செவ்வாய் பெயர்ச்சி 2025: கடக ராசிக்கு காத்திருக்கும் சவால்.. என்ன பாதிப்புகள் ஏற்படும்?
சென்னை: தை மாதத்தில் செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி இருக்கிறது. ஒவ்வொரு கிரகத்தின் பெயர்ச்சியும் ஒவ்வொரு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் கிரக பெயர்ச்சியால் கடகம் ராசிக்கு ஏற்படும் பலன்களை இந்த தொகுப்பில் காணலாம்.
செவ்வாய் அமைப்பு சரியாக இருந்தால் ஆரோக்கியம், உத்யோகம் அமைப்பு நன்றாக இருக்கும். செவ்வாய் 3, 6, 11 ஆம் இடங்களில் நற்பயன்களை கொடுப்பார். பத்தாம் இடத்தில் சுமாராகவும் 1,2,4,5,7,8,9,12 ஆகிய இடங்களில் செவ்வாய் வந்தால் சற்று பின்னடைவு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

செவ்வாயுடன் சனி சம்பந்தப்பட்டால் உலகளவு பேரழிவு ஏற்படும். செவ்வாயுடன் சந்திரனுடன் நேர்பார்வை வரும்போதும், செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிகம் ராசியில் பயணிக்கும்போது நீட்ச பங்கம் பலன் கிடைக்கும். இந்நிலையில் செவ்வாய் கடந்த அக்டோபர் மாதம் முதல் கடகம் ராசியில் நீட்ச ஸ்தானத்தில் வக்கிரமாக இருக்கிறார்.
அதனால் பாதிப்புகள் அதிகமாகவே இருக்கும். செவ்வாய் ஜனவரி 21 ஆம் தேதி பின்னோக்கி நகர்ந்து மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஏப்ரல் 3 ஆம் தேதி வரை சுமார் 82 நாட்களுக்கு செவ்வாய் மிதுனம் ராசியில் இருக்கப் போகிறார். இது 12 ராசிகளுக்கும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது.
கடகம் ராசிக்கு உங்களின் யோகாதிபாதி எனப்படும் செவ்வாய் உங்கள் ராசியிலேயே நீட்சத்தில் இருக்கிறார். இவர் பின்னோக்கி நகர்வதால் தூக்கத்தை கெடுப்பது போன்ற நிலை ஏற்படும். ஆரோக்கியம் மற்றும் வழக்கு சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கடந்த நவம்பர் மாதத்துக்கு முன்பு வரை உங்கள் எதிராளிகளின் நகர்வு தெரியாமல் இருந்திருக்கும்.
தற்போது உங்களுக்கு வியாபாரம், தொழில், பதவி சார்ந்த விஷயங்களில் தீர்வுக்காக எதிர்பார்த்து காத்திருப்பீர்கள். இதனால் பயம், பதற்றம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எதிரிகள் உங்களை தோற்கடிக்க மறைமுகமாக பல ரூபங்களில் சதித்திட்டம் தீட்டுவார்கள். அதனால் நீங்கள் சமயோஜிதமாக செயல்பட வேண்டும்.
அப்போதுதான் அவர்களின் திட்டங்களை முறியடிக்க முடியும். இந்த காலகட்டத்தில் பதற்றம் சற்று அதிகமாகவே இருக்கும். இருப்பினும் செவ்வாய் மூன்றாம் இடத்தை பார்க்கிறார். பொதுவாக செவ்வாய் பார்வை மூன்றாம் இடத்தில் இருந்தால் வெற்றி கிடைக்கும். அதனால் எடுத்த காரியத்தில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். ஆனால் அந்த வெற்றிக்கு நிறைய கடின உழைப்பை செலுத்த வேண்டும்.
காரியம் நிறைவேறுமா.. நிறைவேறாதா என்ற பதற்றத்திலேயே பரபரப்பாக செல்லும். அதில் கவலையாகி சோர்வடைந்து விடக்கூடாது. அப்போது பொறுமை மிகவும் அவசியம். சற்று பொறுமையை இழந்தாலும் தடுமாற்றம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தை மட்டுமல்லாமல் ஆறாம் இடத்தையும் பார்க்கிறார்.
அதனால் வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான தீர்ப்பு வரும் வரை பதற்றத்திலேயே வைத்திருப்பார். நெருப்பு சார்ந்த தொழிலில் உள்ளவர்கள், தங்கம், வெள்ளி, வைர நகை ஆசாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும். வருமானம் நன்றாக இருந்தாலும் பொருள்களின் மீது கவனமாக இருக்க வேண்டும்.
அரசாங்கம், அரசுப் பதவிகளில் இருப்போருக்கு வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்புள்ளது. தூக்கம் குறையும். அதேநேரத்தில் வெளிநாடு பயணம் முயற்சி நல்லபடியாக நிறைவேறுவதற்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். இந்த காலகட்டத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். குடும்பத்திலும் நிறைய பிரச்னைகளால் நிம்மதி பாதிக்கப்படும்.
ஆனால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதால் பயப்பட தேவையில்லை. நிலம் சார்ந்த முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும். கடன் வாங்கி நிலம் வாங்குவது கூடவே கூடாது. வியாபாரம், தொழிலிலும் அலைச்சல், பதற்றம் அதிகரிக்கும். ஓய்வு, நிம்மதி கிடைப்பதற்கு திருப்புகழை அதிகம் படிப்பது நல்லது. முடிந்தால் பழநி கோயிலுக்கு சென்று வரலாம்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications