Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு தடைகள் தவிடுபொடியாகும் காலம்.. ஒரு விஷயத்தில் கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் படிப்படியாக மாறும். தடைபட்டு வந்த அனைத்துக் காரியங்களும் இனி அடுத்தடுத்து நடக்கும் யோகம் உண்டாகும். கலைத் துறையினருக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். மீடியா துறையினருக்கு பெரிய புகழ்கள் தேடி வரும். வண்டி வாகனங்களை மாற்றுவீர்கள்.
ஆடை ஆபரண யோகம்
மன அழுத்தம், தலைவலி, ஒற்றை வலி, கழுத்து வலி போன்றவற்றில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. ஆதித்ய ஹ்ரிதயம், அனுமன் சாலிஷா கேட்டு வருவது அனுகூலத்தை ஏற்படுத்தும். படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர் அற்புதமான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பெரிய வெற்றிகள், சந்தோஷம் ஏற்படும். ஆடை ஆபரணங்களை சேர்க்கும் யோகம் உண்டாகும்.
கடன்கள் நீங்கும்
பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலம் ஏற்படும். யோக பலன்களை அதிகளவில் பெறும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். ரத்த பந்த உறவுகள் விஷயத்தில் வாக்குவாதத்தை வைத்துக் கொள்ளக் கூடாது. பெற்றோர் பெரியோருடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. பெற்றோர்களின் உதவிகள் கிடைக்கும்.
வழிபாடு
நல்ல நண்பர்களை இழந்துவிட்டு வருத்தப்படக் கூடிய சூழ்நிலை ஏற்படும். எல்லோரிடமும் இணக்கமாகச் செல்வது நல்லது. கிரகங்கள் அற்புதத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். வாகன அமைப்பில் மாற்றங்கள் ஏற்படும். நிம்மதியான தூக்கத்தைப் பெறுவீர்கள். விநாயகர் வழிபாடு, காரிய சித்தி மாலை மந்திரங்களை ஜெபிப்பது அனுகூலத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.
பண வரவு அதிகரிக்கும்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். கடன் அமைப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நண்பர்கள், உறவினர்கள் கட்டாயமாக வருவார்கள். உறவினால் ஏற்படும் உதவிகள் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications