தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும். எந்த பரிகாரம் செய்தாலும் நம்பிக்கையோடு செய்தால் அதற்கு பலன் நிச்சயம் உண்டு.
ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் முருகன் கோவிலுக்கு சென்று அகல் விளக்கில் 6 தீபம் ஏற்ற வேண்டும். திருமணம் நிச்சயமாகி கல்யாணம் முடியும் வரை விளக்கேற்றுவதை நிறுத்தக்கூடாது.
வீட்டில் இரண்டு அகல்விளக்கு வாங்கி அதை பக்குவப்படுத்தி மஞ்சள் குங்குமம் வைத்து சிவப்பு திரி போட்டு நல்லெண்ணெய் ஊற்றி முருகன் படம் முன்பு வைத்து காலை 5 முதல் 6 மணிக்குள் விளக்கேற்ற வேண்டும். 48 நாட்கள் இந்த விளக்கு ஏற்றி திருமண தடை நீங்க வழிபட வேண்டும். அரளிப்பூ முருகன் படத்திற்கு வைக்க வேண்டும் அரளிப்பூ கிடைக்காதவர்கள் மல்லிகை பூக்கள் வைத்து வழிபடலாம்.
இந்த 48 நாட்களும் திருமணம் நடைபெற வேண்டும் புத்திர பாக்கியம் கிடைக்கவேண்டும் என்ற வேண்டுதலை தவறாமல் செய்ய வேண்டும். இதன் மூலம் திருமணம் ஆகாதவர்களுக்கு நிச்சயம் திருமணம் நடைபெறும்.
வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள செவ்வாய் பகவானை வழிபட்டு முத்துக்குமார சுவாமியை வணங்கி வர திருமணம் நடைபெறும். தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட திருமணம் கை கூடும்.
திருமண தடைகள் நீங்கவும், முந்தைய பிறவியில் செய்த பாவங்களை போக்கவும் ஹோமங்கள் செய்யலாம். திருமண தடை நீக்க பௌர்ணமியில் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் திருமண தடை நீங்கவும் தோஷங்கள் நீங்கவும் யாகங்களும், ஹோமங்களும் செய்யப்படுகின்றன. இதில் பங்கேற்று பலனடையலாம்.












Click it and Unblock the Notifications