தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசியினருக்கு இது கட்டாயம் நடக்கும்.. குரு பார்வையால் அதிர்ஷ்டம் கொட்டும்
தமிழ் புத்தாண்டு பலன் 2025: விசுவாவசு வருடம் ஏப்ரல் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் சித்திரை மாதம், தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்த புத்தாண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு ஏற்றம் தரும் புத்தாண்டாக இருக்குமா, எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும், வழிபாடு முறைகள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்காலம்.
2025 ஆம் ஆண்டில் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சித்திரைப் பிறக்கவுள்ளது. தமிழ் வருடத்தில் சித்திரைப் பிறப்பு என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடைக்காடர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. தமிழ் வருடங்களின் 60 ஆண்டுகளில் 38 ஆவது ஆண்டாக வரக்கூடிய விசுவாவசு வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் இந்த வருடம் தொடங்குகிறது.

இந்த ஆண்டு கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும் மகத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும். அந்த வகையில், மேஷம் ராசியினருக்கு தமிழ்ப் புத்தாண்டில் கிடைக்கும் நல்ல பலன்கள், கிடைக்கக்கூடிய யோகங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டில் வரும் இரண்டு மாதங்கள் கொஞ்சம் கடுமையான காலகட்டமாக இருக்கும். அனுமனை வழிபடுவது சகல வித நன்மைகளையும் தரும். நரம்பு, வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. சுப காரியங்களில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். லாபம் ஏற்படும். தொழில் ரீதியாக அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்துக்கு நல்ல பலன்களைத் தரும்.
மேஷ ராசியினர் தூக்கத்தை குறைப்பது நல்லது. வேலையில் பளு அதிகரிக்கும். கடன் வாங்குவதற்கான சூழ்நிலை ஏற்படும். இதெல்லாம் முதல் இரண்டு மாதங்களுக்கு மட்டும்தான். ராகு லாப ஸ்தானத்தில் வருவதால் குரு பார்வை கிடைப்பதால் மிகப்பெரிய ஜாக்பாட் கிடைக்கும். குரு அபரிமிதமான பணம், நகைகளை அள்ளிக் கொடுப்பார். குடும்பத்தில் சில பாதிப்புகளைச் சந்திப்பீர்கள். உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குரு பார்வை இருப்பதால் திருமண யோகம் உண்டாகும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றியைப் பெறுவீர்கள். அபிராமி அந்தாதி 40, 59, 75 பாடல்களைப் படிப்பது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சிகளைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணிகளாக இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனையை கடைப்பிடிப்பது நல்லது. படிப்படியான ஏற்றம், நல்ல முன்னேற்றம் உண்டாகும். தைரியத்தின் பாதிப்பு குறைவதனால் குலதெய்வத்தை அடிக்கடி வழிபாடு செய்வது பலவிதத்தில் நன்மைகளைத் தரும்.
மகான்கள் தரிசனம் ஏற்றத்தை தரும். பிதுர் தோஷங்களில் பரிபூர்ண நிவர்த்தியாவதால் பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனைகள், தலைமுறையாக இருந்த பாதிப்புகள் அனைத்திலும் நிவர்த்தி உண்டாகும். அரசுத் துறை, அரசியல்வாதிகள் புதிய பொறுப்பு மற்றும் புதிய அனுகூலங்களையும் பெறுவீர்கள். புதிய பதவிகள், நல்ல பெயர், புகழ் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள் குடும்பத்தில் சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கும். எடுத்த காரியங்களில் வெற்றியைக் குவிக்கும் காலகட்டமாக இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளையும் சமூகமாக தீர்த்து முடிப்பீர்கள். எல்லாவற்றிலும் யோசித்து பதில் சொல்வது நல்லது. மற்றவர்களை திருப்திப்படுத்துவதற்காக உங்கள் நேரத்தை, தேக ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளாமல் இருப்பதை மாற்றிக் கொள்வது நல்லது.
பிறருக்காக உழைப்பதை விட்டுவிட்டு குடும்பத்திற்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும் திட்டமிட்டு செய்வது, அறக்கட்டளைகள் ஆரம்பிப்பது, கோசாலைகள் ஆரம்பிப்பது நல்ல பலன்களைத் தரும். இடமாற்றம் உண்டாகும். அறுவை சிகிச்சை போன்றவை மேற்கொள்வீர்கள். புதிய முதலீடு, புதிய கிளைகளைத் தொடங்கும் யோகம் உண்டாகும்.












Click it and Unblock the Notifications