தனுசு, மகரம் ராசியினருக்கு தொட்டதெல்லாம் வெற்றி.. உங்க காட்டில் பண மழை கொட்டும்
வார ராசி பலன்: பங்குனி மாதத்தில் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும், எந்த தெய்வங்களை வழிபட வேண்டும், பரிகாரங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
வார ராசி பலன்
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தை மாற்றுவதும், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதும் வழக்கம். அதன்படி கடந்த மார்ச் 29 ஆம் தேதி ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. அடுத்தடுத்து ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த வாரத்துக்கு பிறகு தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த வாரத்துடன் தமிழ் மாதமான பங்குனி மாதம் நிறைவடைந்து சித்திரை மாதம் பிறக்கவுள்ளது. இது அனைவருக்கும் நல்ல மாற்றத்தை கொடுக்கும். இந்நிலையில் 07.04.2025 - 13.04.2025 தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகவும், தெளிவாகவும் பார்க்கலாம்.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு தாய் வழி, தந்தை வழி உறவு மேம்படும். பூர்வ புண்ணியத்தின் அனுகூலம் உண்டாகும். தெய்வ வழிபாடுகள், விடுபட்ட குல தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். ஏற்றமும், அனுகூலமும் ஏற்படும் நேரம். தொழில் ரீதியாக இருந்த பாதிப்புகள் சரியாகும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். புதிய முதலீடுகள் அனுகூலத்தை தரும்.
எச்சரிக்கை
துணையிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. ஆசை, சந்தோஷம் உருவாகும் காலகட்டம். அதி அற்புதமான அமைப்பாக இருக்கும். சளி, காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத அலர்ஜிகள உண்டாகும். உணவுப் பழக்கங்களில் கவனமாக இருக்க வேண்டும். பண வரவுக்கு உண்டான அனுகூலமான நேரமாக இருக்கும்.
பண வரவு அதிகரிக்கும்
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு, முதலீடுகளுக்கான அனுகூலம் கிடைக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். கணவனாக இருக்கக்கூடிய தனசு ராசிக்காரர்களுக்கு மனைவியாலும், மனைவிகளுக்கு கணவராலும் பெரிய அனுகூலம், சந்தோசம் ஏற்படும். ஏற்றம், புதுப் பொறுப்புகள் உண்டாகும். வண்டி வாகன மாற்றங்கள் செய்வீர்கள். புதிய இடம் வாங்குவதற்கான காலகட்டமாக இருக்கும். ஆச்சரியத்தக்க மாற்றம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் காலகட்டம். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். பெருமாள் வழிபாடு ஏற்றத்தை தரும்
மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு ஏற்றம், அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றியைப் பெறுவீர்கள். கழுத்து, காது, மூக்கு, தொண்டை விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. தெய்வ வழிபாடு, சிவன் வழிபாடு நல்ல பலன்களைத் தரும். எல்லா விஷயங்களிலும் ஏற்றம் உண்டாகும். தொழிலில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, முதலீடு விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்டம் கொட்டும்
பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. டிரேடிங்கில் லாபம் கிடைக்கும். அரசு கெளரவம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்சனை சரியாகும். அரசியல்வாதிகளுக்கு ஏற்றம் உண்டாகும். மேலதிகாரிகளின் ஆதாயம் கிடைக்கும். உள்ளூர் பயணம், வெளியூர் பயணத்திற்கான அதிர்ஷ்டம் உண்டு. கடல் பயணம் மேற்கொள்வீர்கள்.
சிக்கல்கள் தீரும்
தொழில் ரீதியாக அனுகூலமான மாற்றங்கள் ஏற்படும். தனிப்பட்ட தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். பெற்றோர், பெரியோர்களிடம் இருந்த மனத் தாங்கல்கள் தீரும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். தனிப்பட்ட வகையில் மதிப்பு மரியாதை செல்வாக்கு கூடும். யோக பலன், நம்பிக்கையையும் பெறும் காலகட்டமாக இருக்கும்.
தைரியம், தன்னம்பிக்கை
பிள்ளைகளின் கோபதாபங்களுக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. பிள்ளைகள் படிப்பு, உத்தியோகம், வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். உறவினர்களிடம் கோபப்படாமல் இருக்க வேண்டும். வண்டி வாகனம் வாங்குவீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். தைரியமாக ரிஸ்க் எடுக்கும் காலகட்டம். சினிமா துறை, கலைத் துறையினருக்கு அதிர்ஷ்டம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications