விருச்சிக ராசிக்கு மீண்டும் மீண்டுமா.. வெற்றியும் இருக்கும்.. பிரச்சனைகளும் சேர்ந்தே வரும்

Subscribe to Oneindia Tamil

Guru rahu ketu peyarchi: 2025 ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களான சனி, குரு, ராகு கேது பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ராகு மே மாதம் 18 ஆம் தேதியில் கும்பத்தில் இருந்து மீனத்துக்குப் பெயர்ச்சியாகி உள்ளார். கேது பகவான் அதே நாளில் கன்னியில் இருந்து சிம்மத்துக்குப் பெயர்ச்சியாகிறார். மே 14 ஆம் தேதி குரு பெயர்ச்சியாகி உள்ளார். குரு அதிசாரப் பெயர்ச்சியாகவுள்ளார். அக்டோபர் மாதம் கடகத்துக்குச் சென்றுவிட்டு டிசம்பரில் மீண்டும் மிதுனத்துக்கு வருகிறார்.

viruchigam-scorpio-rasi-people-get-lots-of-good-benefits-during-guru-peyarchi-and-rahu-ketu-peyarc

ராகு அகோர காரகர் என்றும், கேது ஞானக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். தன் நிலையில் இருந்து மாறுபட்ட நிலையில் இருப்பது தான் ராகு திசை. கோபத்தால் மற்றவர்களை அடக்கும் முறையை கையாளுவார்கள். கேது என்பவர் அரசனையும் ஆண்டியாக்கும் தன்மையைக் கொண்டவர். அந்த வகையில், குரு ராகு கேதுவால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசிக்காரர்கள் எந்தவொரு விஷயத்தையும் பொறுமையாக மனதில் வைத்து வெச்சு செய்வார்கள். இந்த காலகட்டத்தில் யாரைப் பார்த்தாலும் அவமானப்படுத்துவது போலவும், மரியாதை இல்லாமல் பேசியது போலவும் தோன்றும். யாராவது அட்வைஸ் கொடுத்தால் கூட உங்களுக்கு எரிச்சல் உண்டாகும் காலகட்டமாக இருக்கும்.

ஆரோக்கியம்

கால்சியம் குறைபாடு, கால்சியம் அதிகளவில் இருப்பது, சதை வளர்ச்சி போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தொழிலில் நிறைய இடர்பாடுகளைச் சந்திக்கும் காலகட்டமாக இருக்கும். பண வரவு இருக்கும். ஆனால் தேவையில்லாத யோசனைகளால் மன அழுத்தம் உண்டாகும். சனி பகவான் உங்களிடத்தில் இருந்து போய், ராகு வந்து அமர்ந்திருக்கிறார்.

கோபத்தை தவிர்த்தல் நல்லது

தாய், மாமனார், மாமியாரிடம் கோபமாகப் பேசுவீர்கள். இதுபோன்ற டென்சன்கள் தோன்றும். கோப தாபங்களைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். அரசியலில் இருப்பவர்கள் முடிவுகளை எடுப்பதில் மிகவும் சிரமப்படுவீர்கள். என்னுடைய இஷ்டத்துக்கு முடிவுகளை எடுக்க முடியவில்லை என்ற சூழல் ஏற்படும். முடிவுகளை எடுப்பதில் மிகுந்த தடைகளைச் சந்திப்பீர்கள்.

வெளியூர் செல்லும் யோகம்

குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சியில் 40 சதவீதம் நன்மையும், 60 சதவீதம் சுமாரான காலகட்டமாகவும் இருக்கும். பணத்திற்குப் பஞ்சமே இருக்காது. வெளநாடு, வெளியூர் செல்லும் யோகம் உண்டாகும். நீங்கள் நினைத்தது நடக்கவில்லை என்ற பெரிய வருத்தம் இருக்கும். தாய் அல்லது மாமனார், மாமியர், இருக்கக்கூடி வீடு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

பணவரவு

பண வரவு அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை உண்டாகும். தடைகள் வந்தாலும் எடுத்த காரியங்களில் வெற்றி பெறக்கூடிய அதிர்ஷ்டம் உண்டாகும். வீடு, நிலம், வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் வரும். சுப விரையங்களைச் செய்து மகிழ்வீர்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்

மலைக் கோயிலில் உள்ள சுவாமிகளை வழிபடுவது நல்ல பலன்களை அள்ளித் தரும். முருகன் வழிபாடு உங்களுக்கு வரும் பாதிப்புகளைத் தடுத்து வெற்றியைத் தரக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+