Rasi Palan This Week: துலாம் ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. நண்பரால் வரும் ஆபத்து.. கவனம்
Thulam Rasi Palan: ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை, சித்திரை 14 ஆம் தேதி முதல் சித்திரை 20 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் மேஷத்திற்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை, சித்திரை 14 ஆம் தேதி முதல் சித்திரை 20 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன் (Thulam Rasi Palan)
துலாம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு யோக பலத்தை அதிகமாகப் பெறும் காலகட்டம். மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவது, உங்கள் விஷயத்தில் மற்றவர்கள் தலையிடாமல் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். நிறைய பயணங்கள் மேற்கொள்வீர்கள். நண்பர்கள், உறவினர்களைச் சந்திக்கும் யோகம் உண்டாகும்.
சிக்கல் தீரும்
எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும். வியாபாரம், தொழில், உத்தியோகம், படிப்பு தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். பயணங்கள் வந்தால் எடுத்துக் கொள்வது நல்லது. வேற்று மொழி மனிதர்களால் நல்ல ஆதாயங்கள் ஏற்படும். இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் படிப்படியாக தீரும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
செல்வாக்கு கூடும்
உங்களுடைய செல்வாக்கு கூடும். பாக்கிய ஸ்தானத்தில் இந்த வாரத்தில் குரு வரப்போகிறார். லாப ஸ்தானத்தில் சுக்கிரன் கேது இருக்கிறார். மூத்த பெண்கள், வேற்று இன பெண்களால் நல்ல ஆதாயம், தகவல்கள் வந்து சேரும். அரசியல்வாதிகளுடைய தொடர்புகள் ஏற்படும். 29, 30 ஆம் தேதிகளில் டென்ஷன், தூக்கம் கெடுவது போன்ற நிலைமைகள் இருக்கும்.
ஆதாயம்
உச்சம் பெற்ற சூரியன், புதனின் பார்வை இருப்பதால் நிறைய விஷயங்களை சாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். சரியாகப் பேசக்கூடிய நிலைமைகள் இருக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். அமோகமான வாரமாக இருக்கும். வியாசராஜரை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். நண்பர்களால் ஆதாயமும், ஆபத்தும் உண்டு.
வழிபாடு
நவக்கிரகத்தில் இருக்கும் சனி பகவானுக்கு விளக்கு போட்டு வழிபாடு செய்வது வருவது ஏற்றத்தைத் தரும். அபிராமி அந்தாதியில் இருக்கும் 90 ஆவது பாடலை கேட்டு வருவது நன்மையை ஏற்படுத்தும். சந்தோஷம் 80 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 70 சதவீதம் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications