சுக்கிரன் பெயர்ச்சி: ரிஷபத்துக்கு காசு மேல காசு வந்து.. பண மழையில் நீச்சல் அடிக்கப் போறீங்க
சுக்கிரன் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. அந்த வகையில், இன்று சுகாதிபதியான சுக்கிரப் பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
உலகில் உள்ள மனித உயிர்களின் காதலுக்கு காரணமாக இருப்பவர் சுக்கிர பகவான். காதலின் கிரகமாக கருதப்படும் சுக்கிர பகவான் ஜூன் 28 ஆம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு செல்கிறார். பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார்.

வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள். அந்த வகையில், இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷப ராசி பலன்
உங்கள் ராசிநாதனான சுக்கிரன் ஆட்சி பலம் பெற்று ஜென்மத்திலேயே அமர்ந்திருப்பது நல்ல பலன்களைத் தரும். ராசிக்கு 7 ஆம் இடத்தை பார்வையிடுவதால் அபரிமிதமான பண வரவுகளையும், முன்னேற்றத்தைக் கொடுக்கும். உங்கள் கனவுகள், ஆசைகள் அனைத்தும் நடக்கும். உத்தியோகத்தில் மிகப்பெரிய வாய்ப்புகளும், பொறுப்புகளும் கிடைக்கும். உழைப்புக்கேற்ற ஊதியமும், அங்கீகாரமும் கிடைக்கும்.
முன்னேற்றம்
பதவி உயர்வு, சம்பள உயர்வு, புதிய பொறுப்புகள் கிடைக்கும். மன நிறைவு, மன நிம்மதி கிடைக்கும். இதுவரையில் இருந்து வந்த மனம், உடல் ரீதியான அனைத்துப் பிரச்சனைகளும் பரிபூரணமாக நீங்கும். சுக்கிரனின் அமைப்பால் தைரியம், புத்துணர்ச்சி பிறக்கும். சுக்கிரன் ஜென்மத்தில் ஆட்சி பெற்று பயணிப்பதால் அளவுக்கு அதிகமான மேன்மைகளும், அஷ்ட லட்சுமி யோகமும், கோடீஸ்வர யோகமும் கிடைக்கும்.
திருமண யோகம்
சுக்கிரன் 7 ஆம் இடத்தைப் பார்ப்பதால் திருமண யோகம் உண்டாகும். காதல் விஷயங்கள் கைகூடும். சுப காரியங்கள் அனைத்தும் நடக்கும். புதிய நண்பர்களால் கிடைப்பார்கள். கூட்டாளிகளால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் வருமானம் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் நல்ல லாபத்தையும், வெற்றியையும் காண்பீர்கள்.
பண வரவுகள் அதிகரிக்கும்
சனி, குரு, ராகு, கேது என அனைத்து கிரகங்களும் சுப பலத்துடன் சாதகமாக சஞ்சரிப்பதால் வாழ்க்கையில் பண வரவுகள் அள்ளிக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும். வெற்றி வாய்ப்புகள், நன்மை, முன்னேற்றமும் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். சுக்கிரன் ஜென்மத்தில் பயணித்து, சனியின் 3 ஆம் பார்வை கிடைப்பதால் மிகப்பெரிய அளவில் யோக பலன்கள் கிடைக்கும்.
தொழில்
வியாபாரம், தொழில் முன்னேற்றம், லாபம் கிடைக்கும். பொருளாதாரத்தில் உயர்வு ஏற்படும். நிதி நெருக்கடிகள் தீரும். பழைய கடன்களைத் தீர்த்து முடிப்பீர்கள். சுக்கிரன் ஜென்ம ராசிக்கு பயணிப்பதால் நல்ல பல அதிர்ஷ்ட யோகங்கள் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும்.












Click it and Unblock the Notifications