தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை 1 ஆம் நாளான தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டு மாற்றம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமுமாக இருக்கும். அந்த வகையில், தமிழ் புத்தாண்டில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சுப பலன்களையும், அசுப பலன்களையும் ஏற்படுத்தும். ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் பராபவ தமிழ் புத்தாண்டு சனி மற்றும் குருவின் திரிகோண சேர்க்கையுடன் ஏற்பட்டுள்ளது.

இந்த கிரக நிலையானது 12 ராசிக்காரர்களுக்கும் பல நல்ல மாற்றங்களையும், சவால்களையும் கொண்டுவர உள்ளது. சில ராசிகளுக்கு யோக பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். அந்த வகையில் இந்த தமிழ் புத்தாண்டில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன் (Viruchigam Rasi Palan)
விருச்சிக ராசியினருக்கு சந்திரன் நீச்சமாக இருப்பதால் யோகா, மூச்சு பயிற்சியை கற்றுக் கொள்வது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கக்கூடிய அற்புதமான காலகட்டம். குழந்தை பாக்கியம், திருமண யோகம், வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, விவசாயம் செய்வது, விவசாயத்தில் புரட்சி செய்வது போன்ற அமைப்பு உள்ளது.
முன்னேற்றம்
கால்நடை விவசாயம் செய்வீர்கள். ஆடு, மாடு, கோழி, காடை போன்றவற்றை வளர்ப்பீர்கள், மாடித்தோட்டம் வைக்கும் அமைப்பு உள்ளது. குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். தைரியம் ஏற்படும். உங்களை கேலி செய்தவர்கள் எல்லாம் உங்களைத் தேடி வரும் அமைப்பு உள்ளது. 9 இல் குரு வருவதால் எல்லா விஷயங்களிலும் ஏற்றம் உண்டாகும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
ஆரோக்கியம்
குடும்பத்தில் ரத்தபந்த உறவுகளிடம் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்கள் தேக ஆரோக்கியத்தில் சளி, காய்ச்சல், சிறுநீரகத் தொற்று, மலேரியா பாதிப்பு, விஷ ஜந்துக்கள் கடிப்பது போன்ற பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பிள்ளைகளுடைய படிப்பு, உத்தியோகம், வியாபாரம், தொழிலில் இருந்த சிக்கல்கள் தீரும்.
கவனம்
பிள்ளைகள் விஷயத்தில் மேன்மை ஏற்படும். லாபம் உண்டாகும். பெற்றோர் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்துடன் சென்று குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது. உடன் பிறந்தவர்களுடன் தினந்தோறும் பேசுவது நன்மை பயக்கும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
பிரம்ம முகூர்த்தம்
இரவில் சீக்கிரம் தூங்கி பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருப்பது மேன்மையைத் தரும். அற்புதமும், குடும்பத்தில் சந்தோஷமும் ஏற்படும். பெரியவர்களுடன், உறவினர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய அற்புதமான காலகட்டம். முதலீடுகளை செய்வீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
வழிபாடு
மாயவரத்தில் உள்ள வைத்தீஸ்வரரை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். மாதத்தில் ஒரு செவ்வாய்க்கிழமை துர்க்கை வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.












Click it and Unblock the Notifications