2026 தேர்தலில் ஸ்டாலினா, விஜய்யா.. தமிழகத்தின் CM யார்? – பிரபல ஜோதிடர் வெளியிட்ட கணிப்பு

Subscribe to Oneindia Tamil

2026 கணிப்பு: 2025 வருடம் இப்போதுதான் தொடங்கியது போல இருக்கிறது. ஆனால் 10வது மாதம் தொங்கி 10 நாட்கள் முடிந்துவிட்டது. விரைவில் 2025 நிறைவடைந்து, 2026 வருடம் பிறக்கவுள்ளது. 2026 தமிழ்நாட்டிற்கு மிக முக்கியமான வருடமாகும். காரணம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போதைய நிலையில் தமிழ்நாடு அரசியல் களத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் ஆகிய இருவருக்கும் நேரம் நன்றாக இருப்பதாக பிரபல ஜோதிடர் ஹரீஷ் ராமன் கணித்துள்ளார். தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்தும் அவர் கூறியுள்ளார்.

2026 வருடம் குறித்து பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரீஷ் ராமன் கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில், "திருச்சி, கரூர், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் வருகிற ஜனவரி மாதம் வரை மிகப்பெரிய பேசு பொருளாகத்தான் இருக்கும். சனி வக்கிரமாக, சூரியனுடன் இணைந்திருப்பதால் போர் போன்ற ஒரு சூழலை ஏற்படுத்தும். அங்கு அரசியல் மாற்றங்கள், அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

2026-election-will-give-good-result-for-both-stalin-and-vijay-said-famous-jothidar

பாதிப்புகள்

ரிஷபம், கன்னி, மகரம் ராசிகள் உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. டிசம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி 15 ஆம் தேதி வரை மழை, பூகம்பம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்படும். ஆஸ்திரேலியா, இலங்கை, நியூஸிலாந்து நாடுகளில் பெரிய பிரச்சனைகள், பாதிப்புகள் ஏற்படும்.

கொங்கு மண்டலத்திற்கு கண்டம்

தமிழகத்தில் முக்கியமாக கொங்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் எதிர்பாராத சம்பவங்கள், அசம்பாவிதங்கள், அரசு நடவடிக்கை, கோயில்கள், கல்வி நிறுவனங்கள், சீருடை பணியாளர்கள் சர்ச்சை பாதிப்புகளில் சிக்குவார்கள். 2026 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் தான் மிகப்பெரிய கிரக பெயர்ச்சி உள்ளது. கடகத்தில் குரு உச்சம் பெறவுள்ளார். வருகிற நவம்பர் மாதத்தில் இருந்தே அதன் தாக்கம் தொடங்கிவிடும்.

குரு மாற்றம்

அமெரிக்கா மிகவும் நெருக்கடியான ஒரு நிலையில் இருக்கிறது. குரு சண்டாள யோகத்தால் அரசனுக்கே கண்டம் ஏற்படும். ராகு - குரு இணைவு மரண பயத்தை கொடுக்கும். குரு மாறினால் தான் உலகத்தில் மாற்றம் ஏற்படும். ஜூன் மாதத்திற்கு பிறகு தான் எதிர்மறை சம்பவங்கள், அசம்பாவிதங்கள் குறையும். அதுவரை பிரச்சனைகள் இருக்கும். 2026 ஆண்டில் 80 சதவீதம் நல்லதும், 20 சதவீதம் பாதிப்புகளும் ஏற்படும்.

ஸ்டாலின் - விஜய் போட்டி

தவெக தலைவர் விஜய்க்கு 2026 வருடம் முழுவதும் நன்றாக இருக்கும். விஜய்க்கு செவ்வாயின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் இளைஞர்களின் ஆதரவு எப்போதும் பெரியளவுக்கு இருக்கும். முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் இது மிகவும் நல்ல நேரம். 2026 ஏப்ரல் - மே மாதங்களுக்குள் தேர்தல் நடைபெற்றால் இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும். இருவருமே அதிக வாக்குகளுடன் முன்னிலை பெறுவார்கள். விஜய் எதிர்க்கட்சி தலைவர் ஆவதற்கும் வாய்ப்பு உள்ளது. "என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+