"காசு பணம் துட்டு மணி மணி".. மகரத்துக்கு கொட்டி கொடுக்கும் செவ்வாய்.. ஆபத்து காத்திருக்கு ஜாக்கிரதை
செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூன் 7 ஆம் தேதி முதல் ஜூலை 28 ஆம் தேதி வரையிலான செவ்வாய் பெயர்ச்சி காலகட்டத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தின் நிலை பலமாக இருந்தால் வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றங்களை அடைவதற்கான வாய்ப்புள்ளது. செவ்வாய் என்பவர் காலபுருஷனுக்கு லக்னாதிபதி. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் முயற்சி வெற்றி அடைகிறதென்றால் அதற்கு முக்கிய பங்கு வகிப்பவர் செவ்வாய் பகவான். வெற்றிகளை குவிக்கக்கூடிய நாயகன்.

செவ்வாய் கிரகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அந்தப் பெயர்ச்சி பலனுக்குத் தகுந்தாற்போல் உங்கள் முயற்சிகள் இருக்கும். அதில் வெற்றி, தோல்வி அடைவதற்கு கண்டிப்பாக செவ்வாயால் தான் நிர்ணயிக்கப்படும். ஒரு விஷயத்தை அடைவதற்கு அதாவது தொழிலில், வேலையில், திருமணம் சார்ந்த விஷயங்களில், குழந்தை தொடர்பான விஷயங்கள் என அனைத்திற்கும் செவ்வாய் மிகவும் முக்கியம்.
அலுவலகத்தில் உயர் பதவி, உயர் அந்தஸ்து வருவதற்கு ஆளுமைத் திறன் மிக்க நபராக இருக்க வேண்டும். காலபுருஷனுக்கு லக்னாதிபதியாக செவ்வாய் பகவான் வருகிறார். செவ்வாயின் பெயர்ச்சி பலன்கள் மகர ராசிக்காரர்களுக்கு என்னென்ன மாற்றங்களைக் கொடுக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
மகர ராசி பலன்
அதிகமாக உழைக்கக்கூடிய நபர்களாகவும், உழைப்பை மூலதனமாகக் கொண்டவர்களாகவும் இருப்பவர்கள் மகர ராசியினர். உங்கள் ராசிக்கு 8 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் பெயர்ச்சி ஆகியுள்ளார். ஜூலை 28 ஆம் தேதி வரை 8 ஆம் இடத்தில் இருந்து உங்களுக்கு பெயர்ச்சி பலனைத் தரப் போகிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நிறைய நல்ல பலன்களும் உண்டு. சில விஷயங்களில் கவனமும் தேவை.
கவனம்
4, 11 ஆம் அதிபதியான செவ்வாய் 8 ஆம் இடத்துக்குப் போவதால் இந்த காலகட்டத்தில் நிறைய பேருக்கு இடம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வீடு, வண்டி, வாகனம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இடம் விற்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தள்ளிப்போடுவது நல்லது. அதனை விற்றாலும் குறைந்த விலைக்கே விற்கும் நிலை ஏற்படும்.
ஏமாற்றம்
நிறைய இழந்த மகர ராசிக்காரர்கள் இப்போது படிப்படியாக மீண்டும் வரும் காலகட்டமாக வரும். வீடு வாங்குவது, விற்பது, நிலம் வாங்குவது, விற்பது, வண்டி வாகனங்கள் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனங்களை மாற்றுவதை தவிர்ப்பது நல்லது. மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லையெனில் கண்டிப்பாக ஏமாற்றம் வருவதற்கான வாய்ப்புள்ளது. பாதுகாப்பாக இருப்பது நல்லது.
ஆரோக்கியம்
தாயின் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. வெளியூர், வெளிநாட்டில் இருந்தாலும் அவர்களுடைய உடல்நிலை குறித்து பார்த்துக் கொள்வது நல்லது. உங்களுடைய ஆரோக்கியத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. மருத்துவக் காப்பீடு போட்டுக் கொள்வது நல்லது.
திடீர் அதிர்ஷ்டம்
பணம் கொடுக்கல், வாங்கலில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. அதிக வட்டிக்கு வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். வங்கிக் கடன், தனிநபர் கூட வாங்கலாம். ஆனால் கந்துவட்டிக்கு கண்டிப்பாக வாங்காமல் இருப்பது நல்லது. 8 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பது திடீர் அதிர்ஷ்டம், யோகத்தைக் கொடுக்கும். வர வேண்டிய பணம் அனைத்தும் வந்து சேரும் காலகட்டமாக இருக்கும்.
பண வரவு
பங்குச் சந்தை, கிரிப்டோகரன்ஸி, வெளியில் சீட்டு போடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இந்த விஷயங்களைச் செய்தால் ஜூலை 28 ஆம் தேதிக்குள் பெரும் தோல்வியைச் சந்திப்பதற்கான வாய்ப்புள்ளது. செவ்வாய் ராசிக்கு 2 ஆம் இடத்தைப் பார்ப்பதால் பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. முதலீடு விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
யோகம்
வேலைமாற்றம் செய்பவர்களுக்கு யோகம் உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் செட்டிலாவதற்கான முயற்சிகள் செய்வது வெற்றியைத் தரும். வெளிநாட்டில் இடமாற்றம் செய்வது, வேலைமாற்றம் செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். தொழில் செய்பவர்கள் இருப்பதை அப்படியே செய்து கொண்டிருப்பது நல்லது. வருமானத்திற்கு தடை இருக்காது. ஆனால் ஏமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. முதலீட்டில் மட்டும் கவனம் தேவை.












Click it and Unblock the Notifications