வாஸ்து சாஸ்திரம்: வீடு, அலுவலகங்களில் எந்த திசையில் என்ன அறை கட்டலாம், என்ன பொருட்களை வைக்கலாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடு, அலுவலகம் அல்லது கட்டிடங்களை கட்டும் போது, வாஸ்து சாஸ்திரம் பார்ப்பது அவசியம். பலருக்கும் எந்த திசையில் எந்த பொருளை வைப்பது, அல்லது எந்த திசையில், சமையலறை அமைப்பது அல்லது குளியலறை எங்கு வைப்பது என்பது தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்காகத்தான் இந்த பதிவு.

வாஸ்து சாஸ்திரம் என்பது வெறும் திசை அடிப்படை மட்டும் இல்லை, ஒவ்வொரு திசையும் தனித்தனி கிரகங்களால் ஆளப்படுகிறது. ஜோதிடமும் வாஸ்துவும் இணைந்துதான் செயல்படுகிறது என்பதுதான் இதன் அர்த்தம்.

vastu vastu shastra

வாஸ்து விதிகளைப் பின்பற்றியவர்கள் நம்பிக்கையுடன், நேர்மறையான பலன்களை அந்த கட்டிடத்தில் பெறலாம். வீடு அல்லது அலுவலகம் கட்டும்போது, நவக்கிரகங்களின் ஆதிக்கத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். பஞ்சபூதங்கள், அஷ்ட திசைகள், நவக்கிரகங்கள் ஆகியவை வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை கூறுகள் ஆகும்.

திசைகளின் ஆட்சி மற்றும் அதற்கேற்ற கிரகங்கள்:

  1. கிழக்கு – சூரியன்: சூரியன் கிழக்கு திசையில் ஆட்சி செய்கிறார். ஆரோக்கியம், செல்வம், மற்றும் வளர்ச்சிக்கான அடிப்படை என சூரியன் கருதப்படுகிறார். கிழக்கு திசையில் கனமான பொருட்களை வைக்க வேண்டாம், இது வாஸ்து குறைபாடுகளை ஏற்படுத்தும். லகுவான பொருட்களை கிழக்கு பக்கத்திலுள்ள அறையில் வையுங்கள்.

  2. தெற்கு – செவ்வாய்: தெற்கு திசையை செவ்வாய் ஆளுகிறார். செவ்வாய் தைரியம், ஆற்றல், மற்றும் செல்வத்தைக் குறிக்கிறது. இந்த திசையில் படுக்கையறை அல்லது ஸ்டோர் ரூம் அமைப்பது நல்லது. உங்களது தாம்பத்திய வாழ்க்கை செழித்து ஓங்கும்.

  3. வடமேற்கு – சந்திரன்: அமைதியும் செல்வமும் வழங்குபவர் சந்திரன், வடமேற்கு திசையின் அதிபதி. இந்த திசையில் விருந்தினர் அறை அல்லது பெண்கள் அறை அமைப்பது சிறந்ததாக இருக்கும். வரவேற்பறையில் இருக்கையை இந்த திசையில் போட்டுக்கொண்டு அமரலாம். இங்கிருந்தபடி டிவி பார்ப்பது போன்ற பொழுதுபோக்குகளிலும் ஈடுபடலாம்.

  4. வடக்கு – புதன்: செல்வத்திற்கும் வருமானத்திற்கும் அடையாளமான புதன், வடக்கு திசையின் ஆதிக்கக் கிரகம். இந்த திசையில் மதிப்புமிக்க பொருட்களை வைத்திருப்பது வசதி சேர்க்கும். உதாரணத்திற்கு பணம், நகை போன்ற பொருட்களை பீரோவில் வைத்து வடக்குதிசையில் வைக்கலாம்.

  5. வடகிழக்கு – வியாழன்: பிரஹஸ்பதி (வியாழன்) வடகிழக்கு மூலையில் ஆட்சி செய்கிறார். பூஜை அறையை இந்த திசையில் அமைத்தால் வாழ்வில் நிம்மதி, மகிழ்ச்சி உருவாகும். அதற்கு வாய்ப்பு இல்லாவிட்டால் துளசி செடியை அந்த திசையில் வைக்கலாம். துளசிக்கு பூஜை செய்து வரலாம்.

  6. தென்கிழக்கு – சுக்கிரன்: அழகு மற்றும் மகிழ்ச்சியை குறிக்கும் சுக்கிரன் தென்கிழக்கு திசையில் ஆட்சி செய்கிறார். சமையலறை அல்லது மின் சாதனங்களை இந்த திசையில் அமைப்பது நல்லது.

  7. மேற்கு – சனி: கர்ம பலனை அளிக்கும் சனி மேற்கு திசையின் அதிபதி. இந்த திசையில் படுக்கையறை அல்லது நூலகம் அமைப்பது சிறப்பானது. தெற்கு பக்கம் படுக்கையறையை அமைத்து, அதற்குள் மேற்கு கிழக்காக படுக்கையை அமைத்துக்கொண்டு, கிழக்கு திசை நோக்கி கால் வைக்கும் வகையில், தூங்கிப் பாருங்கள், சிறப்பாக இருக்கும்.

  8. தென்மேற்கு – ராகு: தென்மேற்கு திசையை ராகு ஆளுகிறார். வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்த திசையில் குளியலறை அல்லது அலுவலகம் அமைப்பது சரியானதாக இருக்கும்.

இப்படியாக 8 திசைகளுக்கும் ஏற்ற ராசி கிரகங்களை அறிந்துகொண்டு நீங்கள் சிறப்பாக வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். வாழ்த்துக்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+