Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒன்பது கோளும் ஒன்றாய் இணைந்த பிள்ளையார்...விநாயகரை வணங்கினால் தோஷங்கள் நீங்கும்

பிள்ளையார், விநாயகர், கணபதி, கணேஷன் என பல்வேறு பெயர்களை வைத்து வணங்கக் கூடிய முதல் கடவுளாக பார்க்கப்படுபவர் விநாயகப் பெருமான். ஒன்பது கோளும் ஒன்றாய் இணைந்த பிள்ளையாரை வணங்கினால் நவகிரக தோஷங்கள் நீங்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'வி' என்பதற்கு 'இல்லை' என்று அர்த்தம். நாயகன் என்றால் தலைவன் விநாயகர் என்பது, இவருக்கு மேல் பெரிய தலைவர் எவருமில்லை என்பது முழுப் பொருளாகும். கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும்போது 'ஓம் அநீஸ்வராய நம' என்றும் கூறுவார்கள். அநீஸ்வராய என்பதற்கு தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லை என்பது பொருளாகும். ஒன்பது கோளும் ஒன்றாய் இணைந்த பிள்ளையாரை வணங்கினால் நவகிரக தோஷங்கள் நீங்கும்.

விநாயகரை முதல் கடவுளாக போற்றப்படுவதற்கு உதாரணமாக பல காரணங்கள் கூறப்படுகிறது. ஞானப்பழத்தை அடைய தாய், தந்தையை சுற்றி வந்து ஆன்மீக தத்துவத்தை முதன் முதலில் எடுத்துரைத்தவர் கணபதி. பொருள் மற்றும் ஆன்மீக தத்துவங்களின் இணைப்பாக விளங்கும் நம் உடலின் மூலாதார சக்கரத்தை கணபதி ஆளுவதாக அவர்கள் நம்புகிறார்கள்.

ஓம் என்பதை பிரணவ மந்திரம் என்று இந்துகள் சொல்லுகிறார்கள். பிரணவ மந்திரமே உலகம் தோன்றுவதற்கு முன் எங்கும் நிரம்பியிருந்ததாக கருதுகிறார்கள். அ + உ+ ம் என்பதன் இணைப்பே ஓம் ஆகும். அ என்பது முருகனையும், உ என்பது பிள்ளையாரையும், ம் என்பது சிவசக்தியை குறிப்பதாகும்.

பிள்ளையார் மகிமை

பிள்ளையார் மகிமை

பிள்ளையாரின் யானைமுகம், துதிக்கை, கண்களையும் நோக்கினால் ஓம் என்ற பிரணவம் தெரியும். கயிலையிலும் தேவலோகத்திலும் அழகே உருவாக காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவரும் விதமாக நடமாடியதால் தேவர்களும் முனிவர்களும், யார் இந்த பிள்ளை? இந்த பிள்ளை யார்? என்று கேட்டுக்கொண்டனர். அதுவே நாளடைவில் பெயராக மலர்ந்தது. பிள்ளையார் மிகவும் எளிமையானவர். இவருக்கு கோபுரமோ கொடிமரமோ மாட மண்டபமோ மதிற்சுவரோ தேவையில்லை. நம் உள்ளத்தில் ஓர் இடமளித்தால் போதும்.

முதல்வன் விநாயகன்

முதல்வன் விநாயகன்

தாய், தந்தையின் பேச்சைக் கேட்டு மதித்து செயல்பட்ட பிள்ளை. அம்மா அப்பாதான் உலகம் என்று உணர வைத்தவர் என்பதால் அவருக்கு பிள்ளையார் என பெயர் வந்தது. எல்லா கடவுளுக்கும் முதன்மையானவராக இருப்பதால், கோயிலில் முதல் ஆளாக அமர்ந்திருப்பவரும், முதலாவதாக வணங்கக் கூடியவராக பிள்ளையார் உள்ளார். அதுமட்டுமில்லாமல் எளிமையாக அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டாலே நமக்கு வேண்டிய வரங்களை வாரி வழங்கக் கூடிய கடவுளாக பிள்ளையார் உள்ளார்.

காரிய வெற்றி தரும் பிள்ளையார்

காரிய வெற்றி தரும் பிள்ளையார்

அவர் களிமண், கல்லால் செய்யப்பட்ட விநாயகர் என எப்படி வழிபட்டாளும் அருள்பவர். அவ்வளவு ஏன் பசு மாட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்தால் கோடி புண்ணியம் என்பவர். நாம் மனதார வழிபட்டாலே அனைத்து வித நலன்களை அள்ளித்தருவார். மண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் ஆரோக்கிய வாழ்வு அருள்வார். கருங்கல்லினால் ஆன விநாயகரை எந்த காரியமும் வெற்றியில் முடிய அருள்வார்.

பிள்ளை பேறு தரும் பிள்ளையார்

பிள்ளை பேறு தரும் பிள்ளையார்

விபூதியால் செய்யப்பட்ட கணபதியை வழிபட்டால் வெப்பத்தால் ஏற்படும் நோய்களை தீர்க்கக் கூடியவர். குங்குமத்தால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் செவ்வாய் தோஷம் தீரும். சந்தனத்தால் செய்யப்பட்ட பிள்ளையாரை வழிபட்டால் நல்ல பிள்ளைபேறு கிட்டும்.

இல்லத்தில் சந்தோஷம்

இல்லத்தில் சந்தோஷம்

உப்பினால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் பகைவர்களின் தொல்லைகளிலிருந்து விடுபடலாம். வெல்லத்தினால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் உடலில் உள்ள கொப்பளங்கள் மறையும். சர்க்கரையால் செய்யப்பட்ட கணபதியை வழிபட்டால் வீட்டில் இனிமையான சந்தோஷ சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும்.

பில்லி சூனியம் அகலும்

பில்லி சூனியம் அகலும்

மஞ்சளால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் சகல செளபாக்கியங்களையும் அருள்வார். பசுவின் சாணத்தல் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கி, வீட்டில் விரைவில் சுப நிகழ்ச்சி நடக்கும். வெள்ளெருக்கில் செய்யப்பட்ட பிள்ளையாரை வழிபட்டால் பில்லி சூனியம் அகலும். வாழைப்பழத்தால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் கணவன் - மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நம் விருப்பத்திற்கு ஏற்றார் போல் விநாயகரை வழிபடலாம்.

விநாயகர் சதுர்த்தி தினமான இன்று விநாயகரை விரதம் இருந்து வணங்கலாம்.

வக்ர துண்டாய தீமஹி

வக்ர துண்டாய தீமஹி

தந்நோ தந்திஹி ப்ரசோதயாத்' என்று விநாயகருக்கான காயத்ரி மந்திரம் சொல்லி வழிபட்டால் நல்லதே நடக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+