வார்த்தையால் வில்லங்கம்.. துலாம் ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சி கொடுக்கும் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தை மாதத்தில் நடைபெறவுள்ள செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒவ்வொரு கிரகத்தின் பெயர்ச்சியும் ஒவ்வொரு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த தொகுப்பில் செவ்வாய் கிரகம் பெயர்ச்சியால் துலாம் ராசிக்கு ஏற்படும் பலன்களை காணலாம்.

பொதுவாக செவ்வாய் 3, 6, 11 ஆம் இடங்களில் இருக்கும்போது நற்பயன்களை கொடுப்பார். பத்தாம் இடத்தில் சுமாரான பலன்களையும், 1,2,4,5,7,8,9,12 ஆகிய இடங்களில் இருக்கும்போது சற்று பின்னடைவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. செவ்வாயுடன் சந்திரனுடன் நேர்பார்வை வரும்போதும், செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசியில் பயணிக்கும்போதும் நீட்ச பங்கம் பலன் கிடைக்கும்.

sevvai peyarchi thulam 2025

செவ்வாய் கடந்த அக்டோபர் மாதம் முதல் கடக ராசியில் நீச்ச ஸ்தானத்தில் வக்கிரமாக இருக்கிறார். அதனால் பாதிப்புகள் அதிகமாகவே இருந்திருக்கும். இந்நிலையில் செவ்வாய் வருகிற ஜனவரி 21 ஆம் தேதி பின்னோக்கி நகர்ந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஏப்ரல் 3 ஆம் தேதி வரை சுமார் 82 நாட்களுக்கு செவ்வாய் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். இது 12 ராசிகளுக்கும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது.

துலாம் ராசிக்கு செவ்வாய் பத்தாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடத்துக்கு செல்லவுள்ளார். வழக்கு சார்ந்த விஷயங்களின் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வரும். ஆனால் அதற்கு சற்று அதிகமான உழைப்பை செலுத்த வேண்டியிருக்கும். ராணுவம், கப்பல் படை, விமானப்படை, காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோருக்கு பணியிடம் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. அது நல்லவிதமான மாற்றமாக உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

வியாபாரம் மற்றும் தொழிலில் அதிக அலைச்சல் ஏற்படும். இரும்பு, நெருப்பு ஆகியவற்றில் உற்பத்தி சம்பந்தப்பட்ட தொழில்களில் இருப்போருக்கு கூடுதல் அலைச்சல் இருக்கும். இரண்டாம் வீட்டு அதிபதி எதிரியின் (புதன் கிரகம்) வீட்டில் அமர்வதால் உங்களுக்கு வருமானம் வருவது தாமதம் ஏற்படும்.

ஒன்பதாம் இடத்துக்கும், ஐந்தாம் இடத்துக்கும் சம்பந்தம் உள்ளது. ஏழாம் வீட்டு அதிபதியான செவ்வாய் தற்போது ஒன்பதாம் வீட்டுக்கு சென்றுள்ளார். தந்தையின் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் வளர்ப்பு சார்ந்த விஷயங்களிலும் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. அதனால் இந்த இரண்டிலும் லேசான தடுமாற்றம் ஏற்படும்.

உடன் பணியாற்றுவோர் உங்கள் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை முன் வைப்பார்கள். எனவே அலுவலகத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதனால் சற்று பொறுமையுடன் இருப்பது பல பிரச்னைகளை தவிர்க்கும். இரண்டாம் வீட்டு அதிபதி ஒன்பதாம் இடத்துக்கு செல்வதால் பேச்சில் நிதானம் தேவை. சில நேரம் உங்கள் பேச்சு சுற்றியிருப்போருக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம்.

எடுத்தெறிந்து பேசுவதால் உறவுகள் பகைவர்களாக மாறும் வாய்ப்புள்ளது. உடன்பிறப்புகள், சகோதர உறவுகளுடன் மனஸ்தாபம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. முக்கியமாக உங்கள் இளைய சகோதரர சகாதரிகளுடன் கருத்து மோதல் ஏற்படுவதற்கான சூழலும் இருக்கிறது. அப்போது உங்கள் தாய், தந்தையின் ஆதரவும் உங்களுக்கு பெரியளவுக்கு இருக்காது.

உங்களின் தவறான வார்த்தை பிரயோகத்தால் எதிரிகள் தானாக உருவார்கள். உங்கள் எதிரிகளுக்கு பழைய பாக்கியை செலுத்துவீர்கள். எதிரிகளுக்கு உங்கள் மூலம் வருவாய் கிடைக்கும். பணியிடம், குடும்பம் ஆகிய இரண்டு இடங்களிலும் பொறுமையாக இருப்பது நல்லது. வாழ்க்கை துணையுடனும் பொறுமையாக இருக்க வேண்டும்.

இரண்டாம் வீட்டு அதிபதி வக்கிர நிலையில் இருப்பதால் தவறான, அதிகார தொனியில் வார்த்தைகளில் வெளிப்படும். இந்த காலத்தில் பின்னடைவை தவிர்க்க பொறுமையாக இருப்பது மட்டுமே தீர்வு. வீண் பிரச்னைகளை தவிர்ப்பதற்கு முன்னோர் வழிபாடு, அவர்களுக்கு திதியை சரியாக செய்வது ஆகியவற்றை செய்ய வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+