Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சோபகிருது.. அரசியல்வாதிகளுக்கு பாதிப்பு..அரசியலில் மாற்றம்..பஞ்சாங்கம் வாசித்த ராமேஸ்வரம் குருக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சோபகிருது தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த புத்தாண்டில் அரசியலில் பல மாற்றங்கள் நிகழும் எனவும் அரசியல்வாதிகளுக்கு சிக்கல் ஏற்பட்டு பெரும் சரிவை சந்திக்கும் எனவும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கோயில் குருக்கள் சஞ்சீவி பஞ்சாங்கம் வாசித்தார்.

பஞ்சாங்கம்: பொதுவாகவே பஞ்சாங்கத்தில் கணிக்கப்படும் பல விசயங்கள் பலித்துள்ளன. மழை,புயல் கூட கிரகங்களின் மாற்றங்களுக்கு ஏற்ப சரியாகவே நிகழ்ந்துள்ளது. சோபகிருது வருடத்தில் உலகில் உள்ள பழம்பெரும் ஊர்கள் எல்லாம் சிறப்பும், செழிப்பும் அடையும். எங்கும் சுபிட்சம் நிறைந்திருக்கும். மக்கள் மத்தியில் கோபம், பொறாமை போட்டி முதலிய தீய பண்புகள் நீங்கும். உலக மக்கள் அனைவரும் சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமையாக வாழ்வார்கள். நற்குணங்கள் மேலோங்கும். சுபமான மங்கலகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். மழை பொய்க்காது பெய்யும் எல்லா நலன்களும் பெற்றும் மக்கள் வாழ்வர் எனவும் பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

Sobakiruthu Tamil New year palan 2023: Political leaders face to promblem Tamil Panchangam prediction

சோபகிருது நவ நாயகர்கள்: சோபகிருது வருடத்தில் ராஜாவாக புதன் வருகிறார். மந்திரியாக சுக்கிரனும், சேனாதிபதியாக குருவும் வருகின்றனர். அர்க்காதிபதியாக சுக்கிரன், மேகாதிபதியாக குருவும் வருவது சிறப்பு. ஸஸ்யாதிபதியாக சந்திரன், ரஸாதிபதியாக புதன்,நீரஸாதிபதியாக சந்திரன், தானியாதிபதியாக சனி, பசுநாயகராக பலதேவர் வருகின்றனர். சோபகிருது வருடத்தில் புதன் ராஜாவாகவும் ரஸாதிபதியாகவும் வருவதனால் மத்திய, மாநில அரசுகளினால் நாட்டில் கல்வி கலைகள் செழிக்கும்.

எல்லைப்பிரச்சினை: இந்தியா கல்வி, தகவல் தொழில் நுட்பத் துறையில் பெரும் வளர்ச்சி இந்தியாவுக்கு சிங்கப்பூர், மலேசியா, பங்களாதேஷ், மியான்மர் நாடுகள் முழு ஒத்துழைப்பு வழங்கி ஆசியாவில் முக்கிய இடத்திற்கு முன்னேறும். சீனாவுடன் எல்லை பிரச்னை அதிகரிக்கும். நம் ராணுவம் புதிய உபகரணங்களை வாங்கி, அதனை முறியடிக்கும்.

நீர்வளம் பெருகும்: மந்திரியாகவும் அர்க்காதிபதியாகவும் சுக்கிரன் வருவதனால் நீர்வளம் பெருகும். ஏரி, குளங்கள், நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயரும்.பணப்பயிர்களும், நவதானியங்களும் நல்ல விளைச்சல் காணும். விவசாயம் செழிக்கும். நாட்டு மக்கள் சுகத்துடனும், சுபிட்சத்துடனும் வாழ்வார்கள். பட்டு சேலை, நகை, ஆடை ஆபரண தொழில் செய்பவர்கள் வளர்ச்சியடைவார்கள்.

மக்கள் சுபிட்சம்: சேனாதிபதியாகவும் மேகாதிபதியாகவும் குரு வருவதனால் நாட்டு எல்லையில் இருக்கும் போர் பதற்றம் விலகும். அண்டை நாடுகளுடனான பகை விலகி நேசக்கரம் நீட்டுவார்கள். நாட்டில் சமரச சன்மார்க்க நெறி வளர்ச்சியடையும். நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் வாழ்வார்கள்.

புயல், வெள்ளம்: நாட்டில் நல்ல மழை பெய்து பயிர்கள் செழிக்கும் என பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வட கிழக்கு சீசனில் புதிய புயல்கள் உருவாகி தமிழகத்தில் சூறாவளி வீசி, பலத்த மழை பெய்யும். அணைகள் நிரம்பி வெள்ளம் ஏற்படும். வட மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கும்.

விவசாயம் செழிக்கும்: ஸஸ்யாதிபதியாகவும், நீரஸாதிபதியாகவும் சந்திரன் வருவதால் மக்கள் சுகபோகமாக வாழ்வார்கள். வெள்ளி விலை ஏறும்.நெல் உற்பத்தி அதிகரிக்கும். தானியாதிபதியாக சனி வருவதனால் எள், உளுந்து போன்ற கருப்பு வகை தானியங்கள் வளர்ச்சியடையும். பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகள் நல்ல விளைச்சலை தரும். கரிசல் மண் பூமியில் விளையும் பயிர்கள் விருத்தியாகும்.

நோய்களுக்கு மருந்து: இந்த ஆண்டு கோழிகள் புதிய நோய்களால் பாதிக்கப்பட்டு இறக்கும். முட்டை விலை உச்சத்தை தொடும். புதிய விஷ காய்ச்சல் பரவும். சித்த வைத்தியமும், ஆயுர்வேதம், பாட்டி வைத்தியம் சிறப்படையும். புதிய வகை வைரஸ் நோய்களால் மனிதர்களும், விலங்குகளும் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை: சுக்கிரன் தனது வீட்டில் ஆட்சி பலம் பெற்று அமர்வதால் பணப்பற்றாக்குறை நீங்கும். பல பொதுத்துறை நிறுவனங்களை அரசாங்கம் தனியார் மயமாக்கும். வனங்களுக்கு சுபிட்சம் ஏற்படும். இந்து சமய அறநிலையத்துறையில் மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும். அரசால் மடாதிபதிகள், துறவிகளுக்கு சிக்கல் ஏற்படும்.

அரசியல்வாதிகளுக்கு பாதிப்பு: இந்த ஆண்டு அரசியலில் பல மாற்றங்கள் நிகழும். அரசியல் தொடர்புடைய பழம்பெரும் புள்ளிகளுக்கு உடல் நலம் கடுமையாக பதிக்கும். முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு கெண்டாதி கெண்டம் ஏற்படலாம். இதனால் கட்சி சரிவை சந்திக்கும். மருத்துவத்துறையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கும். அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+