தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. பராபவ ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டானது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். இந்த காலகட்டத்தில், சனி குரு திரிகோணத்தில் இணைவது என்பது 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். குருவுக்கு சக்தி கொடுப்பது போல சனி திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். இந்த காலகட்டத்தில் சிம்ம ராசியினருக்கு ஏற்படப் போகும் நன்மைகள், படிப்பு, தொழில் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன் (simmam Rasi Palan)
சிம்ம ராசியினருக்கு எந்த விஷயத்தையும் வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. நாம் உண்டு நம் வேலை உண்டு என்றிருப்பது நல்லது. ஜூன் மாதம் வரை நீங்கள் செய்யும் எல்லா காரியங்களிலும் வெற்றி ஏற்படும். லாபத்தில் குரு இருக்கும் வரைக்கும் வேலைக்கும், பணத்திற்கும் பஞ்சமே இருக்காது. குரு விரயத்துக்கு வரும்போது அஷ்டமத்தில் சனி இருக்கும்போது மாநிலம் விட்டு மாநிலம் சென்றால் அற்புதமான யோகம் ஏற்படும்.

இடமாற்றம்
நிறைய பேருக்கு இடமாற்றம், வேலை மாற்றம் ஏற்படும். பூரம், உத்திரம் நட்சத்திரத்திற்கு அற்புதமான நன்மைகள் உண்டு. மகம் நட்சத்திரத்திற்கு சிறிய சிறிய பிரச்சனைகள் வரும். விரயத்தில் குரு இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சுழுக்கு, பிடிப்பு போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. சிம்ம ராசியினர் இருக்கும் வீட்டில் யாரோ ஒருவருக்காவது மன வேதனை இருந்து கொண்டே இருக்கும்.
நன்மை
மகனைப் பிரிவது, பெரியவர்களைப் பிரிவது, அம்மாவுடைய ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. நதி, கடலில் குளிப்பதால் பாதிப்புகள் கண்டிப்பாகக் குறையும். காவேரி நதி ஸ்நானம் அற்புதமான நன்மைகளைத் தரும். இரவு நேரத்தில் செய்யக்கூடிய வேலைகள் அற்புதமாக இருக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வது, நல்ல லாபம் வரும் வாய்ப்புள்ளது.
எதிர்பாராத அதிர்ஷ்டம்
சொத்துகள் உங்களை வந்து சேரும். எதிர்பாராத அதிர்ஷ்டம், எதிர்பாராத லாட்டரி, எதிர்பாராத விஷயங்கள் உண்டாகும். யாரோ ஒருவர் உங்களுடன் இருப்பார்கள், உதவி செய்வார்கள். முடி உதிர்தல் பிரச்சனை, நரம்புகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கோடீஸ்வர யோகம்
வரக்கூடிய அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் திருமண யோகம் யோகம் உண்டாகும். குரு, கேது சேர்வது கோடீஸ்வர யோகத்தைக் கொடுக்கும். அக்டோபர் மாதம் வரை படுமோசமான காலமாக இருக்கும். மகம் நட்சத்திரத்தினர் கவனமாக இருக்க வேண்டும். நிறைய கவலைகள், பெரியவர்களின் இறப்பு, பிரிவு போன்றவை ஏற்படும். நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் வேலையை கூட விட்டுவிடலாம் என்ற எண்ணம் தோன்றும்.
முன்னேற்றம்
அக்டோபர், நவம்பர், டிசம்பரில் அற்புதமான மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கையில் என்ன வேண்டுமோ அவை எல்லாமே நடக்கும் நல்ல காலகட்டமாக இருக்கும். நம்பிக்கை, தைரியம், புத்துணர்வு ஏற்படும். யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது. பணத்தை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். விபத்துகள் நடப்பதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை.
வழிபாடு
கிரெடிட் கார்டுகளில் லோன் வாங்குவது, அதிக செலவு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தேவைகளை சுருக்கிக் கொள்ள வேண்டும். மாணவர்கள் படிப்பில் மிக அதிகமான கவனத்தை செலுத்துவது நல்லது. கவனக்குறைவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். சந்நியாசி, ரிஷி, முனிவர்களை வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications