விருச்சிகம் வீடு, மனை வாங்கும்போது எச்சரிக்கை.. பங்குனியில் கிடைக்கும் பலன்களின் முழு விவரம் இதோ
பங்குனி மாத ராசி பலன்: மாசி மாதம் முடிவடிடைந்து பங்குனி மாதம் தொடங்குகிறது. இந்த பங்குனி மாதத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பங்குனி மாதம் பிறந்தாச்சு. மாதங்களில் அற்புதமான மாதமாக பங்குனி மாதம் குறிப்பிடப்படுகிறது. அதாவது, சூரிய பகவான் தனது குருநாதர், பிரகஸ்பதியாகிய, குருவாகிய மீனத்தில் வந்து அமர்ந்து இதுவரை தான் கற்ற பாடங்களை எல்லாம் தனது குருநாதரிடம் சொல்லி மதிப்பெண்கள் பெற்று தேர்விலே தேர்ச்சி அடையக்கூடிய மாதம் இந்த மாதம் பங்குனி மாதம்.

அதனால் தான், பரவலாக தேர்வு நடைபெறும் மாதமாக இயற்கையாகவே இந்த மாதம் இருக்கிறது. இதுவரை சம்பாதித்த சம்பாத்தியம், அதற்கான வருமான வரிகள், செலவுகள், சேமிப்பு என்ன என்று கணக்குப் பார்க்கும் மாதமாக இந்தப் பங்குனி மாதம் அமைந்திருக்கிறது. 12 ஆவது மாதமாகிய பங்குனி மாதத்தில் கடைசி நட்சத்திரமாக வரக்கூடிய பங்குனி உத்திரப் பெருவிழா இந்த சிறப்பு மாதத்தில் தான் கொண்டாடப்படும்.
விஷேசமான மாதமாகிய இந்த பங்குனி மாதத்தில்தான் ராமநவமி கொண்டாடப்படும். வழிபாட்டு மாதம், வைபவ மாதம், கல்யாண மாதம், தெய்வ திருமணங்கள் கூடிவரும் மாதம், தெய்வ மாதம் என்று அழைக்கப்படுகிறது பங்குனி மாதம். ராமர் சீதா தேவியை மணந்த மாதம், இலைகள் உதிர்ந்து பச்சை இலைகள் துளிர்க்கும் மாதம், ஸ்ரீ தேவேந்திரன் இந்திராணியை மணந்து கொண்ட மாதம், சந்திரன் 27 நட்சத்திரங்களை மணந்து கொண்ட மாதம், திருமாலின் திருமார்பில் ஸ்ரீ மகாலட்சுமி இடம்பிடித்த அற்புதமான மாதாக இந்த பங்குனி மாதம் திகழ்கிறது.
இந்த பங்குனி மாதத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு சுக்கிர பகவான் ஆதரவாக இருக்கிறார். அதனால், அடிமனதில் இருந்து வந்த சிறிய சிறிய ஆசைகள் அனைத்தும் நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகமாகும். புறநகர் பகுதியில் வாங்கி போட்டிருந்த இடத்தில் வீடு கட்டுவதற்கான முன் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
பூர்வீக சொத்து விவகாரங்களில் சுமூகமாக முடிவுகள் வரும். 4 ஆம் இடம் சுக ஸ்தானத்தில் செவ்வாயும், சனி பகவானும் உட்கார்ந்திருப்பதால் இந்த மாதம் முழுவதும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. தாயாருக்கு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். நெருங்கிய உறவினர்கள் ஒரு சிலர் உங்களை சரியாகப் புரிந்து கொள்ளாமல் உங்களை விட்டுப் பிரிந்து செல்வதற்கான வாய்ப்புள்ளது.
சகோதர வகையில் சிறிய சிறிய செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். வீடு மனை வாங்கும்போது தாய் பத்திரத்தை சரிபார்த்துக் கொண்டு வாங்குவது நல்லது. 5 ஆவது வீட்டில் சூரியன் வந்து உட்கார்ந்திருப்பதால் பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். அவர்களுடைய நட்பு வட்டாரத்தில் கண்காணிப்பது நல்லது. பிள்ளைகளின் பிடிவாதம் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதற்கான வாய்ப்புள்ளது.
வியாபாரத்தில் இந்த மாதம் முழுக்க நல்ல லாபத்தை கொடுக்கும். உத்தியோகத்திலும் உங்களை கை தான் ஓங்கியிருக்கும். இந்த மாதம் முழுவதும் நீங்கள் ஜெயித்து காட்ட எலுமிச்சை பழம் தானமாக அளிக்கலாம். காது கேளாதவர்களுக்கு உதவுவது நல்ல பலன்களைத் தரும். ஸ்ரீ விநாயகப் பெருமானை வழிபடுவது அமோகமான பலன்களைத் தரும்.












Click it and Unblock the Notifications