Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு "காசு மேல காசு வந்து".. அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம்
வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மேலதிகாரிகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வண்டி வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனத்துடன் செல்வது நல்லது. எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஆவணங்களில் கையெழுத்து போட்டாலும் படித்துப் பார்த்துவிட்டு போடுவது நல்லது. பெற்றோர், பெரியோர் விஷயங்கள், உறவினர்களிடம், ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.
கவனம்
குடும்பத்தில், பூர்வீகத்தில் என அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை. நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், கண், முதுகு சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த அனைத்து விஷயங்களிலும் ஜெயிக்கும் யோகம் உண்டாகும். புதிய ஏற்றங்கள் கிடைக்கும் அற்புதமான காலகட்டம்.
தொழில் மாற்றம்
புதிய தொழில் மாற்றங்கள் கிடைக்கும். கெளரவங்கள் ஏற்படும். படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினருக்கு எல்லாம் தனிப்பட்ட தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். எல்லா விதமான சுப காரியங்களும் அடுத்தடுத்து நிவர்த்தியாகும். உத்தியோகத்தில் பெரியளவுக்கு அனுகூலங்கள் காணப்படும். இழுபறியாக இருந்து விஷயங்கள் எல்லாம் மாறி இனி அடுத்தடுத்து நடக்கும் யோகம் ஏற்படும்.
கஷ்டங்கள் தீரும்
வியாபாரத்தில் இருந்து வந்த கஷ்டங்கள், பாதிப்புகள் எல்லாம் நீங்கும் யோகத்தைப் பெறுவீர்கள். கணக்கு வழக்குகள், ஆவணங்கள், மருந்து, மாத்திரைகளை சரியாக வைத்துக் கொள்வது நல்லது. ஆவணங்கள் விஷயங்களில் படித்துப் பார்த்து வேலைகளைச் செய்வது நல்லது. யோகங்களை அதிகளவில் பெறுவீர்கள். பிறர் குடும்ப விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
முன்னேற்றம்
சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. நரசிம்மர் வழிபாடு, அனுமன் வழிபாடு, விநாயகர் வழிபாடு நிம்மதியைத் தரும். நிம்மதியான தூக்கத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.












Click it and Unblock the Notifications