செவ்வாய் பெயர்ச்சியால் 3 ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. தொழிலில் கொடிகட்டி பறக்கப் போறாங்க
செவ்வாய் பெயர்ச்சி: மிதுன ராசியில் வக்ர நிலையில் செல்லும் செவ்வாய் பகவானால் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தையும், தொழிலில் முன்னேற்றத்தையும் அனுபவிக்கப் போகிறார்கள். எந்த ராசியினர் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர் என்று தெரிந்து கொள்ளலாம்.
கிரகங்களுக்கெல்லாம் அதிபதியாகத் திகழ்பவர் செவ்வாய் பகவான். ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால் அந்த நபர் தைரியம், தன்னம்பிக்கை நிறைந்தவராக இருப்பார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்கு அதிபதியாகத் திகழ்பவர் செவ்வாய். தற்போது கடக ராசியில் செவ்வாய் பகவான் வக்ர நிலையில் பயணம் செய்து வருகிறார்.

நாளை முதல் அதாவது ஜனவரி 21 ஆம் தேதி செவ்வாய் வக்ர நிலையில் மிதுன ராசியில் நுழையவுள்ளார். வக்ர நிலையில் இருக்கும் செவ்வாயின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் காணப்படும். அசுப காரியங்களும், எதிர்மறையான தாக்கங்களும் அதிகளவில் நடக்கும். இருப்பினும் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலமாக இருக்கும்.
செவ்வாய் மிதுன ராசியில் செல்வதால் சில ராசிக்காரர்கள் தொழிலில் முன்னேற்றத்தையும், நல்ல பல பலன்களையும் அடையப் போகிறார்கள். மிதுன ராசிக்கு வக்ர நிலையில் செல்லும் செவ்வாய் பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
மேஷம்: மேஷ ராசியின் மூன்றாவது வீட்டிற்கு செவ்வாய் இடமாற்றம் அடைவதால் வேலை செய்யும் இடத்தில் நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்களுடைய ஆற்றல் மூலம் வேலையை உரிய நேரத்தில் செய்து முடித்து அதில் வெற்றியைக் காண்பீர்கள். உங்களுடைய கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். சேமிப்பு முதலீடுகளில் லாபத்தைக் காண்பீர்கள். பங்குச் சந்தை முதலீடுகளால் ஆதாயம் ஏற்படும். சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.
துலாம்: துலாம் ராசியின் ஒன்பதாவது வீட்டிற்கு செவ்வாய் பகவான் செல்லவுள்ளதால் உங்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வேலை தொடர்பாக வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் சூழல் ஏற்படும். ஏற்கனவே செய்து வைத்திருந்த முதலீடுகள் மூலமாக நிறைய லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். நிதி ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. தொழில் ரீதியாக சிறப்பான வளர்ச்சியைப் பெறுவீர்கள்.
கும்பம்: கும்ப ராசியின் ஐந்தாவது வீட்டிற்கு செவ்வாய் செல்வதால் உங்களுடைய காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். உங்களுடைய துணையை சீக்கிரமே சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். உங்களுடைய கடின உழைப்பாலும், ஆற்றலாலும் வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications