தமிழ் புத்தாண்டு பலன்: ரிஷப ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. வேற லெவல் முன்னேற்றம் கன்ஃபார்ம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2026: 2026 தமிழ் புத்தாண்டு, பராபவ வருடம் ரிஷப ராசியினருக்கு எப்படி இருக்கும், எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும், வழிபட வேண்டிய தெய்வம், தொழில் வளர்ச்சி, வேலை, திருமணம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம் (Rishabam)
ரிஷப ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். குரு பகவான் 7 ஆவது ஸ்தானத்தைப் பார்ப்பதால் திருமண யோகம் உண்டாகும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கு சிறு சிறு உபாதைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அவர்களுடைய ஆரோக்கியம், சோம்பல் தன்மை ஏற்படும் என்பதால் பார்த்துக் கொள்வது நல்லது. தொழிலை விரிவுபடுத்த கடன்களை பெரிய அளவில் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

யோகம்
நல்ல ஜீவனத்தையும், சேமிப்புத் திறனையும் கொடுக்கக்கூடிய காலகட்டம். மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக இருக்கும். இதுவரைக்கும் சாதிக்க முடியாத விஷயங்களை எல்லாம் சாதிக்கும் யோகம் உண்டு. சொந்த வீடு கட்டுவதற்கான அமைப்பு உள்ளது. வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை பலப்படும். தாய், தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். அவர்களுடைய உடல் உபாதைகளுக்கு நல்ல மருத்துவம் கிடைக்கும்.
குழந்தை பாக்கியம்
திருப்பதி ஏழுமலையான் கோயில், வீட்டின் அருகில் இருக்கும் மகாலட்சுமியின் கோவிலுக்கு குங்குமத்தை வாங்கிக் கொடுப்பது ஏற்றத்தைத் தரும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். குரு பலன் அற்புதமாக இருப்பதால் இந்த வருடத்தில் கண்டிப்பாக திருமணம் நடக்கும் யோகம் உண்டு. பெளர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வது மேன்மையைத் தரும்.
ஆசைகள் நிறைவேறும்
நீண்ட நாட்களாக இருந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேற்றிக் கொடுக்கக்கூடிய ஆண்டாக இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நிறைய வெற்றிகள் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியும், உத்வேகமும் உண்டாகும். அரசாங்க உத்தியோகத்திற்கு முயற்சிப்பவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும். வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, சம்பள உயர்வு, கெளரவம் ஏற்படும். மனதிற்குப் பிடித்த வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.
வீடு கட்டும் யோகம்
வீடு கட்டுவது, வாங்குவது, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். தன்னம்பிக்கை ஏற்படும். வேலைக்குச் சென்றவர்கள் சொந்தமாக தொழில் செய்யும் யோகம் உண்டாகும். இந்த ஆண்டை நீங்கள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டால் கட்டாயம் வாழ்க்கையில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். நல்ல முறையில் முன்னேற்றம் ஏற்படும்.
வழிபாடு
ஸ்ரீரங்கநாதரை வழிபாடு செய்து வருவது ஏற்றத்தை ஏற்படுத்தும். வாரத்தில் ஒருமுறை மகாலட்சுமிக்கு வெண்தாமரை கொடுப்பது நன்மை பயக்கும். ரிஷப ராசிக்கு சனி இரண்டரை ஆண்டுகளுக்கு வாக்கியத்தின்படி இருப்பதால் நிறைய லாபம் கிடைக்கும். இந்த சமயத்தில் நீங்கள் செட்டிலாகாவிட்டால் வேறு எந்தவொரு நேரத்தில் செட்டிலாக முடியாது. அதனால், வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. 8 மணி நேரம் உழைப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பது நன்மை பயக்கும்.
கெளரவம்
ஆரோக்கியத்தில் முதுகு, கழிவு தொடர்பான விஷயங்களை பார்த்துக் கொள்வது நல்லது. அஷ்டலட்சுமி கடாட்சம் உண்டாகும். எதிரிகள் எதைக் கூறினாலும் கவலைப்படாமல் இருப்பது நல்லது. பெற்றோர், பெரியோருக்கு கையெழுத்து போடும் விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெரிய கெளரவம் தேடி வரும். அரசியலமைப்பில் ஏற்றம் காணப்படும். மீடியா துறையினர், படைப்பாளிகள், அரசுத் துறைகளில் இருப்பவர்களுக்கு, பெண்களுக்கு அனுகூலம் காணப்படும். திருமண முயற்சிகள் கைகூடும். சுப விஷயங்கள் நடக்கக்கூடிய அற்புதமான அமைப்பு உள்ளது. தொழில், குடும்ப அமைப்பு நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications