அடிச்சான் பாரு அப்பாய்ன்மென்ட் ஆர்டரு - துலாம் ராசிக்கு சூப்பர் பலன் தரும் மாசி மாதம்
மாசி மாதம்: தமிழ் மாதங்களின் அடிப்படையில் நாம் தற்போது தை மாத இறுதியில் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில்(13.2.2025 தேதி முதல் 14.3.2025 தேதி வரை) கிரகங்களின் மாற்றம் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் துலாம் ராசியில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்களை காணலாம்.
உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி, புதன், சூரியன் ஆகிய 3 கிரகங்கள் உள்ளன. ஆறாம் இடமான சத்ரு ஸ்தானத்தில் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உச்சம் பெற்று ராகுவுடன் இணைந்திருக்கிறார்கள். ராசிக்கு எட்டாம் இடத்தில் குரு பகவான் உள்ளார். சுக்கிரன் - குரு பரிவர்த்தனை நடைபெறவுள்ளது. 6 மற்றும் 8 ஆகிய இடங்கள் பலமடைகின்றன. ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் செவ்வாய் வக்கிரமாக அமர்ந்துள்ளார்.

ராசிக்கு 12 ஆம் இடமான விரய ஸ்தானத்தில் கேது அமர்ந்துள்ளார். மாசி 1 ஆம் தேதி (13.2.2025) உங்கள் ராசிக்கு 11 ஆம் இடத்துக்கான அதிபதியான சூரிய பகவான் ஐந்தாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். இது நல்ல பலன்களை தரும். மாசி 12 ஆம் தேதி (24.2.2025) உங்கள் ராசியில் ஒன்பதாம் இடத்தில் செவ்வாய் வக்கிர நிவர்த்தி அடைகிறார். மாசி 15 ஆம் தேதி (27.2.2025) புதன் உங்களின் ஐந்தாம் இடத்தில் இருந்து ஆறாம் இடத்துக்கு பெயர்ச்சியாக உள்ளார்.
மீனம் ராசியில் புதன் நீசமாகப் போகிறார். அதே ராசியில் சுக்கிரன் உச்சத்திலும், குரு பரிவர்த்தனையால் நீட்சபங்க ராஜயோகம் கிடைக்கும். இதுவும் நல்ல விஷயம். மாசி 17 ஆம் தேதி (1.3.2025)உங்கள் ராசிநாதன் சுக்கிரன் வக்கிரமாக போகிறார். சுக்கிரனின் நகர்வையும் முக்கியமாக பார்க்க வேண்டும்.
சூரியன் இதுநாள் வரை நான்காம் இடத்தில் இருந்து ஐந்தாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆவதால் பலவித நன்மைகளை பெறப் போகிறீர்கள். இதனால் குழந்தை பேறு இல்லாமல் சிரமப்பட்டு வந்தவர்களுக்கு, இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. அரசு, அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மனதுக்கு விரும்பிய மாற்றங்கள் ஏற்படும். உங்களின் ஐந்தாம் அதிபதியான சனியை சூரியன் அஸ்தமம் செய்வதால் காதல் அமைப்புகளில் வெற்றி கிடைக்கும். நோய், கடன் அமைப்புகளில் சுக்கிரன் உள்ளார். இந்த காலத்தில் நீங்கள் முயற்சி செய்யும் கடன்கள் கிடைக்கும்.
வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடு, வெளிமாநிலங்களில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுக்கிரன் வக்கிரமான பிறகு எதிரிகளை எளிதில் வெற்றி பெறுவீர்கள். அப்போது உங்கள் உடல்நலத்தில் முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு, திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
பேன்ஸி ஸ்டோர், பந்தல் மற்றும் மேடை அமைப்போர், அழகு கலை நிபுணர், கலைத்துறை சேர்ந்தவர்களுக்கு சுக்கிர பகவான் நல்ல பலன்களை கொடுப்பார். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், சமூகத்தில் உயர் பொறுப்பில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். வெளிநாடுகளில் உள்ளவர்கள் குடும்பத்துடன் இணைவார்கள்.
சமூகத்தில் உங்களுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். தந்தை வழி சொத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். தந்தை உடல்நலத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு பிறகு சரியாகும். பொறுப்புகள் அதிகரித்து அதன் மூலம் வருவாயும் பெருகும். புதன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும். குல தெய்வத்தின் ஆதரவு உருவாகும்.
பணம் கொடுக்கல் வாங்கல் வேண்டாம். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. கணவன் - மனைவி உறவில் விரிசல் ஏற்படும். தொழில் பார்ட்னர்களுடன் கவனமாக இருக்க வேண்டும். தந்தை - மகன் உறவிலும் சில கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்யோகம், தொழிலில் பணிச்சுமை, அலைச்சல் அதிகரிக்கும்.
மாத இறுதியில் சின்ன சின்ன பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடற்சூடு, சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்தவரை உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும். உங்களின் உடல்நலத்திலும் கவனமாக இருப்பது அவசியம். சனி அஸ்தமனமாவதால் தாயாரின் உடல் நலத்திலும் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.
மனரீதியான சில சங்கடங்கள் வந்து செல்லும். தன்னம்பிக்கை சற்று குறையும். வண்டி, வாகனம், நிலம், வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் இருப்பது நல்லது. அதில் அதிகம் கவனமாக இருக்க வேண்டும். அதிகாலை சூரியன் உதயம் மற்றும் மாலை சூரிய அஸ்தமனம் ஆகும்போது வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்துங்கள்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications