சுக்கிரன் பெயர்ச்சி 2025: மாளவிய யோகத்தால் மிதுன ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. கிடைக்கும் பலன்கள்?
சுக்கிரன் பெயர்ச்சி: சுக்கிரன் உச்சத்தில் இருந்தால் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்தது தான். அந்த வகையில் சுக்கிரன் வருகிற தை மாதம் 15 (ஜனவரி 28) கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். மீனத்தில் உச்ச பலம் அடையவுள்ளார்.
இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பார்த்து வருகிறோம். இந்த தொகுப்பில் மிதுன ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்களை பார்க்கவுள்ளோம்.

மிதுன ராசிக்கு சுக்கிரன் ஐந்தாம் இடத்துக்கு உரியவர். இது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குறிக்கும். காதல் மற்றும் விரய செலவுக்கும் அதிபதியாவார். மிதுன ராசிக்கு சுக்கிரன் பத்தாம் இடத்தில் அமரப் போகிறார். பத்தாம் இடம் என்பது தொழில் ஸ்தானமாகும். சுக்கிரன் பலம் பெறும் இநத் காலகட்டத்தில் தொழில் ஏராளமான மாற்றங்கள் நிகழும்.
தொழிலில் இருந்த சிக்கல்கள் எல்லாம் முற்றிலும் விலகி மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். சொகுசான வாழ்க்கைக்கு குறை ஏதும் இல்லாதளவுக்கு பண வரவு திருப்தியாக இருக்கும். கலைத்துறையினருக்கு புகழ் உச்சத்தில் இருக்கும். புதிய ஒப்பந்தங்களால் செல்வாக்கு அதிகரிக்கும். சுக்கிரன் ராகுவுடன் இணைந்திருப்பதால் பிரம்மாண்ட வளர்ச்சி இருக்கும்.
சுக்கிரன் - குரு பரிவர்த்தனையாலும் நல்ல பலன்கள் கிடைக்கும். சுக்கிரன் உச்சமடையும்போது மாளவியா யோகம் பெற உள்ளார்கள். அதனால் சகல செல்வாக்குடன் வாழ்வதற்கான அமைப்பு உருவாகும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். குழந்தைகளின் ஆசைகளை முழுமையாக நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளின் கல்விக்காக வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைக்கூடும்.
நெடு நாட்களாக புதிய வாகனம் வாங்க ஆசைப்பட்டவர்களுக்கு, அவர்கள் எதிர்பார்த்தபடியான புதிய வாகனம் வாங்குவதற்கான அமைப்பு உள்ளது. அதேபோல நீண்ட காலமாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்களுக்கும் அந்த ஆசை நிறைவேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. வீட்டை புனரமைக்க திட்டமிட்ட காரியமும் வெற்றிகரமாக நிறைவேறும்.
திருமண தடை நீங்கி நீண்ட காலமாக ஏக்கத்தில் உள்ளவர்களுக்கு திருமணம் நடப்பதற்கான வாய்ப்பு நன்கு உள்ளது. வெளிநாடு வேலை வாய்ப்புக்கு முயற்சி செய்பவர்களுக்கு அந்த வாய்ப்பு நிறைவேறும். மனதில் இருந்த சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். மனம் நிறைவுடன் இருப்பீர்கள்.
சினிமா, ஊடகம், விளையாட்டுத்துறையினர் புதிய சாதனை படைப்பீர்கள். உங்களின் புகழ், கௌரவம் புதிய உச்சத்தை அடையும். உங்களின் வாக்குக்கு மதிப்பு அதிகரிக்கும். அம்மாவின் உடல்நலத்தில் இருந்த பாதிப்புகள் விலகி அவரின் தேக ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அம்மா வழி சொத்துகளில் இருந்த பிரச்னைகள் நீங்கி கைக்கூடும்.
கணவன் - மனைவி உறவில் இருந்த பிரச்னைகள் விலகும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரித்து, கணவன் - மனைவி உறவால் பல பயன்களை இருவரும் அடைவார்கள். படிப்புக்கு தகுதியான வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டவர்களுக்கு தகுதிக்கேற்ப நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே உத்யோகத்தில் இருப்போருக்கு பதவி, சம்பளம் உயர்வு கிடைக்கும்.
தொழிலில் உங்களின் அற்புதமான பேச்சற்றலால் அனைத்து காரியங்களிலும் எளிதாக வெற்றி கிடைக்கும். ஜவுளி, அழகு சாதனம், உணவு, விடுதி சம்மந்தப்பட்ட துறைகளில் இருப்போருக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பெண்கள் உற்பத்தி செய்யுக் கூடிய பொருள்களுக்கும் வளர்ச்சி நன்றாக இருக்கும். பண வரவு இருந்தாலும் சுப விரயம் இருக்கும்.
விவசாய துறையில் உள்ளவர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தால் ஏற்றம் இருக்கும். இந்த காலகட்டத்தில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆண் - பெண் விவகாரத்தில் மட்டும் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications