சுக்கிரன் பெயர்ச்சி பலன் 2023: கும்பத்தில் சனியோடு இணைந்த காதல் நாயகன்..மகாலட்சுமி யோகம் யாருக்கு?
சென்னை:
மகர ராசியில் சூரியன் உடன் குடியிருக்கும் காதல் நாயகன் சுக்கிரன் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் கும்ப ராசியில் சனியுடன் குடியேறப்போகிறார். கிரகங்களின் கூட்டணி, சஞ்சாரத்தை வைத்து ராசிக்காரர்களுக்கு நன்மையும் தீமையும் நடைபெறும். சுக்ரன் களத்திரகாரகன் இல்லற வாழ்வுக்குறியவர். சனியுடன் கூட்டணி சேரும் சுக்கிரன் சிலருக்கு மகாலட்சுமி யோகத்தை கொடுப்பார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

சுக்கிரன் சிற்றின்பம், திருமணம் முதலான சுகத்தை ஆணுக்கு அளிப்பவர். அதே போல் பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும் தகுதியையும், சுக போகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார். சுக்ரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. சுக்ரன் மனைவி யோகம் தருபவர் ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். இவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும்.
ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் சனி சேர்க்கை பெற்றிருந்தால் அது கோடீஸ்வர யோகமாக அமைகிறது. யோக ஜாதகமாகும். வசதியான மனைவி அமைவார். நன்றாக சம்பாதிக்கும் மனைவி அமைவார். ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் சுக்கிரன் சனி சேர்க்கை கண்டிப்பாக இருதாரயோகத்தை கொடுக்கும். சிலருக்கு கலப்பு திருமணம் நடைபெறும். இந்த சுக்கிர பெயர்ச்சி யாருக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
மேஷம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் சனியுடன் இணைந்து பயணம் செய்கிறார். மகாலட்சுமி யோகம் தேடி வரப்போகிறது. பண வருமானம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். திருமணமான தம்பதிகள் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.
ரிஷபம்

உங்கள் ராசிக்கு 10வது வீடான தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் அமரப் போவதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். வேலை செய்யும் இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசாமல் அமைதியாக நிதானமாக பேசவும். பணத்தை பத்திரப்படுத்துங்கள். பெண்களுக்கு நகை சேர்க்கை ஏற்படும். வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு வெல்லம் வாங்கித்தர நன்மைகள் நடைபெறும்.
மிதுனம்

உங்கள் ராசிக்கு ராசிக்கு 9ஆவது வீட்டில் பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்கிறார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். வெளிநாடு யோகம் கைகூடி வருகிறது. பாஸ்போர்ட் எடுத்தவர்கள் விசாவிற்கு முயற்சி செய்யலாம். வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று தாயாருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.
கடகம்

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் எட்டாம் இடத்தில் மறைகிறார். ஏற்கனவே அஷ்டமத்து சனி ஆட்டிப்படைக்கிறார். கூடவே சுக்கிரன் இணைவதால் மனைவியின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும். இருவருமே கவனமாக இருந்தால் பொருள், நகை பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் எற்படும். பணத்தை பத்திரப்படுத்துங்கள் விலை உயர்ந்த நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். வெள்ளிக்கிழமை காய்ச்சிய பால் உடன் ஏலக்காய் சேர்த்து நைவேத்தியம் செய்து வழிபட நன்மைகள்
சிம்மம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் சனியோடு இணைந்து பயணம் செய்யப்போவதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். சிலருக்கு காதல் கனிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இல்லாவிட்டால் மதிப்பு மரியாதைக்கு பிரச்சினை ஏற்பட்டு விடும். சுக்கிரனின் அருட் பார்வை கிடைக்க வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் நெய் தீபம் ஏற்றி விளக்கேற்றி வழிபடலாம்.
கன்னி

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினை முடிவுக்கு வரும். வெள்ளிக்கிழமை அம்பிகையை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.
துலாம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனியுடன் இணைகிறார். பிள்ளைகள் வாழ்க்கையில் சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்கும். மகனுக்கோ, மகளுக்கோ திருமண யோகம் கைகூடி வரப்போகிறது. மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. வெள்ளிக்கிழமை சிவ ஆலயம் சென்று அம்மன் கோவில்களில் விளக்கேற்ற நன்மைகள் நடைபெறும்.
விருச்சிகம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் பயணம் செய்கிறார். சுக ஸ்தான சுக்கிரன் நல்ல சுகங்களைத் தரப்போகிறார். பெண்கள் நகை,ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். பெண்கள் வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்குவீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். சுக்கிரபகவானுக்கு வெள்ளிக்கிழமை நெய்தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.
தனுசு

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் சனியுடன் இணைகிறார். இளைய சகோதரர் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். முகத்தில் பொலிவு கூடும். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். பிரிந்தவர்கள் இணைவார்கள் உங்களின் நட்பு வட்டம் அதிகரிக்கும். சிறு ஆன்மீகப் பயணம் செல்ல வேண்டியிருக்கும். உடல் நலனில் சின்னச் சின்ன ஏற்படும் கவனம் தேவை. வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.
மகரம்

உங்கள் ராசியில் சூரியன் உடன் சஞ்சாரம் செய்து வந்த சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் சனி உடன் பயணம் செய்கிறார். தன ஸ்தான சுக்கிரனால் உங்களுக்கு பண வருமானம் அதிகாிக்கும். மகாலட்சுமி யோகம் கைகூடி வரப்போகிறது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று செந்தூரம் வாங்கி தந்து வழிபட சுகங்கள் தேடி வரும்.
கும்பம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் சனி உடன் குடியேறுவதால் வேலையில் புரமோசன் கிடைக்கும். நல்ல வருமானம் வரும். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு வயிற்றில் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.
மீனம்

உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமாக 12வது வீட்டில் சுக்கிரன் உங்கள் ராசி நாதனுடன் கூட்டணி அமைத்து குடியேறியுள்ளார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பார்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். சுப விரைய செலவு ஏற்படும். டிவி பிரிட்ஜ் ஏசி பொருட்கள் வாங்கலாம். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு தயிரும் சர்க்கரையும் வாங்கித்தர நன்மைகள் நடைபெறும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications