September Matha Palan: துலாம் ராசியை சுழற்றி அடிக்கும் கிரகங்கள்.. இந்த விஷயத்தில் மட்டும் கவனம்
செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கியுள்ளது. இந்த செப்டம்பர் மாதத்தில் பல்வேறு முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறுகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
செப்டம்பர் மாதத்தில் மூன்று முக்கிய பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. முதலில் செப்டம்பர் 13, 14 ஆம் தேதி சுக்கிர பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அதற்கு அடுத்ததாக செப்டம்பர் 17 ஆம் தேதி புரட்டாசி மாதம் ஆரம்பிப்பதால் சூரியனும், அதற்கு முன்தினம் புதனும் கன்னி ராசிக்குப் பெயர்ச்சி ஆகின்றனர். அங்கு சனி வக்கிரமாகி பார்வை பலத்தை கொடுக்கவுள்ளார்.

இந்த கிரக மாற்றத்தின் காரணமாக செப்டம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு மூன்று ராசிகளுக்கு அதீத அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டாகும். வேலையில் பளு, அழுத்தம் வருவதற்கான வாய்ப்புள்ளது. சிறு சிறு அடிபடுதல், அரசுத் துறையில் அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு, கல்வி நிறுவனம், மருத்துவர்களுக்கு பாதிப்புகள், பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதனால், செப்டம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. செப்டம்பர் 16 ஆம் தேதிக்குப் பிறகு அரசுத் துறை அதிகாரிகளுக்கு, அரசாங்கத்துக்கு பெரும் பிரச்சனை வருவதாக வாய்ப்புள்ளது.
இந்த செப்டம்பர் மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்
துலாம்
துலாம் ராசி, லக்கினக்காரர்களுக்கு லாப ஸ்தானம் 11 ஆம் இடத்தில் 4 கிரகங்கள் அமர்ந்திருப்பது நல்ல நன்மைகளைக் கொடுக்கும். அதேசமயம் நண்பர்களால் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. பெண் நண்பர்களால் பாதிப்புகள் வரும். பெண்களுக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். பணத் தட்டுப்பாடு ஏற்படும். நிறைய நண்பர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
மாற்றங்கள் வரும்
ராசி லக்கினத்தில் செவ்வாய் வரும்போது பொதுவாகவே இடமாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றம், படிப்பு மாற்றம், வீடு மாற்றம், அதிகார மாற்றம், புதிய பொறுப்புகள் கிடைப்பது, பெரிய பணம் பொருளாதாரத்தில் வெற்றியடைவது என அற்புதமான காலகமாக இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு பதவிகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்க்காத வெற்றிகள் கிடைக்கும்.
ஆரோக்கியம்
செவ்வாய், ராகு, குரு இணைவால் அசுரனைப் போல நம்முடைய வளர்ச்சி இருக்கும். 15 ஆம் தேதிக்குப் பிறகு விரையத்தில் சூரியன், புதன் அமருவது கால் பாதங்கள், நரம்புகள், தோலில் பிரச்சனைகளைக் கொடுக்கும். எலும்பு தேய்மானத்தால் பிரச்சனை, முதுகு வலி, இடுப்பு வலி போன்றவை ஏற்படும். வீட்டில் தங்க முடியாத அளவுக்கு அழுத்தம் ஏற்படும்.
வெளியூர் செல்லும் யோகம்
வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் வரும். இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெளியூரில் படிப்பதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். எந்த விஷயமாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. பணம் கொடுப்பதாக இருந்தால் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குப் பிறகு கொடுப்பது நல்லது.
வழிபாடு
பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. மகிழ்ச்சி ரீதியா 80 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 80 சதவீதமான நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும். நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு நல்ல மாற்றங்களையும், முன்னேற்றத்தையும் அள்ளிக் கொடுக்கும்
-
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications