தமிழ் புத்தாண்டு பலன்: கும்பம் ராசிக்கு குபேர யோகம்.. அடுத்தடுத்து வரப்போகும் அதிர்ஷ்டம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் இந்த பராபவ ஆண்டில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கும்பம் (Kumbam Rasi Palan)
கும்ப ராசியினருக்கு ஜென்மசனி விலகியிருக்கிறது. 6 ஆம் இடத்திற்கு குரு பகவான் வருகிறார். நல்ல வருமானம் கிடைக்கும். சனி பகவான் 2ஆம் இடத்தில் அமர்ந்திருப்பது விசேஷமான அமைப்பாகும். கடந்த சில ஆண்டுகளாக தொழிலில் வளர்ச்சி இல்லாமை, குடும்பத்தில் நிம்மதியின்மை, ஆரோக்கிய குறைபாடுகள், அரசியல் தலைவருக்கு பாதிப்பு போன்றவை ஏற்பட்டிருக்கும். இந்த பாதிப்புகளில் இருந்து படிப்படியாக விடுதலை ஏற்படும்.

கடன் கிடைக்கும்
பேச்சியில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. இல்லையெனில் பேச்சினால் பெரும் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். வங்கித் துறை, நிதித் துறைகளில் வேலை கிடைக்கும் யோகம் உண்டாகும். இதயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பண வருமானம் நன்றாக இருக்கும். நல்ல கடன்கள் கிடைக்கும். தொழிலுக்கான கடன் கிடைக்கும்.
அங்கீகாரம்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். இளைய சகோதரி, மகள்களுககு திருமண யோகம் உண்டாகும். நிதி சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறும் யோகம் உண்டாகும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். ஆதி கும்பேஸ்வரர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். செல்வம் சேர்ப்பதே உங்களுடைய பிரதான நோக்கமாக இருக்கும்.
வீடு வாங்கும் யோகம்
ராசியாதிபதி தன ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுடைய எண்ணம், செயல், சிந்தனை தனத்தைப் பற்றியும், குடும்பத்தைப் பற்றியும் இருக்கும். உங்களுடைய எண்ணம், முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். இடம் வாங்குவது, வீடு வாங்குவது, முதலீடு செய்வது போன்ற அமைப்பு உள்ளது. உங்களுக்கு வேண்டிய பொருள்களை நீங்கள் சேர்த்துக் கொள்வது நல்லது.
செல்வம் சேரும்
செல்வம் சேர்க்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். மிகப்பெரிய பூரண கும்ப மரியாதை வந்து சேரும். கடந்த வருடங்களில் திருமணத்தில் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கும். திருமண விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள் எல்லாம் இந்த ஆண்டில் நீங்கும். பண விஷயத்தில் குபேர யோகம் ஏற்படும். காசு, காதல் விஷயத்தில் ஏமாற மாட்டீர்கள். வைகாசி பிறந்த பிறகு நல்ல காலம் கண்டிப்பாக பிறக்கும்.
தெளிவு ஏற்படும்
ஜென்மசனி விலகியதே உங்களுக்கு மனதளவில் ஒரு நல்ல தெளிவைத் தரும். 6 இல் குரு மறைந்தாலும் குரு பார்க்கக்கூடியது அற்புதமான இடங்களாகும். புதிய பட்டம், புகழ், பெயர் கிடைக்கும் யோகம் உண்டு. ஏற்கனவே உங்களுக்கு உயர்ந்த சிந்தனை இருக்கும். அந்த கனவுகளை நோக்கிய பயணத்தில் இருந்த தடைகள் எல்லாம் நீங்கும்.
பண வரவு
தெய்வ வழிபாடு செய்வீர்கள். தூர தேச பயணங்களை மேற்கொள்வீர்கள். மிகச்சிறந்த தன வரவு தன பாக்கியம் உண்டாகும். குடும்ப உறவுக்கிடையே இருந்து வந்த சிக்கல்கள் தீரும். திடீர் அதிர்ஷ்டம், திடீர் யோகம், திடீர் பணவரவு உண்டாகும். ஐப்பசி 27 ஆம் தேதி வரை ராசியில் ராகு, 7 இல் கேது இருப்பதால் இல்லற வாழ்க்கை, காதல் வாழ்க்கையில் விட்டு கொடுத்துச் செல்வது நல்லது.












Click it and Unblock the Notifications