Thulam Rasi Palan: பணக்கார யோகம் பெறும் துலாம் ராசி.. கோபத்தை தவிர்ப்பது நல்லது.. பேச்சில் கவனம்
செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கப் போகிறது. 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகத்தில் இருக்கும் 9 கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். இந்த செப்டம்பர் மாதத்தில் பல்வேறு கிரகங்களின் முக்கிய பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ராசிநாதன் 10, 11 ஆகிய இரண்டு இடத்தில் இருக்கிறார். மாத ஆரம்பத்தில் 10 ஆம் இடத்தில் இருக்கும் சுக்கிரன். அதற்குப் பின்னர் 11 ஆம் இடத்துக்கு வருவார். ராசியிலேயே செவ்வாய் வந்து குருவின் பார்வையில் அமர்கிறார். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் அனைத்தும் தீரும் சுப மாதமாக இருக்கும். காதலன், காதலி உறவுகள் சிறப்பாக இருக்கும்.
திடீர் அதிர்ஷ்டம்
சிலருக்கு புதிய காதல் பூக்கத் தொடங்கும். ஏற்கனவே இருக்கக்கூடிய காதலர்களுக்குத் திருமணம் நடக்கக்கூடிய யோக மாதமாக இருக்கும். ராசிநாதனும்,8 ஆம் அதிபதியுமான சுக்கிரன் லாபத்தில் இருக்கிறார். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உங்களைத் திக்குமுக்காடச் செய்யும். பங்குச் சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும். உதவி செய்பவர்கள் என நினைக்காதவர்கள் கூட உங்களுக்கு உதவி செய்வார்கள்.
பணத்தில் வெற்றி
எதிரிகள் என நினைத்தவர்கள் எல்லாம் நண்பர்களாக மாறுவார்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். இழந்த பணங்கள் அனைத்தும் உங்களுக்குத் திரும்ப கிடைக்கும். விட்டதைப் பிடிக்கும் யோகம் உள்ளது. பணம் திரும்ப கிடைக்க உதவிகரமான ஆட்கள் வந்து சேர்வார்கள். பண விஷயங்களில் உங்களுக்கு வெற்றியைத் தரும் மாதமாக இருக்கும்.
போட்டி விலகும்
போட்டிகள் அனைத்தும் விலகும். எதிரிகள், எதிர்ப்பு போன்ற எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். 12 ஆம் அதிபதி 15 ஆம் தேதிக்குப் பிறகு புதன் 12 ஆம் இடத்தில் உச்சமடைவதால் தூர தேசத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். பிற்பகுதி 15 நாட்கள் அதிகளவிலான பயணங்கள் இருக்கம். பயணத்தினால் நன்மைகள் கிடைக்கும்.
கவனம்
செவ்வாய் ராசியில் வந்து அமர்வதால் எரிச்சல், கோபம், பதற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. டக்கு டக்கென்று முடிவெடுத்து சிக்கலில் மாட்டிக் கொண்டு வெளியில் வரும் தன்மை உண்டாகும். கோபத்தால் ஏதாவது பேசி உறவுகள், நட்புகளிடம் விரிசல் வரும் தன்மை உள்ளது. இந்த விஷயங்களில் மட்டும் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. உடல் நலக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
-
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
விருச்சிக ராசிக்கு யோகத்தை தரும் உச்சகுரு.. இந்த ஜூனில் வரப்போகும் பெரிய முன்னேற்றம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு












Click it and Unblock the Notifications