Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு தொட்டதெல்லாம் தங்கமாகும் யோகம்.. பொறுமை அவசியம்
Simmam Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த தை மாதத்தில் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன் (Simmam Rasi Palan)
சிம்ம ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். நினைத்த காரியங்கள் எல்லாமே வெற்றி பெறும். யாரோ ஒருவர் உங்களுக்குத் துணையாக இருப்பார்கள். திருமணத்துக்கான யோகம் உண்டாகும். விட்டுப் போன நண்பர்கள் ஒன்று சேருவார்கள். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த பிரிவுகள் நிவர்த்தியாகும். அழகு, ஆடம்பரம் நன்றாக இருக்கும். எல்லா விஷயத்திலும் நேர்மையாக நின்று காரியத்தை முடிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.
வெற்றி மேல் வெற்றி
6 ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய் இணைவு இருப்பது வயிறு உபாதைகள், கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகளைச் சரிசெய்யும். வேலையில் உங்களிடம் போட்டி போடுவதற்கு ஆளே இருக்க மாட்டார்கள். எந்த வழக்கு நடந்தாலும் அதில் நீங்கள் ஜெயிப்பீர்கள். அசாத்தியமான வெற்றியும், சந்தோஷமும் ஏற்படும். நினைத்த காரியங்கள் நடக்கும்.
வியாபாரம்
வியாபார உத்திகளைக் கடைப்பிடிப்பீர்கள். அதில் வெற்றி பெறுவீர்கள். முடி, கண் சார்ந்த பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. யாருக்கும் கடன் கொடுக்காமல் இருப்பது நன்மையைத் தரும். ரத்த பந்த உறவுகளுடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும். துணை விஷயத்தில் அனுகூலம் காணப்படும். தேவையில்லாத கெட்ட பழக்க வழக்கங்கள், சகவாசங்கள் போன்ற விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும்.
கவனம்
36 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அதீத கவனமாக இருக்க வேண்டும். தான் உண்டு, தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. கணவனாக இருந்தால் மனைவியிடமும், மனைவியாக இருந்தால் கணவரிடமும் மனம் விட்டுப் பேசி, இணக்கத்துடன் செல்வது நன்மை பயக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். முதுகுத் தண்டுவடம் தொடர்பான விஷயங்களில் அதீத கவனம் தேவை.
பொறுமை
கூட்டாளிகள், தொழில் அமைப்பு, அரசுத் துறையினர், அரசியல்வாதிகளுக்கு நிம்மதியற்ற தன்மை காணப்படும். பொறுமையாக இருந்து வருவது பல விஷயங்களில் மாற்றத்தைத் தரும். வியாபாரத்தில் தேவையில்லாத சிக்கல்களை தவிர்த்துக் கொள்வது நன்மையை ஏற்படுத்தும்.பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முருகர் வழிபாடு நன்மையைத் தரும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications