கடக ராசியினருக்கு பேச்சுதான் பிரச்சனையே.. அதிர்ஷ்டமும், துரதிர்ஷ்டமும் சேர்ந்து வருது.. ரொம்ப கவனம்
செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூன் மாதத்தில் நடைபெறும் செவ்வாய் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
செவ்வாய் என்பது நீதியை நிலைநாட்டக் கூடிய கிரகம். உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு சங்கடமான நிகழ்வுகளும் செவ்வாயால் தான் நடக்கும். எதிரிகள் தொல்லை, கொலை, கொள்ளை, வழக்கு போன்றவை நடப்பதற்கு காரணம் செவ்வாய் சாதகமற்ற சூழ்நிலையில் இருப்பதுதான். மனிதனுடைய வாழ்க்கையில் சிறைவாசத்தை நிர்ணயிப்பதும், வாகனத்தில் செல்லும்போது மற்றவர்களுடன் பிரச்சனை ஏற்படுத்துவதும் செவ்வாயே.

செவ்வாய் சில இடங்களில் விஷேசமான நற்பலன்களையும், பல இடங்களில் இருந்தால் கெடு பலன்களை ஏற்படுத்துவார். செவ்வாய் கடக ராசியில் நீச்ச ஸ்தானத்தில் இருந்து வெளியே வந்து சிம்ம ராசிக்கு வருகிறார். ஜூன் 6 முதல் ஜூலை 28 வரைக்கும் சிம்ம ராசியில் செவ்வாய் இருக்கப் போகிறார். ஜூலை 28 ஆம் தேதிக்கு கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாவதால் சனியின் நேர் பார்வையில் வருகிறார்.
இந்த காலகட்டத்தில் சில ராசிகளுக்கு வண்டி, வாகனங்கள் வகையில், அருவாமனை, கத்தியால் காய்கறிகளை நறுக்கும்போது கூட கவனமாக இருப்பது நல்லது. இந்த செவ்வாய் பெயர்ச்சி கடக ராசியினருக்கு என்னவிதமான பலன்களைக் கொடுக்கும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடக ராசி பலன்
கடக ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியில் நீச்சமாக இருந்து வந்தார் செவ்வாய். உங்களைப் பொருத்தவரை செவ்வாய் கெடாமல் இருப்பதுதான் நல்லது. உங்கள் ராசிக்கு செவ்வாய் கெட்டால் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்காது, நிதரந்த வேலை இருக்காது. கடந்த ஒன்றரை மாதமாக செவ்வாய் உங்களுக்கு நீச்சமாக இருந்ததால் அலுவலகத்தில், நண்பர்களிடத்தில், மனைவியிடம் எரிந்து விழுந்து கொண்டே இருந்திருப்பீர்கள்.
மாற்றம்
தாயின் ஆரோக்கிய விஷயத்தில் மருத்துவ ரீதியான உதவி கிடைத்திருக்கும். நிலம் சார்ந்த முதலீடுகளில் சிறு சிறு மாற்றங்களைச் செய்வீர்கள். பராமரிப்புச் செலவு, வண்டி வாகனம், உங்களுடைய ஆரோக்கியத்தில் மாற்றங்களை செய்திருப்பீர்கள். 2 ஆம் இடத்துக்கு செவ்வாய் போயிருப்பதால் நல்ல மாற்றங்களைக் கொடுக்கப் போகிறது.
வார்த்தையில் கவனம்
2 ஆம் இடத்தில் செவ்வாய் இருந்தால் குடும்பத்தில் தேவையில்லாத வார்த்தை விரையங்கள் ஏற்படும். ஆனால், இப்போது செவ்வாய் சூரியன் வீட்டிற்கு போயிருக்கிறார். சூரியன் செவ்வாய்க்கு நட்பு கிரகம் என்பதால் பெரிய கெடுதல்களைத் தர மாட்டார். தேவையற்ற விஷயங்களில் வார்த்தைகளை விடுவதை தவிர்ப்பது நல்லது. பேச்சில் மிகுந்த கவனம் தேவை.
குடும்பம்
5 ஆம் வீட்டு அதிபதியான செவ்வாய் 2 ஆம் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்தைப் பார்ப்பதன் மூலம் உங்கள் உடன்பிறப்புக்களுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் இருப்பது நல்லது. அண்ணன், தம்பி, அக்கா, தங்கையிடம் குதர்க்கமானப் பேச்சை தவிர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. 2 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால், 2 ஆம் வீட்டு அதிபதி ஜூலை 15 வரைக்கும் விரைய ஸ்தானத்தில் இருப்பார். வார்த்தை விரையங்களால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படும். அதுவும் உடன்பிறப்புகளுடன் பிரச்சனை உண்டாவதற்கான வாய்ப்புள்ளது.
அலுவலகம்
உங்கள் லெவலில் இருக்கும் சக ஊழியர்களிடம் தேவையில்லாத விமர்சனங்களை வைப்பதன் மூலமாக எதிரிகளை உருவாக்கிக் கொள்வதற்கும், உங்களுடைய கெளரவத்தை விட்டுக் கொடுப்பதற்கும் வாய்ப்புள்ளது. பெண்களைப் பொருத்தவரை பிள்ளைகள் நீங்கள் என்ன பேசினாலும் எரிந்து விழுந்து, சண்டை போடுவார்கள். ஆண்களைப் பொருத்தவரை நீங்கள் பேசும் வார்த்தைகள் அலுவலகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும்.
தொழில்
தொழில் செய்து வரும் நபர்களுக்கு அருமையான நேரமாக இருக்கும். ஆனால் சில ரகசியங்களை வெளிப்படுத்துவதால் பிரச்சனைகளை சந்திக்கும் சூழல் ஏற்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் நீங்கள் பேசும் வார்த்தைகளே உங்களுக்கு எதிரியாக திரும்பும் வாய்ப்புள்ளதால் பேச்சை தொழிலாக கொண்டவர்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் பிரச்சனையை சந்திப்பதற்கான வாய்ப்புள்ளது. வம்பு பேசாமல் இருப்பதே அற்புதத்தை ஏற்படுத்தும். வழக்கு விஷயங்களில் விலகி இருப்பது நல்லது.
-
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications