Rasi Palan This Week: காசு பணம் துட்டு மணி மணி.. துலாம் ராசிக்கு பண மழையில் நீச்சலடிக்கும் யோகம்
Thulam Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த தை மாதத்தில் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன் (Thulam Rasi Palan)
துலாம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு வீடு, மனை, வாகனம், கட்டடம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். அமோகமாக நற்பலன்கள் கிடைக்கும் காலகட்டமாக உள்ளது. குவாரி ஒப்பந்தம் கிடைப்பது, மெட்டல் வியாபாரம் செய்வது, அரசியல்வாதிகளின் நட்பு கிடைப்பது போன்ற யோகம் உண்டாகும். புரியாத விஷயங்கள் எல்லாம் இனி புரிய வரும்.
காதல் கைகூடும்
பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன், புதன் சேர்ந்திருப்பதால் காதல் கைகூடும். குழந்தை பாக்கியம் உண்டாகும். இடுப்பு பகுதி, கால், நரம்பு பிசங்குவது போன்ற பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. 6 ஆம் இடத்தில் சனி இருப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். இந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் பயணங்களை மேற்கொள்வீர்கள். நினைத்த காரியங்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள்.
பண வரவு கொட்டும்
பணம், பொருளாதார வரவு அற்புதமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். யோக பலன்கள் அதிகளவில் நடக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். சுப விரயங்களைச் செய்து மகிழ்வீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். மனதில் இருந்து வந்த வருத்தங்கள் அனைத்தும் நீங்கும்.
கவனம்
துணை விஷயத்தில் மனம் விட்டுப் பேசுவது, இணக்கமாகச் செல்வது நன்மை பயக்கும். சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. நல்ல உறவுகளையும், நட்புகளையும் கெடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. ஹீமோகுளோபின், ரத்தத்தில் பரவும் தொற்று நோய் விஷயங்களில் கவனம் தேவை. குளிர்ச்சியான பொருள்களைத் தவிர்ப்பது நன்மை பயக்கும்.
வழிபாடு
பணவரவு நன்றாக இருக்கும். தொழில், வியாபாரம், படிப்பு, பயணங்களில் அனுகூலம் ஏற்படும். ஏற்றத்தின் அளவு பன்மடங்காக உயரும் நல்ல காலகட்டம். வாகன மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறும். தொழில், வியாபாரம் கைகொடுக்கும். பணம் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications