சுக்கிரன் பெயர்ச்சி 2025: எதிர்பாராத அதிர்ஷ்டத்தால் இனி குஷிதான்.. பணக்கார யோகம் பெறும் ரிஷபம்
சென்னை: 2025 புத்தாண்டு விரைவில் பிறக்க உள்ளது. புத்தாண்டில் தங்களது கனவுகள் நிறைவேறுமா என்ற ஏக்கம் எல்லோருக்கும் இருக்கும். இந்தாண்டு பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் உள்ளன. அதில் சுக்கிரனின் பெயர்ச்சியையும் உற்று கவனிக்க வேண்டும். சுக்கிரன் உச்சம் ரிஷபம் ராசிக்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக சுகபோக வாழ்க்கைக்கு சுக்கிரன் கிரகம் முக்கியமான அமைப்பாகும். சுக்கிரன் கிரகம் அமைப்பு இருந்தால் ஒருவருக்கு பணம், மகிழ்ச்சி உள்ளிட்ட எல்லா வசதிகளும் கிடைத்து நிறைவான வாழ்க்கை அமையும். பொதுவாக சுக்கிரன் ஒரு வருடத்தில் 20 - 45 நாட்கள் உச்சத்தில் இருப்பார். எப்போதுமே உச்சமடையும் கிரகங்களுக்கு தான் சக்தி அதிகம் இருக்கும்.

2025 ஆம் ஆண்டை பொறுத்தவரை சுக்கிரன் மீனம் ராசியில் உச்சமடைய உள்ளார். ஜனவரி 28 ஆம் சுக்கிரன் பெயர்ச்சி ஆகவுள்ளார். சுக்கிரன் உச்சமடையும்போது ஒரு யோகம் உண்டு. அதே சுக்கிரன் குருவுடன் பரிவர்த்தனை செய்யும்போது ஒரு யோகம் கிடைக்கும். மேலும் புதனுடன் பரிவர்த்தனை ஆகும்போது சுக்கிரன் மதன கோபால யோகம் கிடைக்கும்.
இதுபோல ராசிக்கு தகுந்தவாறு மாளவ்யா யோகம், ராஜ யோகம், லட்சுமி நாராயண யோகம் என்று பல யோகங்கள் உள்ளன. சுக்கிரன் ராகுவுடன் இணையும்போதும் பெரிய திருப்புமுனை கிடைக்கும். சுக்கிரன் செவ்வாயை தவிர சனி, சூரியன் உள்ளிட்ட அனைத்து கிரகங்களையும் சந்திக்கும். கலைத்துறை, ஆடம்பர வாழ்க்கை உள்ளிட்ட பலவற்றுக்கு சுக்கிரன் அமைப்பு முக்கியம்.
2025 ஜனவரி 28 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை சுக்கிரன் உச்சத்தில் இருப்பார். நீண்ட காலத்துக்கு பிறகு சுக்கிரன் சுமார் நான்கு மாதங்கள் உச்சத்தில் இருக்க போகிறார். ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே பெயர்ச்சி ஆகிவிடுவார். சுக்கிரன் பெயர்ச்சி ரிஷபம் ராசிக்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று காண போகிறோம்.
2025 ஆம் ஆண்டு சுக்கிரன் ராசிக்கு தான் அதிகம் அதிர்ஷ்டங்கள் கொட்ட போகின்றன. ரிஷபத்துக்கு சுக்கிரன் தான் அதிபதி. அவர் உச்சமடைவதால் ரிஷபத்துக்கு ஏதாவது ஒரு நற்பலனை கொடுப்பது உறுதி. சுக்கிரன் 11 ஆம் வீடாக பார்ப்பதால் அதிர்ஷ்ட காற்று வீசும். சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கான ஜேக்பாட் அடிக்கும்.
வாகனம் மாற்றம், நகை ஆபரணங்கள், பயணம், புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினருக்கு வெற்றி அதிகரிக்கு நல்ல யோகம் தரும். ராகு, சூரியன், சந்திரன், குரு, சனி, புதன் கிரகங்களுடனான சேர்க்கையும் நல்ல பலன்களை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பரிசுகள் தேடி வரும்.
புதிய தொழில் தொடங்குவீர்கள். ஏற்கெனவே தொழிலில் இருப்பவர்கள் அதை விரிவாக்கம் செய்வீர்கள். கலைத்துறையினர் பெரிய திட்டங்களில் கையெழுத்திடுவார்கள். விளையாட்டுத் துறையிலும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மொத்தத்தில் 2025 ஆம் ஆண்டில் நீங்கள் தொட்டது அனைத்துமே வெற்றியாக மாறும். கணவன் – மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரித்து திருமண வாழ்க்கை மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இந்த காலகட்டத்தில் நீங்கள் நீண்ட காலமாக யோசித்த பல விஷயங்கள் நிறைவேறும். எதிர்பாராத அதிர்ஷ்டம் மனதுக்கு நிறைவை ஏற்படுத்தும். சொத்துகள் வாங்கக் கூடிய நிலை உருவாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரவு வந்துசேரும். லாட்டரி உள்ளிட்டவற்றில் அதிர்ஷ்டம் உள்ளது.
நீண்ட காலமாக நீங்கள் செய்ய நினைக்கும் எந்த காரியமாக இருந்தாலும் அதை செய்யலாம். இதுதான் சரியான நேரம். இந்த நேரத்தை சரியாக பயன்படுத்தி பலன்களை அனுபவியுங்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications