துலாம் ராசிக்கு பொற்காலம்.. தொட்டதெல்லாம் ஜெயம்.. ஆபிஸ் விஷயத்தில் கவனம் கவனம்
வைகாசி மாத ராசி பலன்: சித்திரை மாதம் நிறைவடைந்து வைகாசி மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்றால் சூரியன் மேஷத்தில் இருக்கும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷபத்திற்கு வரும். 15.5.2025 முதல் 14.06.2025 வரையிலான வைகாசி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த இடமாற்றம் ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

தமிழ்ப் புத்தாண்டின் முதல் மாதமான சித்திரை மாதம் நிறைவடைந்து வைகாசி மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்றால் சூரியன் மேஷத்தில் இருக்கும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷபத்திற்கு வரும். 15.5.2025 முதல் 14.06.2025 வரையிலான வைகாசி மாதத்தில் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
அந்த வகையில், இந்த வைகாசி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் தலைவலி, ஒற்றைத் தலைவலி, நரம்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பெருமாள், தாயார் வழிபாடு அனுகூலத்தை ஏற்படுத்தி தரும். பெரிய முயற்சிகள் அனைத்தும் லாபத்தையும், சந்தோஷத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும், புதன்கிழமையில் மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் உணவு தானம் கொடுத்து வந்தால், குடும்பத்தில் சுபகாரியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடப்பது கண்கூடாகப் பார்க்கலாம்.
உள்ளூர் பயணம், தொலைதூரப் பயணம், குடும்பத்தாருடன் பயணம் ஏற்றத்தையும், அனுகூலத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும். இழுபறியாக இருந்து வந்த நிலைமை படிப்படியாக மாறுவது கண்கூடாகப் பார்க்கலாம். எதிர்பார்த்த நல்ல விஷயங்களில் ஜெயிக்கக்கூடிய அதிஅற்புதமான காலகட்டமாக இருக்கும். தொடர்ச்சியாக இருந்த மனத் தாங்கல் படிப்படியாகத் தீருவதை கண்கூடாகப் பார்க்கலாம்.
துலாம் ராசிக்காரர்களுக்கு வாகன அமைப்பில், சுப காரிய அமைப்புகளில் அனுகூலம் காணப்பட்டாலும் சூரியன் 8 ஆம் இடத்தில் இருப்பதால் உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் அவசர அவசரமாக முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. அரசு உத்தியோகத்தில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். யாரோ ஒருவர் செய்த தவறுக்கு நீங்கள் பதில் சொல்லக்கூடிய சூழ்நிலையும், மன அழுத்தமும் ஏற்பட்டுவிடும்.
எனவே, உத்தியோகத்தில், பயணத்தில் இருப்பவர்கள், மேலதிகாரிகள் விஷயத்தில் இருப்பவர்கள், அரசுத் துறையினர், அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வாகனத்தில் வித்தைகள் காட்டுவது, வேகத்தை தவிர்ப்பது நல்லது. பெரியோர்களின் தேக ஆரோக்கியத்தில் சிறிய பாதிப்பையும் அலட்சியப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.












Click it and Unblock the Notifications