Thulam Rasi Palan: துலாம் ராசிக்கு இந்த வாரம் செம லக்.. தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்!
Thulam Rasi Palan: மே 11 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை, சித்திரை 28 ஆம் தேதி முதல் வைகாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த வாரம் சித்திரை முடிந்து வைகாசி மாதம் பிறக்கிறது. அந்த வகையில், மே 11 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை, சித்திரை 28 ஆம் தேதி முதல் வைகாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன் (Thulam Rasi Palan)
துலாம் ராசியினருக்கு இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்து விதமான முன்னேற்றங்களும் ஏற்படும். கோபம் இல்லாமல் இருப்பது நன்மை பயக்கும். தனிப்பட்ட விதமான எல்லா சிக்கல்களும் தீரும். உத்தியோகத்தில் ஏற்றம் பெறுவீர்கள். எதிரிகளை வெல்லும் பாக்கியம் உண்டாகும். தொலைதூரப் பயணங்கள், உள்ளூர் பயணங்கள், தெய்வ மார்க்க பயணங்கள் ஏற்படக்கூடிய காலகட்டம்.
அனுகூலம்
நிறைய ஏற்றங்களும், அற்புதமும் ஏற்படும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுகூலம் காணப்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பெரிய சந்தோஷமும், ஏற்றமும் ஏற்படும். பாக்கிய ஸ்தானம் நன்றாக இருக்கிறது. வெளியூர் பயணம், வெளிநாடு பயணம், காதல் கைகூடும் யோகம் உண்டாகும். நல்ல நட்பு உருவாகும். பரிசுகள் கிடைக்கும்.
செவ்வாய், குரு பலம்
பலவிதமான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும். தள்ளிப் போகும் என்று நினைத்த விஷயங்களை எல்லாம் இந்த காலகட்டத்திலேயே செய்து முடிப்பீர்கள். செவ்வாய் மற்றும் குருவின் பலம் இருப்பதால் திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பணம் கொடுத்து ஏமாறும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. அரசு அதிகாரிகள், அரசியலில் இருப்பவர்கள் பிரச்சனைகளில் சிக்கும் வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை தேவை.
வழிபாடு
உணவு மற்றும் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. மற்றபடி பெரிய யோகத்தை கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். தினந்தோறும் முருகனை வழிபாடு செய்வது வெற்றியையும், முன்னேற்றத்தையும் கொடுக்கும். தைரியமாக எல்லா காரியங்களையும் முடிக்கும் யோகம் உண்டு. சந்தோஷம் ரீதியாக 75 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 100 சதவீதம் முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
துர்க்கை வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். முதுகுத் தண்டுவடம் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். துர்க்கை கவசம் படிப்பது, அபிராமி அந்தாதியை கேட்பது நல்ல மேன்மையைக் கொடுக்கும்.
-
ஆனி மாதத்தில் மிதுன ராசிக்கு ராஜயோகம்.. தொழில், பணவரவில் அதிரடி முன்னேற்றம்! -
June Rasi Palan 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் எப்படி? -
ஆனி மாத பலன்: ராஜயோகத்தைப் பெறும் மேஷம் ராசி.. இந்த மாதத்தை தவற விட்டுடாதீங்க -
ஆனி மாத பலன்: அடித்தாடும் ரிஷப ராசி.. குரு, சனியில் அருளால் பண மூட்டையை அள்ளும் யோகம் -
ஜூன் 2026 அதிர்ஷ்ட ராசிகள்: குரு, சுக்கிரன், செவ்வாய் அருளால் முன்னேற்றம் காணும் 5 ராசிகள்! -
குரு - சுக்கிரன் இணைவு: கஜலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! -
Rasi Palan This Week: மீன ராசியினரே கவனம்.. சனி தரும் முக்கிய பலன்கள்.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம்












Click it and Unblock the Notifications