தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு புத்தாண்டில் கொட்டும் பணம்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் இந்த பராபவ ஆண்டில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசியினருக்கு குரு பகவான் ராசிக்குள் வந்து உச்சபலத்தை அடையப் போகிறார். 9 இல் இருக்கக்கூடிய சனி பகவானைப் பார்க்கிறார். எந்தவொரு முடிவை எடுத்தாலும் குடும்பத்தினருடன் பேசி, கலந்தாலோசித்து செய்வது நல்லது. தந்தையைப் போல, குருவை போல பல நபர்கள் சேர்ந்து உங்களுடன் இருப்பதால் அவர்களிடம் கேட்டு ஆலோசித்து எடுக்கும் முடிவுகளில் வெற்ற பெறும் யோகம் உண்டாகும்.

காசு பணம்
கடக ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும். காசு பணம் அபரிமிதமாக வந்து சேரும் அமைப்புள்ளது. பலருக்கு ஆலோசனை சொல்லக்கூடிய அமைப்பு உள்ளது. நீங்கள் சொல்லக்கூடிய ஆலோசனை மற்றவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். கல்வி மிகச் சிறப்பாக இருக்கும்.
நண்பர்கள்
நல்ல நட்பு, நண்பர்கள் கிடைக்கும் யோகம் உள்ளது. வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு அதற்கான அமைப்பு ஏற்படும். வெளிநாட்டில் வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலைகள் கிடைக்கும். தந்தையின் உடல்நிலையில் இருக்கும் பிரச்சனை தீரும். நிறைய தலைமை பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். கலைத் துறையை சேர்ந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகள் அதிகரிக்கும். குடும்ப நலன் கருதி எடுக்கும் முடிவுகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். கடற்கரையோரம் இருக்கக்கூடிய திருச்செந்தூர் முருகர் வழிபாடு உங்களுக்கு நன்மைகளை அள்ளிக் கொடுக்கும்.
திருமணம்
இந்த வருடபிறப்பில் ராசிநாதன் சந்திரன் ராகுவோடு இருக்கிறார். வருடப் பிறப்பு ஆரம்பித்து 3, 4 மாதங்களுக்கு உங்களுக்கு பெரிய அளவில் பலனை கொடுக்காது. கேது நவம்பர் மாதத்தில் ராசிக்கு வரும்போது 7 ஆம் இடத்தில் மகரத்தில் ராகு இருப்பார். சனி பகவான் பாக்கியத்தில் அமர்ந்திருப்பார் என்பதால் திருமண விஷயத்தில் முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும். ரிலேசன்ஷிப்பில் இருப்பவர்கள் அல்லது லிவிங்டூ கெதரில் இருப்பவர்கள் பிரச்சனைகள் வந்து பிரியக்கூடிய சூழ்நிலை உள்ளது.
கவனம்
குரு பகவான் கடகத்துக்கு வந்து மீண்டும் சிம்மத்துக்கு வருவார். அந்த காலகட்டத்தில் குடும்பச் சூழல்கள் சிறு பிரச்சனைகள், பண விவகாரங்களில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கூட்டுத் தொழில் செய்யத் தொடங்குவோர் உங்கள் ஜாதக நிலையை பார்த்துக் கொள்வது நல்லது. பராபவ வருடம் உங்களுக்கு அற்புதமாக இருக்கும். இருப்பினும், இளவயது கடக ராசியினர் சிறிது கவனமாக இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications