Rasi Palan This Week: சிம்ம ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. எந்த விஷயத்தில் கவனம் தேவை?
வார ராசி பலன்: ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை, பங்குனி 23 ஆம் தேதி முதல் பங்குனி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை, பங்குனி 23 ஆம் தேதி முதல் பங்குனி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன் (Simmam Rasi Palan)
சிம்ம ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு சிறு சிறு தொந்தரவுகள் இருந்து கொண்டே இருப்பது போல உணர்வீர்கள். நன்றாக இருந்தாலும் கூட அடிக்கடி மன அழுத்தத்திற்கு ஆளாகிக் கொண்டே இருப்பீர்கள். சனி 8 இல் இருப்பதால் மனம் ஒருவிதமாகத் தான் இருக்கும். 30 வயதைக் கடந்தவர்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பல், வாய், அசிடிட்டி, சைனஸ், ஒற்றை தலைவலி, நரம்பு தொடர்பான விஷயங்களைப் பாரத்துக் கொள்ள வேண்டும்.
கவனம்
தேவையில்லாமல் மற்றவர்களிடம் செல்போன் பேசுவதை தவிர்ப்பது நல்லது. புதிதாக அறிமுகமாகும் நபர், அரசுத் துறையில் இருப்பவர்கள், அரசியல்வாதிகளிடம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் சிக்கல்கள் வரும். வண்டிகளில் செல்லும்போது சிக்னலில் நிக்காமல் செல்வது, அதீத வேகமாக செல்வது, மற்றவர்களுடன் தர்க்கம் ஏற்படுவது போன்ற நிலைமைகள் இருப்பதால் கவனம் தேவை.
வழிபாடு
எச்சரிக்கையாக இருப்பது நன்மையைத் தரும். நவக்கிரகத்தில் இருக்கும் கேது, குரு பகவான் வழிபாடு நன்மையைத் தரும். நரம்பு தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாதவற்றை யோசிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எதையும் யோசிக்காமல் ஜாலியாக இருப்பது நன்மை பயக்கும். பெற்றோர் பெரியோர் பிஸியாக இருப்பார்கள். நம்மை கண்டுக்காதது போன்ற எண்ணம் தோன்றும்.
அனுகூலம்
குடும்பத்தில் பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் காணப்படும். பிள்ளைகள் படிப்பு, தொழில், உத்தியோகத்தில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் பயணம் மேற்கொள்வது, சுற்றுலா செல்வது, தொலைதூர பயணங்கள் போகும் யோகம் உண்டாகும். உறவுக்காரர்களை சென்று பார்த்துவிட்டு வருவீர்கள். மலைக் கோயில்களுக்குச் சென்று வரும் அமைப்பு உள்ளது. உங்களுக்குத் தேவையானவற்றை வாங்கி மகிழ்வீர்கள்.
நல்ல விஷயங்கள்
உங்களிடம் அன்பாக இருப்பவர்களிடம் எல்லாம் அன்பாகப் பழகுவது ஏற்றத்தைக் கொடுக்கும். மனதிற்குப் பிடித்த விஷயங்களைச் செய்து கொள்வது ஏற்றத்தைத் தரும். உங்களை சுற்றி நல்ல விஷயங்களை, நல்ல நபர்களை வைத்துக் கொள்வது நல்லது. 8 இல் நிறைய கிரகங்கள் இருக்கும் போது நிறைய தொந்தரவுகள் அளிக்கும். உங்களிடம் நல்ல உறவுகளில் இருப்பவர்களிடம் உங்கள் நேரத்தைச் செலவிடுவது நல்லது.
-
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
June Rasi Palan 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் எப்படி? -
கடகம், சிம்மம், கன்னி ராசிக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது.. 30 நாட்களில் வரும் குட்நியூஸ் -
ஜூன் மாத ராசிபலன் 2026: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தரும் மாதமா? -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
குரு - சுக்கிரன் இணைவு: கஜலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! -
Rasi Palan This Week: மீன ராசியினரே கவனம்.. சனி தரும் முக்கிய பலன்கள்.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம்












Click it and Unblock the Notifications