அட.. இது லிஸ்ட்லயே இல்லயே.. மேஷ ராசிக்கு சர்ப்ரைஸ் தரும் சுக்கிரன்
சுக்கிர பெயர்ச்சி: ஒவ்வொரு கிரகங்களும் சீரான இடைவெளியில் பெயர்ச்சி ஆகி கொண்டே இருக்கும். இது ஜோதிட ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த மாதம் ஏராளமான மாற்றங்களை கண்டுள்ளது. அந்த வகையில் ஜூலை 26 ஆம் தேதி இன்று சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். இது மேஷ ராசிக்கு கொடுக்கும் பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
சுக்கிரன் பகவான் வருகிற ஜூலை 26 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கு அவர் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வரை இருக்கப் போகிறார். மிதுனத்தில் ஏற்கனவே குரு பகவான் உள்ளார். இந்த 26 நாட்கள் சுக்கிர பகவான், குருவுடன் இணைந்து பயணிக்க போகிறார். இதில் குரு - சுக்கிர இணைவும் நடக்கிறது.

அதிலும் சுக்கிர பகவான் ஜூலை 26-31 ஆகிய 6 நாட்கள் செவ்வாய் பகவானின் நட்சத்திரமான மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். ஆகஸ்ட் 1-11 தேதிகளில் சுக்கிரன் ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் பயணிக்கிறார். ஆகஸ்ட் 12-20 குரு பகவானின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிக்க உள்ளார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக குரு பகவான் செல்வம், சுக ஸ்தானம், மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு அதிபதி. அதனால் சொசுகுசு வாழ்க்கைக்கு சுக்கிரனின் அமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சுப கிரகங்களான குரு - சுக்கிரன் ஒன்றாக பயணிப்பதும் மிகவும் விஷேசமானது. இது 12 ராசிகளுக்கும் கொடுக்க போகும் பலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து விரிவாக காணலாம். இந்த கட்டுரையில் மேஷ ராசிக்கான பலன்களை பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்கு உங்களின் மூன்றாவது இடத்தில் சுக்கிரன் பெயர்ச்சியாகி குருவுடன் இணையவுள்ளார். சுக்கிரன் உங்களின் இரண்டாம் இடமான தனம், குடும்பம், வாக்கு ஸ்தானம் ஆகியவற்றுக்கு அதிபதி. உங்களுக்கு பாக்கியம் மற்றும் விரயத்துக்கு குரு பகவான் அதிபதி. முயற்சி ஸ்தானமான மூன்றாவது இடத்தில் இரண்டு கிரகங்கள் இணைவது பொருளாதாரத்தில் ஏற்றத்தை தரும். பண வரவு சிறப்பாக இருக்கும்.
புத்திசாலித்தனம்
உங்களின் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். உத்யோகம், தொழிலில் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். லாபம் பல மடங்கு அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். தகவல் தொடர்பால் உயர்வடைவீர்கள். மனதில் தெளிவான சிந்தனை பிறக்கும். உங்களின் வாக்கு ஸ்தானமும் பலமடையும். புத்திசாலித்தனத்தால் தெளிவாக பேசி காரியங்களை சாதிப்பீர்கள்.
தொழில் வெற்றி
தொழிலில் சிறப்பான திட்டங்கள், நுணுக்கங்களால் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். சுப காரிய தடைகள் விலகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். உத்யோகத்தில் இருந்து சுயமாக தொழில் தொடங்க இது சரியான காலம். வாழ்க்கை துணையுடன் தூர தேசம் பயணிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.
சொத்து சேர்க்கை
நிலம், வீடு, வாகனம், ஆபரணங்கள், ஆடம்பர பொருட்கள் உள்ளிட்ட அசையும், அசையா சொத்துகளின் சேர்க்கை இருக்கும். உத்யோகம், தொழிலில் பொறுப்புகள் கூடும். சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உங்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். கலை மற்றும் ஊடகம், தகவல் தொடர்பு துறையில் இருப்போருக்கு உயர்வு உண்டு. புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்.
வெளிநாடு யோகம்
உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். குழந்தை பாக்கியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்வதற்கான யோகம் உண்டாகும். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தந்தை மூலமாக ஆதாயம் பெறுவீர்கள். திடீர் அதிர்ஷ்டம், திடீர் பண வரவு, திடீர் லாபம் என்று ஏராளமான ஜாக்பாட் கிடைக்கும்.
கவனம்.. பரிகாரம்
வாழ்க்கை துணைக்குள் அவ்வபோது மோதல் போக்கு ஏற்படும். எனவே கணவன் - மனைவி மோதலை தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். எதிர்பாலினத்தவர் விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் செல்வது, தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் பட்டு நிறம் பட்டு உடை அணிவிப்பது நல்ல பலன்களை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications