தமிழ் புத்தாண்டு பலன்: தனுசு ராசிக்கு அஷ்டமசனியிலும் அதிர்ஷ்டம்.. பிரச்சனைகள் பறந்துபோகும் நேரம்

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2026: 2026 தமிழ் புத்தாண்டு, பராபவ வருடம் தனுசு ராசியினருக்கு எப்படி இருக்கும், எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும், வழிபட வேண்டிய தெய்வம், தொழில் வளர்ச்சி, வேலை, திருமணம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

தனுசு (Dhanusu)

தனுசு ராசியினருக்கு குரு மறைந்திருந்தாலும் தன ஸ்தானத்தையும், 12 ஆம் இடத்தையும் பார்ப்பதால் உதவிகள் கிடைக்கும். நீங்களும் உதவிகள் செய்வீர்கள். நல்ல வருமானங்கள் கிடைக்கும். நிம்மதியான தூக்கம் பெறும் அமைப்பு உண்டாகும். அஷ்டமத்தில் சனி இருந்தாலும் குரு பார்வை இருப்பதால் வீடு கட்டும் யோகம் உண்டாகும். பழைய வீடுகளை, வாகனங்களை புதுப்பிப்பீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளை சரி செய்வீர்கள். தாயின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் இருந்தாலும் குரு பார்வை இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்றம் ஏற்படும்.

tamil-puthandu-rasi-palan-what-kind-of-benefits-will-get-dhanusu-rasi-people-during-this-tamil-puth

குருவின் அருளால்

கடந்த ஆண்டுகளில் குரு பார்வை ராசிக்கு நேரடியாக இருந்ததால் நல்ல பலன்களைப் பெற்றிருப்பீர்கள். சுப செலவுகளைச் செய்யும் யோகம் உண்டாகும். புதிய வண்டி, வாகனங்கள், வீடுகளை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் படிப்புத் திறன் நன்றாக இருக்கும். பிள்ளைகளுக்கு வெளியூர், வெளிநாடு, வெளிமாநிலம், பயணங்கள் நன்றாக இருக்கும். கடன் கிடைக்கும். பாக்கிய ஸ்தானத்தில் கேது இருப்பதால் தந்தை ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது.

பாக்கியத்தில் கேது இருப்பதால் தந்தையின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தந்தை வழி சொத்துகளில் வழக்குகள், தொந்தரவு வரும் வாய்ப்புள்ளது. நண்பர்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் உதவி கெட்ட பெயர் வாங்கும் அமைப்பு உள்ளது. வேலை, வீடு கட்டுதல், வண்டி வாகனங்கள் வாங்கும் வரை மற்றவர்கள் உங்களை போற்றி புகழ்வார்கள். வாங்கிய பிறகு அவப்பெயர் ஏற்படும். பெண் கொடுத்தாலும், எடுத்தாலும் சிறிது தள்ளி இருப்பது நல்லது.

ஆரோக்கியம்

பெற்றோர், பெரியோர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகளுக்கு பண விரயம் ஏற்படும் சூழல் உள்ளது. குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். தொழில், உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும். உயர் பதவிகள் பெறும் வாய்ப்புள்ளது. உணவு விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கவனம் தேவை. ஜீரண கோளாறு வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.

வீண் விரய செலவுகள் ஏற்படும். சுப விரயங்களைச் செய்து கொள்வது நல்லது. வீடு கட்டக்கூடிய அமைப்பு உள்ளது. விவசாயத்தில் இருப்பவர்களுக்கு பூமி, மனை, வண்டி, வாகனத்தில் நல்ல லாபம் ஏற்படும். குடும்பத்தில் இருக்கும் நபர்களால் திடீர் மருத்துவ செலவுகள் வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. உணவு, உறக்கம், ஓய்வு விஷயத்தில் கவனம் செலுத்தினால் பெரிய விரயம் ஏற்படாது.

வழிபாடு

வெளிநாட்டுக்கு சென்று படிக்கும் அமைப்பு உள்ளது. தைரியம், தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சித்தர்களின் ஜீவ சமாதிக்குச் சென்று தரிசனம் செய்வது முன்னேற்றத்தை ஏற்படுத்தும். திருக்கொள்ளிக்காடு சென்று வழிபாடு செய்வது, அனுமன் வழிபாடு, அனுமன் சாலிஷா கேட்பது நன்மை பயக்கும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது தான் உங்களுக்கு சிறந்த பரிகாரம்.

தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். பழைய கடன்களை அடைக்கும் யோகம் உண்டு. குடும்பத்திலும் வெளிவட்டாரத்திலும் கொடுத்த வாக்கை காப்பாற்றும் அமைப்பு உள்ளது. ஞாயிற்றுக்கிழமையில் பசு மாடுகளுக்கு உணவு அளிப்பது தெய்வ ஆசிர்வாதத்தை தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+