Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dhanusu: தனுசு ராசிக்கு டபுள் ஜாக்பாட்.. கூரையை பிச்சுகிட்டு கொட்டப் போகும் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

செவ்வாய் பெயர்ச்சி பலன்: 2026 ஜனவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 23 ஆம் தேதி வரையில் என 39 நாட்கள் செவ்வாய் மகரத்தில் உச்சமடைந்து சூரியன், சந்திரன் நட்சத்திரத்திலும், தனது சொந்த நட்சத்திரத்திலும் பயணித்து பலனளிக்கப் போகிறார். அந்த வகையில், இந்த செவ்வாய் பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

செவ்வாய் என்பது சகோதரனை குறிக்கக்கூடிய கிரகம். இடம், நிலம், வீடு, வண்டிக்கு சம்பந்தப்பட்ட கிரகம் செவ்வாய். விளையாட்டுத் துறை, மருத்துவர், சீருடைப் பணியாளர்கள், அதிகாரத்துக்குச் செல்ல என எல்லா விஷயங்களுக்கும் செவ்வாய் கிரகம் முக்கியமானதாகும். செவ்வாய் கிரகம் தற்போது மகர ராசியில் உச்சமடைந்து 30 நாட்கள் பலனைத் தரப்போகிறது. அந்த வகையில், இந்த செவ்வாய் பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

sevvai-peyarchi-what-kind-of-benefits-will-get-dhanusu-rasi-people-during-this-period

தனுசு ராசி பலன்

தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் 5 ஆம் இடத்துக்கு உரியவர், பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் அதிபதி. யோகத்தை தரக்கூடியவர். செவ்வாய் ராசிக்கு 2 ஆம் இடமான தன ஸ்தானத்தில் சூரியனுடன் சேர்ந்து அமர்ந்திருப்பதால் டபுள் ஜாக்பாட் உண்டாகும். நல்ல பாக்கியங்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். பூர்வ புண்ணியத்தை தரக்கூடிய காலகட்டம். பூர்வீகம் நன்றாக இருக்கும். பூர்வீகத்தை சென்று பார்க்கக்கூடிய அமைப்புள்ளது.

குலதெய்வ வழிபாடு

குலதெய்வத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும், ஆன்மீக காரியங்களைச் செய்வது போன்றவற்றை மேற்கொள்வீர்கள். ஆன்மீக எண்ணங்கள் ஏற்படும். உங்கள் குலதெய்வத்தை வழிபடுவீர்கள். பூர்வீகத்திற்குச் சென்று நல்ல செய்யும் எண்ணம் ஏற்படும். நினைத்தவை எல்லாம் நடந்தேறும் காலகட்டமாக இருக்கும். குலதெய்வ வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தைத் தரும். தொட்டது துலங்கும் யோகம் உண்டு. எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.

ஜாக்பாட் உறுதி

ஜாக்பாட் யோகம் உண்டு. பணம் இல்லாதவர்களுக்கு பணம் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்களை செய்யும் வாய்ப்புகள் வரும். நல்லவைகளை செய்யக்கூடிய அமைப்புள்ளது. திருமண யோகம் உண்டு. கணவன், மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி புரிந்து கொள்ளும் அமைப்புள்ளது. உங்களுக்குள் இருந்து வந்த அதிகார சண்டைகள் எல்லாம் நீங்கும். அதிகாரத் தோரணையில் பேசிவிட்டு வருத்தப்படுவீர்கள். பேச்சில் மிகுந்த நிதானமாக இருப்பது நல்லது.

முதலீடுகள்

பொருளாதாரத்தில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. குடும்பத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும், குடும்பத்தினர் ஒருங்கிணைந்து தொழில் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படும் நிறைய முதலீடுகளைச் செய்வீர்கள். 12 ஆம் இடம் என்பது வெளிநாடு. பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடு, வெளிமாநிலம் செல்லும் யோகம் உண்டாகும். தொழில், கல்வி, வியாபாரம் போன்ற வெளிநாடு தொடர்பான முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.

பதவி உயர்வு

வரும் 28 ஆம் தேதி வரை செவ்வாய் பகவான் உத்திராடம் நட்சத்திரத்தில் பயணிப்பதால் அற்புதமான யோகங்கள் கிடைக்கும். தொட்டது துலங்கும் யோகம் உண்டாகும். நிறைய பேருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். குரு உங்கள் லக்கினத்தைப் பார்ப்பதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. தந்தையால் பாக்கியங்கள் கிடைக்கும் யோகம் உண்டாகும். அரசாங்கத்தால் ஆதாயம் ஏற்படும். நிறைய பேருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.

மனக்குழப்பம்

போட்டி, பொறாமை ஒருபுறம் இருந்தாலும் அதிகாரத்திற்குச் செல்ல வேண்டும், செட்டிலாக வேண்டும் என்கிற எண்ணம் தோன்றும். மின்சாரம், மேலாண்மைத் தொடர்பான துறைகளில் ஏற்றம் ஏற்படும். பிப்ரவரி 14 ஆம் தேதி வரை திருவோணம் நட்சத்திரத்தில்செவ்வாய் பயணிப்பதால், நிறைய மனக் குழப்பங்கள், மன சஞ்சலங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எந்த விஷயத்தை செய்தாலும் யோசித்து செயல்படுவது நல்லது. இந்த இடத்திற்குச் சென்றால் அவமானம் ஏற்படும் என்று கருதினால் அங்கு செல்லாமல் இருப்பது நல்லது. காதல் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. குழந்தைகளிடம் கருத்து வேறுபாடுகள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.

குட்நியூஸ்

பிப்ரவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் அவிட்டம் நட்சத்திரத்தில் பயணிப்பது கூடுதல் சிறப்பாகும். விளையாட்டுத் துறை, சீருடைப் பணியாளர்கள், கட்டடம், ரியல் எஸ்டேட் துறையில் லாபம் பாக்கியம் கிடைக்கும். பதவி கிடைக்கும். நல்ல நல்ல விஷயங்களை கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். இன்ப அதிர்ச்சி தரக்கூடிய காலகட்டமாக இந்த நேரம் இருக்கும். இதனைப் பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+