Thulam Rasi Palan: துலாம் ராசிக்கு கார்த்திகை மாதத்தில் வரும் நல்ல மாற்றம்.. காத்திருக்கு அதிர்ஷ்டம்
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். கார்த்திகையில் நிறைய விசேஷங்கள் நடக்கும். ஐயப்ப பக்தர்கள் லட்சக்கணக்கானோர் மாலை போடும் காலம். கார்த்திகை தீபம் வரும் மாதம். நவம்பர் 17 முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரையிலான கார்த்திகை மாதம்.

கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை தீபம் மிகவும் பிரதானமானதாகும். வீட்டில் ஒற்றைப் படையில் தீபமேற்றுவது நன்மை பயக்கும். கார்த்திகை மாதம் முழுவதும் சோமவாரம் எனும் திங்கள்கிழமை விசேஷமான காலமாகும். சிவன் கோயிலில் நடைபெறக்கூடிய சங்காபிஷேகத்தில் கலந்துகொள்வது, அபிஷேகத்தில் கலந்துகொள்வது நன்மையை ஏற்படுத்தும்.
பரிகாரம்
கடன் குறைய வேண்டும், தேக ஆரோக்கியத்தில் பலம் பெற வேண்டும் என்றால் கோயிலுக்கு பழங்கள் வாங்கிக் கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும். கடன் குறைய வேண்டும் என்றால் திங்கள்கிழமை தோறும் பச்சரிசி வாங்கிக் கொடுப்பது நன்மை பயக்கும். பஞ்சாங்கத்தின்படி, கார்த்திகை மாதத்தில் கன மழை பெய்யும். தமிழகம் முழுவதும் வெள்ளக் காடாக மிதக்கும் சூழ்நிலை ஏற்படும். இந்த கார்த்திகை மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு கனிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவது நல்லது. வீட்டிலும், வெளிவட்டாரத்திலும் கொடுத்த வாக்கை காப்பற்றக்கூடிய யோகம் உண்டாகும். துணையுடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவர்களுடன் இனிமையான நேரத்தை செலவிடுவது நல்லது. சந்தோஷமாக இருக்கக்கூடிய அமைப்பு. பழைய கடன்களை அடைக்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும்.
நல்ல மாற்றம்
இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்துவிதமான மாற்றங்களும் ஏற்படும். மன அழுத்தம் நீங்கும். ராகு இருப்பதால் பிள்ளைகள் விஷயத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படுத்தும். ஆனால், அதனை அவர்களே சரிசெய்வார்கள். கவலைப்படத் தேவையில்லை. டிசம்பர் மாதம் முதல் தெம்பாக இருக்கும் சூழ்நிலை ஏற்படும்.
வழிபாடு
அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 43, 50, 54, 59, 75 ஆவது பாடல்களை படிப்பது நல்ல மேன்மையைத் தரும். பார்வதி தேவி வழிபாடு, சிவனுக்கு சோமவாரத்தில் அபிஷேகப் பொருள்களை வாங்கிக் கொடுப்பது, தீபத்துக்கு நெய் வாங்கிக் கொடுப்பது நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். காது, மூக்கு, தொண்டை, அசிடிட்டி தொடர்பான பிரச்சனைகள், பற்கள் தொடர்பான உபாதைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
தொட்டது ஜெயம்
தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். கடன்களை அடைத்து முடிக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்துடன் நேரம் செலவிடுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்படும். இதுவரை இருந்து வந்த இழுபறியான நிலைமைகள் மாறி அடுத்தடுத்து நல்ல காரியங்கள் நடக்கும்.












Click it and Unblock the Notifications