தமிழ் புத்தாண்டில் பணம் கொட்டப் போகும் 6 ராசிகள்.. மெகா அதிர்ஷ்டம்
தமிழ் புத்தாண்டு: மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழ் புத்தாண்டு பிறந்துவிட்டது. இந்த விசுவாவசு வருடம் மக்களிடம் ஏராளமான எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த வருடத்தில் சொந்த வீடு, திருமணம், தொழில், பண வரவு ஆகியவற்றில் எந்த ராசிகளுக்கு சாதகமாக உள்ளது என்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
திருமணம்
மிதுனம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய 4 ராசிகளுக்கு திருமண யோகம் உருவாகியுள்ளது. இந்த நான்கு ராசியினருக்கு இருந்த சுபயோக தடைகள் நீங்கியுள்ளது. திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அடுத்தடுத்த சுப காரியங்களில் வீட்டிலும், உங்கள் மனதிலும் மகிழ்ச்சி பொங்கும்.

காதல்
ராகு எப்போதெல்லாம் கும்பத்துக்கு வந்து, குரு பார்வை உருவாகிறதோ அப்போது காதலில் வெற்றி கிடைக்கும். கும்பம், கன்னி, துலாம் ராசியினருக்கு காதல் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. சிம்மம் ராசியினருக்கு பிரச்னைகளுடன் கூடிய காதல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால் அவர்கள் காதலில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
சொந்த வீடு
சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது பலருக்கு நீண்ட கால கனவாக இருக்கும். ஆனாலும் ஏதாவது ஒரு காரணத்தால் அதில் தடை, சிக்கல்கள் இருந்து கொண்டிருக்கும். வருடத்தில் விருச்சிகம் ராசியினருக்கு சொந்த வீடு கட்டுவதற்கான யோகம் உருவாகியுள்ளது. தனுசு ராசியினருக்கும் தங்களின் கடின உழைப்பால் சொந்த வீடு கனவு நனவாக உள்ளது.
கிரகப்பிரவேசம்
கடகம் ராசியினருக்கு பூர்விக சொத்துக்கள் மூலம் சொந்த வீடு அமைப்பு உருவாகும் சூழல் உள்ளது. சிலருக்கு வீடு கட்ட.. கட்ட ஏதாவது தடைகள் உருவாகியிருக்கும். அந்த சிக்கல்கள் நீங்கி மிதுனம், துலாம், கும்பம் ராசியினருக்கு வீடு கிரகப்ரவேசம் நடத்தி குடியேறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
தொழில்
தொழில் தொடங்க வேண்டும் என்கிற ஆசை பலருக்கு இருக்கும். உத்யோக சூழலில் இருந்து விடுபட வேண்டும், மாற்று தொழில் முயற்சி மேற்கொள்வதற்கான சிந்தனைகளில் பலர் இருப்பார்கள். இதில் கன்னி ராசியினர் தொழில் தொடங்குவதற்கான அதிக ஈடுபாடு காட்டிக் கொண்டிருப்பார்கள். கன்னிக்கு குரு பகவான் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்துக்கு பெயர்ச்சி ஆகிறார்.
குரு பார்வை
சனி பகவானும் ஏழாம் இடத்தில் இருப்பதால் கன்னி ராசியினர் தொழில் தொடங்குவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. ரிஷபம், மற்றும் மகரம் ராசிகளுக்கும் தொழில் ஸ்தானம் சிறப்பாக உள்ளது. அவர்களும் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. குரு பார்வை சிறப்பாக இருப்பதால் மேஷம், சிம்மம், தனுசு ராசிகளும் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.
ஆரோக்கியம்
செல்வங்கள் இருந்தாலும் பலர் ஆரோக்கிய குறைபாட்டால் சிரமப்பட்டிருப்பார்கள். புதிய வருடத்தில் ரிஷபம், துலாம் ராசியினருக்கு உடல்நலத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி, ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். தனுசு மற்றும் கும்பம் ராசிகள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். சிம்மம் ராசியினர் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை எடுக்க வேண்டும்.
நிம்மதி
பரபரப்பு, பணிச்சுமை, மன அழுத்தம் போன்றவற்றால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். மன நிம்மதி கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பும் பலருக்கு இருக்கும். அந்த வகையில் ரிஷபம், கன்னி, மகரம் ராசிகளுக்கு இந்த வருடத்தில் அதிகளவு மன நிம்மதி ஏற்படும். இவர்களுக்கு கடந்த காலங்களில் இருந்த மனச்சிக்கல்கள் விலகி மகிழ்ச்சி ஏற்படும்.
பண வரவு
புதிய வருடம் என்றால் புதிய கனவுகள் எல்லோருக்குமே இருக்கும். மேற்கண்ட பல விஷயங்களுக்கு அடிப்படை பணம் தான். பண வரவு பலவற்றுக்கு முக்கிய காரணியாக உள்ளது. அந்த வகையில் இந்த வருடத்தில் ரிஷபம், மகரம், கன்னி, துலாம், கும்பம், மீனம் ராசிகளுக்கு பண வரவு திருப்தியாக இருக்கும்.
-
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications