தை மாத பலன் 2026: ராஜயோகம் பெறும் சிம்ம ராசி.. தொட்டதெல்லாம் ஜெயம்.. ஒரு விஷயத்தில் கவனம்

Subscribe to Oneindia Tamil

தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

மகர மாதம்

சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். மகர மாதம் என்றும் கூறப்படுகிறது. சூரியனின் தேர் பாதை தெற்கு திசையில் இருந்து வடக்கு திசைக்கு மாறும் காலம் தான் தை மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஐதீகம். மகாபாரதத்தின் பிதாமகரான பீஷ்மர் தை மாதத்தில் தனது உயிர் போவதற்கு அம்பு படுக்கையில் காத்துக் கொண்டிருந்தாராம். அந்த அளவுக்கு சிறப்பு பெற்றது தை மாதம். தேவர்களின் உதயகாலம் தை மாதம்.

thai-matha-palan-what-kind-of-benefits-will-get-simmam-rasi-people-during-this-motnh

சூரியன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக தை மாதம் உள்ளது. சூரியன் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை. தை மாதம் 1 ஆம் தேதியான ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக ராசியில் சித்த யோகத்தில் அமையக்கூடிய நாளே பொங்கல் பண்டிகை. இந்தப் பண்டிகையின் விசேஷமே சூரியன், விவசாயிகள், கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவதாகும்.

பொங்கல் வைக்க நல்ல நேரம்

பொங்கல் தினத்தன்று காலையில் நேரமாக எழுந்து குளித்து முடித்து புத்தாடை அணிந்து சுவாமி கும்பிட்டுவிட்டு, சூரிய பகவானை வழிபாடு செய்து கிழக்கு நோக்கி அமர்ந்து பொங்கல் சாப்பிட வேண்டும். தை மாதத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் பொங்கல் வைக்கலாம். காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் பொங்கல் வைத்து இறைவனை வழிபாடு செய்வது நன்மை பயக்கும். சுக்கிர ஓரை, புதன் ஓரையாக இருந்தாலும் குளிகை நேரத்தில் பொங்கல் வைப்பது விசேஷமாகும்.

சிம்மம் தை மாத ராசி பலன் (Simmam)

சிம்ம ராசிக்காரர்களுக்கு வீட்டில் தீ விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் தீ தொடர்பான சிறிய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உடம்பில் உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கிட்னியில் கல், நரம்புகள் பாதிப்பு, ஹிரண்யா தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும், முடி கொட்டும். நன்றாக எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது.

வெற்றி மேல் வெற்றி

எதிர்ப்புகள் நிறைய இருக்காது. அதனால், ஜெயிக்கும் யோகம் உண்டாகும். வீட்டில் தங்கமுடியாத சூழல் ஏற்படும். அந்த அளவுக்கு நிறைய பயணங்கள் வரும். கோர்ட், கேஸ், வழக்கு, வம்பு, பிரச்சனை இருந்தாலும் அதில் நீங்கள் ஜெயிப்பீர்கள். உங்கள் எதிரிகள் உங்களிடம் சரணடையக் கூடிய காலகட்டமாக இருக்கும்.

சாதகமான சூழல்

ராஜகிரகங்கள் அமரும்போது வெற்றி உங்கள் வசமாகும். போராட்டம் செய்தாலும் அதில் நீங்கள் ஜெயிக்கும் யோகம் உண்டாகும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எந்த விஷயத்தில் இதுவரை தோல்வி அடைந்தீர்களோ அந்த விஷயம் உங்களுக்கு சாதகமாக முடியும். விட்டுக் கொடுக்கும் எண்ணம் ஏற்படாது

முன்னேற்றம்

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, திருமண யோகம் பெறுவது போன்ற யோகம் உண்டாகும். வீடுகளை விஸ்தீரணம் செய்வீர்கள். புதிய லோன்கள் கிடைக்கும். எல்லா விதமான யோகங்களும் உங்களுக்கு உண்டு. அற்புதமான முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். ஆனால், வீட்டில் மட்டும் தங்கக்கூடிய சூழல் வராது.

வழிபாடு

சுதர்சனர் வழிபாடு செய்வது, சுதர்சனர் சக்கர ராஜ பூஜை செய்வது பெரிய மாற்றமும், ஏற்றமும் ஏற்படும். துர்க்கைக்கு தீபமேற்றி வழிபாடு செய்வது அனுகூலத்தை தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+