ஏழுமலையானை தரிசிக்க காத்திருக்கும் பக்தர்கள்.. செப்டம்பரில் பிரம்மோற்சவம்.. தயாராகும் திருமலை
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலை மோதி வருகிறது. டோக்கன் இல்லாத ஸ்ரீவாரி சர்வ தரிசனம் செய்ய பக்தர்கள் 18 மணிநேரம் காத்துள்ளனர். சர்வ தரிசனத்துக்கான வைகுந்தம் காம்ப்பிளக்ஸின் 25 அறைகளிலும் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. செப்டம்பர் 18ஆம் தேதியன்று திருமலை மலையப்பசுவாமி கோவிலில் பிரம்மோற்சவம் ஆரம்பமாகிறது.
பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் போற்றப்படுவது திருமலை ஏழுமலையான் கோவில். திருப்பதி சென்று வந்தால் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் ஏராளமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர் பக்தர்கள். தினசரியும் பக்தர்கள் வருகை தந்தாலும் பிரம்மோற்சவம், தெப்ப உற்சவ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலை மோதும்.

நடப்பாண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதம் 18ஆம் தேதியிலிருந்து 26ஆம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம் நடைபெற உள்ளது. இதனையடுத்து அக்டோபர் மாதம் 15ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் நவராத்திரி பிரம்மோற்சவம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி வருடாந்திர பிரமோற்சவ கொடியேற்ற விழா நடக்கிறது. அதே நாளில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார். 22ஆம் தேதி கருட சேவை 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் 5 லட்சம் பக்தர்கள் வரை திருப்பதிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம். தங்க தேரோட்டம் 25ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 27 ஆம் தேதி முதல் பவித்ர பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஏழுமலையான் கோவிலில் பூஜை பணியாளர்கள் மற்றும் தரிசனத்துக்கு வரும் பக்தர்களால் ஏற்படும் தோஷங்களுக்கு நிவர்த்தி செய்யும் வகையில் ஆண்டுதோறும் பவித்ர உற்சவம் 3 நாட்கள் நடத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இந்த ஆண்டு பவித்ர உற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இரண்டாம் நாளான நேற்று பவித்ர மாலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் அந்த பவித்திர மாலைகள் மூலவர் மற்றும் உற்சவருக்கு அணிவிக்கப்பட்டன.
மூன்றாம் நாளான இன்று யாகசாலை பூஜையுடன் பவித்ர உற்சவம் நிறைவடைய உள்ளது. பவித்ர பூஜைகளுக்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கல்யாண உற்சவம் ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவை நேற்று ரத்து செய்யப்பட்டன. இன்றுடன் பவித்ர பூஜைகள் நிறைவடைவதால் ஆர்ஜித சேவை பூஜைகள் நாளை முதல் மீண்டும் தொடங்க உள்ளன. யானை தரிசிக்க காத்திருக்கு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலை மோதி வருகிறது. டோக்கன் இல்லாத ஸ்ரீவாரி சர்வ தரிசனம் செய்ய பக்தர்கள் 18 மணிநேரம் காத்துள்ளனர். சர்வ தரிசனத்துக்கான வைகுந்தம் காம்ப்பிளக்ஸின் 25 அறைகளும் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
செப்டம்பர் மாதத்தில் 6ஆம் தேதி ஸ்ரீ ஜெயந்தி விழா கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 10 சர்வ ஏகாதசி. செப்டம்பர் 17 பலராம ஜெயந்தி, வராஹ ஜெயந்தி.
செப்டம்பர் 18 திருமலையப்பசுவாமி கோவில் பிரம்மோற்சவம் ஆரம்பம். விநாயகர் சதுர்த்தி. செப்டம்பர் 22 கருட வாகன சேவை. செப்டம்பர் 6 தங்க ரத உற்சவம். செப்டம்பர் 25 திருத்தேரோட்டம்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications