சபரிமலை ஐயப்பன் கோவிலில் 26ல் மண்டலபூஜை - தங்க அங்கி ஊர்வலம் நாளை தொடங்குகிறது

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 26ஆந்தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளதை முன்னிட்டு தங்க அங்கி ஊர்வலம் நாளை தொடங்குகிறது.

Subscribe to Oneindia Tamil

சபரிமலை: சபரிமலை அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் வருகிற நாளை தொடங்குகிறது. காலை 6 மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்படும் ஊர்வலம், மாலையில் ஓமல்லூர் ரத்தகண்ட சுவாமி கோவிலை வந்தடைகிறது. கொரோனா பரவல் காரணமாக வழக்கமாக தங்க அங்கிக்கு பக்தர்கள் கொடுக்கப்படும் வரவேற்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மண்டல பூஜை தினத்தில் ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். 453 பவுன் எடை கொண்ட அந்த தங்க அங்கி பத்தனம் திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜைக்கு மட்டும் அந்த நகைகள் அங்கிருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்துவரப்படும்.

Thanka Anki procession from Aranmula Parthasarathy Temple to Sabarimala on December 22

சபரிமலை அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் வருகிற நாளை தொடங்குகிறது. காலை 6 மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்படும் ஊர்வலம், மாலையில் ஓமல்லூர் ரத்தகண்ட சுவாமி கோவிலை வந்தடைகிறது. பின்பு அங்கு தங்கிவிட்டு 23ஆம் தேதி காலை 8 மணிக்கு புறப்படுகிறது.

அன்றைய தினம் மாலை கோனி முழிங்கமங்கலம் கோவிலுக்கு சென்றடையும் தங்க அங்கி ஊர்வலம், 24ஆம்தேதி காலை அங்கிருந்து புறப்பட்டு, மாலையில் ராணி பெருநாடு தர்ம சாஸ்தா கோவிலுக்கு சென்றடையும். 25ஆம்தேதி காலை அங்கிருந்து புறப்படும் ஊர்வலம் பம்பா கணபதி கோவிலை வந்தடையும். அங்கு பக்தர்கள் தரிசனத்திற்காக தங்க அங்கி வைக்கப்பட்டு பின்னர் பிற்பகல் 3 மணிக்கு அங்கிருந்து சன்னிதானத்திற்கு புறப்படும்.

அன்றைய தினம் மாலை 5 மணிக்கு சரங்குத்திக்கு வந்தடையும் தங்க அங்கிக்கு மேள தாளங்கள் முழங்க வரவேற்பு கொடுக்கப்படும். பின்னர் சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும்.

கொரோனா பரவல் காரணமாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. சபரிமலை வரும் பக்தர்களுக்கு மட்டுமின்றி அங்கு பணிபுரியும் ஊழியர்கள், போலீசார், தேவஸ்தான ஊழியர்களுக்கும் 14 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

தங்க அங்கி ஊர்வலத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தங்கி அங்கி கொண்டு செல்லப்படும் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

26ஆம் தேதியன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற உள்ளது. சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் ஐயப்பனை தரிசனம் செய்ய 6000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜை நிகழ்வுகளுக்குப் பின்னர் அன்றைய தினம் இரவு 9 மணிக்கு சபரிமலை கோவில் நடை அடைக்கப்படும். மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை மீண்டும் டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+