82 நாட்களுக்கு அதிர்ஷ்ட காற்று.. மகரம் ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியில் சூப்பர் பலன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆங்கில புத்தாண்டு, தை மாதம் என அடுத்தடுத்த மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் செவ்வாயில் செவ்வாய் கிரக பெயர்ச்சியும் உள்ளது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த தொகுப்பில் செவ்வாய் கிரக பெயர்ச்சியால் மகர ராசிக்கு ஏற்படும் பலன்களை காணலாம்.

செவ்வாய் அமைப்பு சரியாக இருந்தால் ஆரோக்கியம், உத்யோகம் அமைப்பு நன்றாக இருக்கும். செவ்வாய் கடந்த அக்டோபர் மாதம் முதல் கடக ராசியில் நீச்ச ஸ்தானத்தில் வக்கிரமாக இருக்கிறார். அதனால் பாதிப்புகள் அதிகமாகவே இருந்திருக்கும். இந்நிலையில் செவ்வாய் வருகிற ஜனவரி 21 ஆம் தேதி பின்னோக்கி நகர்ந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஏப்ரல் 3 ஆம் தேதி வரை சுமார் 82 நாட்களுக்கு செவ்வாய் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். இது 12 ராசிகளுக்கும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது.

sevvai peyarchi makara 2025

மகர ராசிக்கு செவ்வாய் ஏழாம் இடத்தில் இருந்து ஆறாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். எதிரிகளை வீழ்த்துவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கடன் பிரச்னைகள் நீங்கும். உங்களுக்கு நீண்ட நாட்களாக இருந்த பல தொல்லைகள் நீங்கும். இப்படி செவ்வாய் பெயர்ச்சியால் பல நல்ல பலன்கள் கிடைக்கவுள்ளன.

ஐந்தாம் இடத்தில் உள்ள குரு மே மாதம் தான் பெயர்ச்சி ஆகவுள்ளார். அதற்குள் உங்களுக்கு பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவார். பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்கிர நிவர்த்தியடைகிறார். மார்ச் 29 ஆம் தேதி சனியின் பார்வையில் குரு வரவுள்ளார். உங்களின் குழந்தைகள், உடன்பிறப்புகளிடம் நல்ல மாற்றம் இருக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். கணவன் – மனைவி இடையே இருந்த பிரச்னைகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். இந்த காலத்தில் நீங்கள் எதிர்பார்த்த, எதிர்பாராத பல பலன்கள் கிடைக்கப் போகிறது. புயல் காற்று போல அதிர்ஷ்ட காற்று உங்கள் வாழ்க்கையை புரட்டி போடப் போகிறது. நேர்மறையாக பல விஷயங்கள் நடக்கும்.

ஆரோக்கியத்தில் இருந்த சிரமங்கள் முற்றிலும் நிவர்த்தியாகும். கடந்த காலங்களில் பெரும் தொல்வையாக இருந்த மறைவு ஸ்தான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். மகர ராசி இளைய தலைமுறையினர் பலர் குழந்தை பாக்கியத்துக்காக நீண்ட காலமாக தவம் கிடப்பார்கள். அவர்களுக்கு இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.


பெண்கள் பிசிஓடி மாதிரியான நோயில் இருந்து விடுபடுவார்கள். நிலம் சார்ந்த தொழில், வியாபாரிகள், அரசியல், கலைத்துறை ஆகியோருக்கு எதிரிகள் மறைவார்கள். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பண வரவு இருக்கும். நீண்ட கால முதலீடு வருவதற்கான வாய்ப்பும் நன்றாக உள்ளது.


நான்காம் வீட்டு அதிபதி ஆறாம் வீட்டுக்கு செல்வதால் நிலம் சார்ந்த வழக்குகள், பூர்விக சொத்து சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இதன் காரணமாக உங்களின் நீண்டகால கனவுகள் நிறைவேறும். உத்யோகத்தில் உங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகி நன்மைகள் கிடைக்கும்.

அரசாங்கம் பணியில் உள்ளவர்கள், பங்குச்சந்தையில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பண வரவால் மனம் நிம்மதி அடையும். நீண்ட கால கவலைகள் நீங்கும். இந்த பலன்களை கூடுதலாக பெற ஆஞ்சிநேயர் வழிபாடு உதவியாக இருக்கும். அனுமன் சாலிசா படிப்பதால் மனம் நிம்மதியடையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+