கன்னி ராசிக்கு நிலத்தில் சூப்பர் யோகம் – செவ்வாய் பெயர்ச்சியில் அடிக்கும் லக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. இந்நிலையில் தை மாதத்தில் செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி இருக்கிறது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் கிரக பெயர்ச்சியால் கன்னி ராசிக்கு ஏற்படும் பலன்களை இந்த தொகுப்பில் காணலாம்.

செவ்வாய் அமைப்பு சரியாக இருந்தால் ஆரோக்கியம், உத்தியோகம் அமைப்பு நன்றாக இருக்கும். இந்நிலையில் செவ்வாய் கடந்த அக்டோபர் மாதம் முதல் கடக ராசியில் நீட்ச ஸ்தானத்தில் வக்கிரமாக இருக்கிறார். அதனால் பாதிப்புகள் அதிகமாகவே இருக்கும். செவ்வாய் ஜனவரி 21 ஆம் தேதி பின்னோக்கி நகர்ந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஏப்ரல் 3 ஆம் தேதி வரை சுமார் 82 நாட்களுக்கு செவ்வாய் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். இது 12 ராசிகளுக்கும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது.

sevvai peyarchi kanni 2025

கன்னி ராசிக்கு 11ம் இடத்தில் இருந்த செவ்வாய் பத்தாம் இடத்துக்கு செல்கிறார். இதனை தசம ஸ்தானம், கர்ம ஸ்தானம் என்பார்கள். செவ்வாய் பத்தாம் இடத்தில் இருந்து நான்காம் இடத்தைப் பார்க்கிறார். அதனால் நிலம் சார்ந்த விஷயங்களில் பெரிய மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

இந்த காலகட்டத்தில் விவசாயம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொடங்கி மேஸ்திரி, சித்தாள் வரை அனைவருக்கும் வளர்ச்சி ஏற்படும். அதேநேரத்தில் அலைச்சல் அதிகம் இருக்கும். பதற்றம் நிறைந்து காணப்படுவீர்கள். உடல் உஷ்ணம் அதிகப்பதற்கு வாய்ப்புள்ளது. உடலை வருத்தி நிறைய வேலை செய்ய வேண்டிய நிலை உருவாகும்.

வெளியூர் பயணம் அதிகம் இருக்கும். அந்தப் பயணத்தால் நல்ல வளர்ச்சியும் ஏற்படும். வெளிநாடு அல்லது வெளிமாநில பயணங்களால் மரியாதை ஏற்படும். மூன்று மற்றும் எட்டுக்கு உரிய செவ்வாய் பத்தாம் இடத்துக்கு வந்துள்ளார். பத்தாம் இடம் என்பது கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம் ஆகியவற்றுக்கு அதிபதியாவார்.

எனவே தொழில் சார்ந்த வழக்குகளில் எதிரிகள் பலவீனமடைவார்கள். எதிரிகள் பலவீனம் ஆனாலும் ஏதாவது வகையில் உங்களுக்கு தொந்தரவு கொடுத்து கொண்டே தான் இருப்பார்கள். இதனால் உங்களது செயலில் அவ்வப்போது தடுமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. சில நேரங்களில் உங்களுக்கு மந்தத்தன்மையும் ஏற்படும்.


சுறுசுப்பான எண்ணம் இருந்தாலும் காரியங்களில் சின்ன சின்ன தடைகள், மந்தத்தன்மை வந்து செல்லும். சில நேரம் மிகவும் சோர்வாக காணப்படுவீர்கள். சுறுசுறுப்புக்கு செவ்வாய் காரணமாக இருந்தாலும் அதே செவ்வாயால் சில சமயம் சோம்பலும் ஏற்படும். எனவே இந்த 82 நாட்கள் எந்த காரியத்தையும் சற்று பொறுமையுடன் அணுக வேண்டும்.


எந்த இடத்திலும் சோர்வால் மனம் விட்டுவிடக் கூடாது. தெளிவான எண்ணங்களுடன் கடுமையான உழைப்பை செலுத்த வேண்டும். நிதானத்தை எந்த இடத்திலும் தவறவிடக்கூடாது. ஒரு இடத்தில் அதிக சுறுசுறுப்புடனும், மற்றொரு இடத்தில் மந்தமாகவும் இல்லாமல் சீரான வேகத்தில் செயல்பட வேண்டும். அதாவது எந்த காரியத்தையும் தெளிவான திட்டமிடலுடன் அணுக வேண்டும்.

இதன் மூலம் வேலை, உத்தியோகம், வியாபாரம் ஆகியவற்றில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் அலைச்சல், தாமதமான நிலை உருவாகும். கவலைகள் நீங்கி வெற்றி பெற திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபாடு செய்து, முருகனுக்குரிய மந்திரங்களை தினசரி உச்சரியுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+