Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோடீஸ்வரனாக மாற்றும் கஜகேசரி யோகம்.. இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கையே மாறப் போகுது

Subscribe to Oneindia Tamil

கஜகேசரி யோகம்: சனிப்பெயர்ச்சியை தொடர்ந்து இந்த வருடம் மிகவும் எதிபார்க்கப்பட்ட ராகு - கேது மற்றும் குருப்பெயர்ச்சி முடிந்துவிட்டது. இந்நிலையில் குரு - சந்திரன் சேர்க்கையால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. இந்த அற்புதமான யோகத்தால் பயனடைய போகும் ராசிகள் குறித்து பார்க்கலாம்.

மே 14 ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசிக்குள் பெயர்ச்சி ஆகியுள்ளார். மே 29 ஆம் தேதி சந்திர பகவான் மிதுனம் ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். இது 12 வருடங்களில் நடைபெறும் அரிதான நிகழ்வாகும். குரு - சந்திரன் இணைவை கஜகேசரி யோகம் என்றழைப்பார்கள். இதனால் பயனடையக் கூடிய 3 ராசிகளை இந்தக் கட்டுரையில் காணலாம்.

Gajakesari Zodiac

ரிஷபம்

உங்கள் ராசியில் இருந்து இரண்டாம் வீட்டில் இந்த கஜகேசரி யோகம் நடைபெறுவதால், நல்ல அற்புதமான பலன்களை பெறுவீர்கள். கடந்த கால தடைகள் நிவர்த்தியாகி நல்ல மாற்றங்கள் உண்டாகும். உத்யோகம் மற்றும் தொழில் சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். பண வரவு திருப்தியாக இருக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு நிச்சயம் உண்டு. தொழிலில் நல்ல லாபம் இருக்கும். கடன் சுமை குறையும். வறுமை நீங்கி, வசதி வாய்ப்புகள் கூடும். உத்யோகம், தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் நிச்சயம் உண்டு.

சிலருக்கு கோடீஸ்வர யோகம் உள்ளது. சுப காரிய தடைகள் நீங்கி, திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆவதற்கான வாய்ப்பும் உள்ளது. வாழ்க்கையை அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்த்துவதற்கான அனைத்து யோகங்களும் கைக்கூடி வரும்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்கு உங்களின் எட்டாம் வீட்டில் இந்த கஜகேசரி யோகம் நடைபெறுகிறது. வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை பெறும் காலமாக இது இருக்கும். உங்களின் செயல், எண்ணம் எல்லாவற்றிலும் பாசிட்டிவான மாற்றம் காணப்படும். கடந்த காலங்களில் தடைபட்ட அனைத்து காரியங்களும் படிப்படியாக நிறைவேறும்.

பழைய பாக்கி வசூலாகும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். திடீர் அதிர்ஷ்டத்தால் பணக்கார யோகம் உண்டாகும். வாழ்க்கை துணையால் ஆதாயம் உள்ளது. பூர்விக சொத்தில் அணுகூலம் அடைவீர்கள். பொருளாதாரத்தில் நல்ல உயர்வு உண்டு. உத்யோகம், தொழில், குடும் அனைத்திலும் நற்பலன்கள் கிடைக்கும்.

கும்பம்

கும்பம் ராசிக்கு உங்களின் ஐந்தாவது வீட்டில் இந்த கஜகேசரி யோகம் நடைபெறுகிறது. ஜென்ம சனி விலகியுள்ள நிலையில், கஜகேசரி யோகத்தால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் நீண்ட காலமாக இருந்தப் பிரச்னைகள் நிவர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும்.

கல்வியில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணப்படும். வெளி மாநிலம், வெளி நாடு சென்று உயர்க்கல்வி படிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் அற்புதமாக இருக்கும். எதிர்பாராத நேரத்தில் பண வரவு கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்தப் பிரச்னைகள் நீங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+