விருச்சிகம் ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன்.. கைக்கூடி வரும் வாய்ப்பு
சுக்கிரன் பெயர்ச்சி: 2025 வருடம் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய அனைத்து முக்கிய பெயர்ச்சிகளும் நடந்துவிட்டன. ஆனாலும் இந்த வருடம் இன்னும் சில கிரகங்களின் பெயர்ச்சி உள்ளது. அந்த வகையில் இன்று மே 30 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த பெயர்ச்சியால் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார். அதனால் அவரை களத்திர காரகன் என்றும் கூறுவார்கள். வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள்.

சுக்கிரன் பெயர்ச்சி
நண்பன் ஸ்தானத்தை நிர்ணயிப்பதிலும் சுக்கிரனின் அமைப்பு மிகவும் முக்கியமானது. கலை, அழகு, ஜவுளி உள்ளிட்ட துறைகளுக்கும் சுக்கிரன் அதிபதியாக இருக்கிறார். அதனால் அவரின் பெயர்ச்சி முக்கியமானது. தற்போது சுக்கிரன் மீனம் ராசியில் உச்சமாக உள்ளார். அவர் வருகிற மே 31 ஆம் தேதி (வைகாசி 16) மேஷம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கு அவர் ஜூன் 29 ஆம் தேதி வரை இருப்பார்.
சுமார் 30 நாட்கள் அவரின் தாக்கம் கடுமையாக இருக்கும். இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணாலாம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் இருந்து ஆறாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். ஆறாம் இடம் என்பது கடன், விரயம், ஆரோக்கியம், வம்பு ஆகியவற்றுக்கு அதிபதி. விருச்சிகம் ராசிக்கு சுக்கிரன் திருமணத்துக்கான அதிபதி. ஆறு என்பது மறைவு ஸ்தானம் இல்லை. எனவே இது நல்ல பலன்களை கொடுக்கும்.
வெளிநாடு
உத்யோகத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். நல்ல வேலை கிடைக்காதவர்கள், புதிய வேலைக்கு முயற்சி செய்வோருக்கு வேலை கிடைக்கும். வாழ்க்கை துணைக்கும் உத்யோகத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். ஜூன் 12க்கு பிறகு சுக்கிரன் வலுபெறுவதால் கூடுதல் நன்மை கிடைக்கும். வெளிநாடு தொடர்பான முயற்சிகளில் இருப்போருக்கு வெற்றி கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.
கல்வி
வேற்று மொழி மனிதர்களால் அதிகம் பயனடைவீர்கள். சுக்கிரன் நேரடியாக 12வது இடத்தைப் பார்ப்பதால் உத்யோகம் மற்றும் கல்வியில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட அங்கீகாரம் கிடைக்கும். தொழிலில் தொலைதூர தொடர்புகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மாற்றம்
எதிர்பார்த்த இடத்தில் உரிய நேரத்தில் கடன் கிடைக்கும். வீடு, நிலம், வண்டி வாகனம் வாங்குவதற்கு சாதகமான சூழ்நிலை உருவாகும்.தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்களை நிகழும். நீண்ட காலமாக திட்டமிட்ட காரியங்களை நிறைவேற்ற இது சரியான காலம். எல்லாவற்றிலும் நல்லபடியாக மாற்றங்கள் ஏற்படும். வம்பு வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.
அரசு
சுப காரியங்களில் இருந்த தடைகள் திடீரென விலகும். சிலருக்கு திருமணம் தொடர்பான முயற்சிகளில் நல்ல தகல் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கலைத்துறை புதிய ஒப்பந்தங்களால் நன்மை ஏற்படும். அரசு அரசு சார்ந்த விஷயங்கள், அரசு வேலை தொடர்பான முயற்சிகள் சாதகமாக மாறும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்
கவனம்
கணவன் - மனைவிக்குள் அவ்வபோது மனக்கசப்புகள் ஏற்படும். எனவே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கடன், முதலீடு தொடர்பாக அகலக்கால் வைக்க வேண்டாம். ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது முக்கியம். குரு எட்டாம் இடத்தில் இருப்பதால் காதல், எதிர்பாலின உறவில் கவனமாக இருக்க வேண்டும்.
கல்வி தொடர்பாக உரிய ஆலோசனை செய்து முடிவு எடுப்பது நல்லது. எதிலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு செய்யாமல் தெளிவாக செயல்பட்டால் எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications